தற்காலிகச் சேமிப்பையும் குக்கீகளையும் அழித்தல்

Chrome போன்ற உலாவியைப் பயன்படுத்தும்போது, அந்த உலாவி இணையதளங்களில் இருந்து சில தகவல்களைத் தனது தற்காலிகச் சேமிப்பிலும் குக்கீகளிலும் சேமிக்கிறது. இவற்றை அழிப்பதன் மூலம் தளங்களில் உள்ள ஏற்றுதல் அல்லது வடிவமைப்புச் சிக்கல்கள் போன்றவற்றைச் சரிசெய்யலாம்.

Chrome ஆப்ஸில்

  1. Android சாதனத்தில் Chrome உலாவியை Chrome திறக்கவும்.
  2. மூன்று புள்ளி மெனுவை மேலும் தட்டி அதன் பிறகு உலாவிய தரவை அழி என்பதைத் தட்டவும்.
    • திறந்துள்ள பக்கங்கள் உட்பட இதுவரை இணையத்தில் பார்த்தவற்றை நீக்க, கால அளவைத் தேர்வுசெய்து, தரவை அழி என்பதைத் தட்டவும். இயல்பான கால அளவு 15 நிமிடங்கள் ஆகும்.
    • மேலும் குறிப்பான தரவு வகைகளை நீக்கத் தேர்வுசெய்வதற்கு, மேலும் விருப்பங்கள் என்பதைத் தட்டவும். நீக்க விரும்பும் உலாவிய தரவின் வகைகளைத் தேர்ந்தெடுத்து, தரவை அழி என்பதைத் தட்டவும்.

Chromeமில் கூடுதல் குக்கீ அமைப்புகளை எப்படி மாற்றுவது எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

பிற உலாவி ஆப்ஸில்

Firefox அல்லது வேறொரு உலாவியை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் எனில் வழிமுறைகளுக்கு அதன் உதவித் தளத்தைப் பார்க்கவும்.

இந்தத் தகவலை அழித்ததும் நடப்பவை

தற்காலிகச் சேமிப்பையும் குக்கீகளையும் அழித்த பிறகு:

  • தளங்களில் சில அமைப்புகள் நீக்கப்படும். உதாரணமாக, நீங்கள் ஏற்கெனவே உள்நுழைந்திருந்தாலும் மீண்டும் உள்நுழைய வேண்டியிருக்கும்.
  • உள்ளடக்கத்தை (எ.கா. படங்கள்) மீண்டும் ஏற்ற வேண்டிய காரணத்தால் சில தளங்கள் மெதுவாகச் செயல்படலாம்.
  • நீங்கள் Chromeமில் உள்நுழைந்திருந்தால் google.com, youtube.com போன்ற Googleளின் இணையதளங்களிலும் உள்நுழைந்த நிலையில் இருப்பீர்கள்.

தற்காலிகச் சேமிப்பும் குக்கீகளும் எப்படிச் செயல்படுகின்றன?

  • குக்கீகள் என்பவை நீங்கள் பார்வையிடும் தளங்களால் உருவாக்கப்படும் ஃபைல்கள் ஆகும். உலாவிய தரவைச் சேமிப்பதன் மூலம் அவை உங்கள் ஆன்லைன் அனுபவத்தை எளிதாக்குகின்றன.
  • அடுத்த முறை நீங்கள் அதே தளத்திற்குச் செல்லும்போது பக்கங்களை விரைவாகத் திறக்க உதவும் வகையில் பக்கத்தின் சில பகுதிகளை (படங்கள் போன்றவை) தற்காலிகச் சேமிப்பு நினைவில் வைத்திருக்கும்.
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16427814493493034222
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false