வலிமையான கடவுச்சொல்லையும் மிகவும் பாதுகாப்பான கணக்கையும் உருவாக்குதல்

பாதுகாப்பான கடவுச்சொல்லும் புதுப்பிக்கப்பட்ட மீட்புத் தகவலும் Google கணக்கைப் பாதுகாக்க உதவும். உங்கள் கடவுச்சொல் கணிக்க முடியாத வகையிலும் உங்கள் பிறந்தநாள் அல்லது மொபைல் எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் இல்லாமலும் இருக்க வேண்டும்.

படி 1: வலிமையான கடவுச்சொல்லை உருவாக்குதல்

வலிமையான கடவுச்சொல் இவற்றுக்கு உதவும்:

  • உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு
  • உங்கள் மின்னஞ்சல்கள், ஃபைல்கள், பிற உள்ளடக்கம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு
  • உங்கள் கணக்கைப் பிறர் பயன்படுத்தாமல் தடுப்பதற்கு

கடவுச்சொல் தேவைகளைப் பூர்த்திசெய்தல்

எண்கள், எழுத்துகள், குறியீடுகள் (ASCII தரநிலை எழுத்துகள் மட்டுமே) ஆகியவற்றின் கலவையில் உங்கள் கடவுச்சொல் இருக்கலாம். உச்சரிப்புகளும் உச்சரிப்பு எழுத்துகளும் ஆதரிக்கப்படுவதில்லை.

இதுபோன்ற கடவுச்சொல்லைப் பயன்படுத்த முடியாது:

  • வலுவற்ற கடவுச்சொல். எடுத்துக்காட்டு: "password123"
  • உங்கள் கணக்கில் நீங்கள் முன்பு பயன்படுத்திய கடவுச்சொல்
  • வெற்றிடத்துடன் தொடங்கும் அல்லது முடியும் கடவுச்சொல்

வலிமையான கடவுச்சொல்லுக்கான உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுங்கள்

வலிமையான கடவுச்சொல் என்பது உங்களுக்கு நினைவில் இருக்கக்கூடியதாகவும் பிறரால் யூகிக்க முடியாத அளவிலும் இருக்க வேண்டும். ஒரு வலிமையான கடவுச்சொல்லுக்கு என்ன தேவை என்பதைத் தெரிந்துகொண்டு உங்களுக்கான கடவுச்சொல்லை உருவாக்க இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்.

தனித்துவமான கடவுச்சொல்லை உருவாக்குங்கள்

மின்னஞ்சல், ஆன்லைன் பேங்கிங் போன்ற உங்களின் முக்கியமான கணக்குகள் ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு கடவுச்சொற்களைப் பயன்படுத்துங்கள்.

ஏற்கெனவே பயன்படுத்திய கடவுச்சொற்களை முக்கியமான கணக்குகளுக்குப் பயன்படுத்துவது பாதுகாப்பானதல்ல. உங்களின் ஏதேனும் ஒரு கணக்கிற்கான கடவுச்சொல்லை ஒருவர் தெரிந்துகொண்டாலே உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையைக்கூட அவரால் அணுக முடியும்.

உதவிக்குறிப்பு: பல கடவுச்சொற்களை நினைவில் வைத்துக்கொள்வதில் சிரமமாக இருந்தால் நீங்கள் சேமித்த கடவுச்சொற்களை நிர்வகிப்பதற்கான கருவியை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

எளிதாக மறக்காத நீண்ட கடவுச்சொற்களை உருவாக்குங்கள்

நீண்ட கடவுச்சொற்கள் வலிமையானவை. குறைந்தது 12 எழுத்துகள் இருக்கும்படி உங்கள் கடவுச்சொல்லை உருவாக்குங்கள். நீங்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய நீண்ட கடவுச்சொற்களை உருவாக்க இந்த உதவிக்குறிப்புகள் உதவும். இவற்றைப் பயன்படுத்திப் பாருங்கள்:

  • பாடல் அல்லது கவிதையின் வரி
  • திரைப்படம் அல்லது ஒருவர் உரையாற்றும்போது அதில் இடம்பெற்ற அர்த்தமுள்ள மேற்கோள்
  • புத்தகத்தில் உள்ள ஒரு வரி
  • உங்களுக்கு அர்த்தத்தை வழங்கும் வார்த்தைகளின் தொகுப்பு
  • சுருக்கம்: ஒரு வாக்கியத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்துகளை இணைத்து ஒரு கடவுச்சொல்லை உருவாக்குதல்

இவர்களால் யூகிக்கக்கூடிய கடவுச்சொற்களைத் தவிர்க்கவும்:

  • உங்களைத் தெரிந்தவர்கள்
  • உங்கள் தகவலை எளிதில் அணுகக்கூடியவர்கள் (உங்கள் சமூக வலைதளச் சுயவிவரம் போன்றவை)

தனிப்பட்ட தகவலையும் பொதுவான வார்த்தைகளையும் தவிர்த்தல்

தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்த வேண்டாம்

பிறருக்குத் தெரியக்கூடிய அல்லது பிறரால் எளிதில் கண்டறியக்கூடிய தகவலில் இருந்து கடவுச்சொற்களை உருவாக்குவதைத் தவிர்க்கவும். எடுத்துக்காட்டுகள்:

  • உங்கள் புனைப்பெயர் அல்லது முதலெழுத்துகள்
  • உங்கள் பிள்ளை அல்லது செல்லப்பிராணியின் பெயர்
  • முக்கியமான பிறந்த நாட்கள் அல்லது ஆண்டுகள்
  • உங்கள் தெருவின் பெயர்
  • உங்கள் முகவரியில் உள்ள எண்கள்
  • உங்கள் மொபைல் எண்

பொதுவான வார்த்தைகளையும் கீபோர்டு எழுத்துவரிசைகளையும் பயன்படுத்த வேண்டாம்

எளிதில் யூகிக்கக்கூடிய வார்த்தைகள், சொற்றொடர்கள், கீபோர்டு எழுத்துவரிசைகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். எடுத்துக்காட்டுகள்:

  • "password", "letmein" போன்ற எளிதில் கண்டறியக்கூடிய வார்த்தைகளும் சொற்றொடர்களும்
  • "abcd", "1234" போன்ற தொடர் எழுத்துகள் அல்லது எண்கள்
  • "qwerty", "qazwsx" போன்ற கீபோர்டு எழுத்துவரிசைகள்

கடவுச்சொற்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தல்

வலிமையான கடவுச்சொற்களை உருவாக்கிய பிறகு அதைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான படிகளை மேற்கொள்ளவும்.

எழுதிவைக்கப்பட்ட கடவுச்சொற்களை மறைத்தல்

கடவுச்சொல்லை எழுதிவைக்க வேண்டுமெனில் அதைக் கம்ப்யூட்டரில் டைப் செய்தோ மேஜையில் பிறருக்குத் தெரியும்படியோ வைக்க வேண்டாம். எழுதிவைக்கப்பட்ட கடவுச்சொற்கள் ஏதேனும் ஓர் இடத்தில் ரகசியமாக அல்லது லாக் செய்து வைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

கருவி மூலம் கடவுச்சொற்களை நிர்வகித்தல்

பல கடவுச்சொற்களை நினைவில் வைத்துக்கொள்வது சிரமமாக இருந்தால் நம்பகமான கடவுச்சொல் நிர்வாகியைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம். சிறிது நேரம் ஒதுக்கி இந்தச் சேவைகள் குறித்த கருத்துகளையும் அவற்றுக்கு எந்த அளவுக்கு நல்ல பெயருள்ளது என்றும் ஆராய்ந்து பாருங்கள்.

உங்கள் Google கணக்கைப் பயன்படுத்தியும் கடவுச்சொற்களைச் சேமிக்கலாம்.

படி 2: உங்கள் கடவுச்சொல்லை யாரேனும் தெரிந்துகொண்டால் என்ன செய்யலாம் என்பது குறித்துத் தயாராக இருங்கள்

உங்கள் கணக்கில் சந்தேகத்திற்குரிய செயல்பாடு கண்டறியப்படும் சமயங்களில் மீட்புத் தகவல் உங்களுக்கு உதவும்.

மீட்பு மின்னஞ்சல் முகவரியைச் சேர்த்தல்

  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள வழிகாட்டல் பேனலில் தனிப்பட்ட தகவல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. தொடர்புத் தகவல் பேனலில், மின்னஞ்சல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மீட்பு மின்னஞ்சல் முகவரியைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

மீட்பு மொபைல் எண்ணைச் சேர்த்தல்

  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள வழிகாட்டல் பேனலில் தனிப்பட்ட தகவல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. தொடர்புத் தகவல் பேனலில் மொபைல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மீட்பு மொபைல் எண்ணைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

மீட்புத் தகவல் இவற்றுக்கு உதவும்:

  • உங்கள் கணக்கை வேறொருவர் பயன்படுத்துகிறாரா என்பதைத் தெரிந்துகொள்வதற்கு
  • கடவுச்சொல் வேறொருவருக்குத் தெரிந்திருந்தால் உங்கள் கணக்கை மீட்டெடுப்பதற்கு
  • கடவுச்சொல்லை மறந்துவிட்டாலோ வேறு காரணத்திற்காக உள்நுழைய முடியாவிட்டாலோ உங்கள் கணக்கை மீட்டெடுப்பதற்கு

உங்கள் கணக்கை மிகவும் பாதுகாப்பானதாக்குதல்

உங்கள் கணக்கின் பாதுகாப்பை மேம்படுத்த பிரத்தியேக ஆலோசனையைப் பெறுங்கள்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4574207110489132564
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false