உங்களுக்குச் சொந்தமில்லாத கம்ப்யூட்டர், மொபைல், டேப்லெட் ஆகியவற்றில் தற்காலிகமாக உள்நுழையும்போது மறைநிலை உலாவல் சாளரத்தைப் பயன்படுத்தவும்.
உதாரணமாக:
- லைப்ரரி, இண்டர்நெட் கஃபே போன்றவற்றில் உள்ள, பலர் பயன்படுத்தக்கூடிய பொதுவான கம்ப்யூட்டர்
- உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரிடம் இருந்து இரவல் வாங்கிய சாதனம்
உங்கள் நம்பிக்கைக்குரியவர்களுடன் நீங்கள் ஒரு சாதனத்தையோ உலாவியையோ பகிர்ந்துகொண்டால், அதைப் பலர் பயன்படுத்தத்தக்க வகையில் அமைக்கலாம். Chrome உலாவியைப் பிறருடன் பகிர்ந்துகொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தனிப்பட்ட முறையில் உலாவுதல்
பிறர் பயன்படுத்தும் சாதனத்தில் நீங்கள் உள்நுழைந்தால், கீழே வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். இதனால் பிறர்:
- உங்கள் Google கணக்கைப் பயன்படுத்த முடியாது
- நீங்கள் தேடியவை என்ன என்பதையும், நீங்கள் பார்த்த தளங்கள் என்ன என்பதையும் தெரிந்துகொள்ள முடியாது
- உங்கள் கணக்கில் உள்நுழைந்துள்ளீர்களா என்பதைப் பார்க்க முடியாது
- iPhone அல்லது iPadல் Safari போன்ற ஓர் உலாவியைத் திறக்கவும்.
- மறைநிலைச் சாளரத்தைத் திறக்கவும். இதை எப்படிச் செய்வது என்று தெரிந்துகொள்ள, ஓர் ஆப்ஸைத் தேர்ந்தெடுக்கவும்:
- www.google.com போன்ற Google சேவைக்குச் சென்று உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
- இணையத்தைப் பயன்படுத்திய பிறகு, மறைநிலைச் சாளரங்கள் அனைத்தையும் மூடவும் அல்லது அவற்றிலிருந்து வெளியேறவும். வெளியேறுவதற்கு:
- www.google.com போன்ற Google சேவைக்குச் செல்லவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம், பெயரின் முதலெழுத்து அல்லது மின்னஞ்சல் முகவரியைத் தட்டவும்.
- வெளியேறு என்பதைத் தட்டவும்.
Chromeமில் மறைநிலைச் சாளரத்தில் உள்நுழையும்போது:
- நீங்கள் பார்க்கும் தளங்கள், உங்கள் தேடல்கள் மற்றும் பிற செயல்பாடுகள் உலாவிப் பதிவில் சேமிக்கப்படாது.
- உங்கள் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் பயன்படுத்தப்படும் என்பதால், அதே செயல்பாடுகள் வழக்கம்போல் உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படும்.
- மறைநிலைச் சாளரங்கள் அனைத்தையும் மூடியதும் குக்கீகள் நீக்கப்படும்.
கவனத்திற்கு: மறைநிலையில் உலாவுவது உலாவிகளைப் பொறுத்து மாறுபடலாம். மறைநிலை உலாவலைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றும்போது அதுகுறித்த விவரங்களைப் படித்துப் பார்க்கவும்.
தனிப்பட்ட முறையில் உலாவ முடியவில்லை என்றால்
- Chrome போன்ற உலாவியைத் திறக்கவும்.
- உள்நுழையும் முன்பும் வெளியேறிய பின்பும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- உலாவியின் தற்காலிகச் சேமிப்பையும் குக்கீகளையும் அழிக்கவும்: தற்காலிகச் சேமிப்பையும் குக்கீகளையும் அழிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
- 'இதுவரை இணையத்தில் பார்த்தவை' விவரங்களை நீக்கவும்: 'இதுவரை இணையத்தில் பார்த்தவை' விவரங்களை நீக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.