Googleளைப் பயன்படுத்தும் பிறரால் உங்கள் பெயர், சுயவிவரப் படம் மற்றும் பிற அடிப்படைத் தகவல்களை அணுக முடியும். Google சேவைகளில் உங்களைப் பற்றிய என்னென்ன தகவல்களைப் பிறர் பார்க்கலாம் என்பதை நீங்கள் கட்டுப்படுத்த முடியும்.
முக்கியம்:
- நீங்கள் உங்கள் சுயவிவரப் படத்தை இன்னும் சேர்க்காமல் இருந்தால், அதற்குப் பதிலாக உங்கள் பெயரின் முதலெழுத்து காட்டப்படும்.
- உங்கள் Google கணக்கின் பெயரையோ சுயவிவரப் படத்தையோ மாற்றினால் உங்கள் YouTube சேனலின் பெயரோ சுயவிவரப் படமோ மாறாது. மேலும் தகவலுக்கு உங்கள் சேனல் பிராண்டிங்கை நிர்வகியுங்கள் என்பதற்குச் செல்லவும்.
உங்கள் YouTube சேனலின் அடிப்படைத் தகவல் குறித்து மேலும் அறிக.
எனது Google கணக்கின் சுயவிவரப் படத்தைச் சேர்ப்பது அல்லது மாற்றுவது எப்படி?
- உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
- "தனிப்பட்ட தகவல்" என்பதன் கீழுள்ள படம் என்பதைத் தட்டவும்.
- உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து படத்தைப் பதிவேற்றவும் அல்லது Google Photoஸில் இருந்து தேர்வுசெய்யவும்.
- தேவைக்கேற்ப படத்தைச் சுழற்றிச் செதுக்கவும் .
- அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- கீழே உள்ள சுயவிவரப் படமாகச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்புகள்:
- உங்கள் சுயவிவரப் படம் காட்டப்படும் பெரும்பாலான இடங்களில் நீங்கள் அதைத் தட்டி மாற்றலாம்.
- முந்தைய சுயவிவரப் படங்களைப் பார்க்க, மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனு ஐகானை கிளிக் செய்து முந்தைய சுயவிவரப் படங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
கீபோர்டு மூலம் எனது படத்தைச் செதுக்குவது எப்படி?
ஒரு மூலையில் இருந்து படத்தைச் செதுக்குதல்
- செதுக்க வேண்டிய படத்தின் ஒரு மூலையைத் தேர்ந்தெடுக்கவும்.
- அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தி படத்தைச் செதுக்கவும்.
செதுக்குவதற்கான முழுச் சதுரத்தையும் நகர்த்துதல்
- செதுக்குவதற்கான முழுச் சதுரத்திற்குச் செல்லவும்.
- செதுக்குவதற்கான சதுரத்தை நகர்த்த அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தவும்.
எனது Google கணக்கின் பெயரை மாற்றுவது அல்லது திருத்துவது எப்படி?
உங்கள் பெயரை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம்.
-
உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
-
மேல் இடதுபுறத்தில் உள்ள “தனிப்பட்ட தகவல்” என்பதைக் கிளிக் செய்யவும்.
-
"அடிப்படைத் தகவல்" என்பதன் கீழுள்ள பெயர் என்பதைக் கிளிக் செய்யவும்.
-
உங்களின் தற்போதைய பெயருக்கு அடுத்துள்ள ஐகானைக் கிளிக் செய்யவும்.
-
உங்கள் பெயரை மாற்றவும்.
-
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
Google கணக்கில் எனது பெயரை மாற்றியபிறகும் பழைய பெயர் காட்டப்படுவதைச் சரிசெய்வது எப்படி?
பெயரை மாற்றிய பிறகு உங்கள் தற்காலிகச் சேமிப்பையும் குக்கீகளையும் அழிக்கவும். அவற்றை அழித்தாலும் உங்கள் பெயர் அனைத்து தயாரிப்புகளிலும் மாறும் என்பது உறுதியல்ல. நீங்கள் குறிப்பிடப்பட்டுள்ள முந்தைய Chat உரையாடல்களில் உங்களின் பழைய பெயர் காட்டப்படலாம்.
முக்கியம்: குக்கீகளை அழிக்கும்போது Google அல்லாத தளங்களில் இருந்து நீங்கள் வெளியேற்றப்படலாம்.
எனது Google கணக்கில் உள்ள எனது தனிப்பட்ட தகவலை எப்படி மாற்றுவது?
-
உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
-
“தனிப்பட்ட தகவல்” என்பதன் கீழ், மாற்ற விரும்பும் தகவலைக் கிளிக் செய்யவும்.
-
திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
கூடுதல் விவரங்கள்
பெயர்உங்கள் பெயரை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம்.
புனைப்பெயரைச் சேர்க்கவோ திருத்தவோ அகற்றவோ 'என்னைப் பற்றி' பிரிவுக்கோ account.google.com தளத்திற்கோ செல்லவும். account.google.com தளத்தில் இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- தனிப்பட்ட தகவல் என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் பெயருக்கு வலதுபுறத்திலுள்ள ஐகானைக் கிளிக் செய்யவும்.
- "புனைப்பெயர்" என்பதற்கு அடுத்துள்ள திருத்துவதற்கான ஐகானை கிளிக் செய்யவும்.
உங்கள் கணக்கில் பிறந்தநாளை ஒருமுறை சேர்த்துவிட்டால் அதை நீக்க முடியாது. இருப்பினும் நீங்கள் அதை மாற்றலாம், அது யாருக்குக் காட்டப்பட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யலாம்.
முக்கியம்:
- Google சேவைகளில் உங்கள் கணக்கைப் பாதுகாக்கவும் பிரத்தியேகமாக்கவும் உங்கள் பிறந்தநாளை Google பயன்படுத்தக்கூடும்.
- உங்கள் பிறந்தநாளை மாற்றினால் வயதுக் கட்டுப்பாடுள்ள வீடியோ அல்லது சேவைகளுக்கான உங்கள் அணுகல் மாறலாம். சில சமயங்களில், உங்கள் வயதை உறுதிப்படுத்துங்கள் என்று உங்களிடம் கேட்கப்படலாம்.
உங்கள் பிறந்தநாளை யாரெல்லாம் பார்க்கலாம்?
Google சேவைகளைப் பயன்படுத்தும் பிறருடன் உங்கள் பிறந்தநாளைத் தானாகப் பகிர மாட்டோம். உங்கள் பிறந்தநாளை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதைக் கட்டுப்படுத்த:
- உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
- இடதுபுறத்தில் உள்ள தனிப்பட்ட தகவல் என்பதைக் கிளிக் செய்யவும்.
- "அடிப்படைத் தகவல்" என்பதன் கீழுள்ள பிறந்தநாள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஏற்கெனவே வழங்காமல் இருந்தால் உங்கள் பிறந்தநாள் தகவலை வழங்கவும்.
- "உங்கள் பிறந்தநாளை யார் பார்க்கலாம் என்பதைத் தேர்வுசெய்யவும்" என்பதன் கீழ் நீங்கள் மட்டும் அல்லது அனைவரும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் பிறந்தநாளைத் தனிப்படுத்திக் காட்டுதல்
"உங்கள் பிறந்தநாளை யார் பார்க்கலாம் என்பதைத் தேர்வுசெய்யவும்" என்பதை அனைவரும் (அல்லது உங்கள் நிறுவனம், பொருந்தினால்) என அமைத்தால் அதைத் தனிப்படுத்திக் காட்ட Googleளை நீங்கள் அனுமதிக்கலாம். உதாரணத்திற்கு, உங்கள் பிறந்தநாள் நெருங்கும்போது உங்கள் சுயவிவரப் படம் காட்டப்படும் இடங்களிலெல்லாம் Google அதை அலங்கரிக்கக்கூடும். உங்களைத் தொடர்புகொள்ளும்போதோ சில Google சேவைகளில் நீங்கள் உருவாக்கும் உள்ளடக்கத்தைப் பார்க்கும்போதோ உங்கள் பிறந்தநாளையும் அதுகுறித்த தனிப்படுத்தல்களையும் பிறர் பார்க்க முடியும்.
உங்கள் பிறந்தநாளைப் பிறருக்குக் காட்ட விரும்பவில்லை என்றால் "உங்கள் பிறந்தநாளை யார் பார்க்கலாம் என்பதைத் தேர்வுசெய்யவும்" என்பதை நீங்கள் மட்டும் என அமைக்கவும். Google அதைத் தனிப்படுத்திக் காட்டாது. இப்படி அமைத்தாலும் சில இடங்களில் உங்கள் சுயவிவரப் படத்தை Google அலங்கரிக்கும், ஆனால் அதை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும்.
உதவிக்குறிப்பு: உங்களின் சரியான பிறந்தநாள் நெருங்கும்போது உங்கள் சுயவிவரப்படம் தனிப்படுத்திக் காட்டப்படவில்லை என்றால் உங்கள் சுயவிவரத்தில் உங்கள் பிறந்தநாள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். வேறொரு தேதியில் உங்கள் பிறந்தநாள் பிறருக்குத் தனிப்படுத்திக் காட்டப்பட்டால் Google Contactsஸில் அவர்கள் தேதியைத் தவறாகக் குறிப்பிட்டிருக்கலாம்.
உங்கள் பிறந்தநாள் தகவலை Google பயன்படுத்தும் சில வழிகள்
உங்கள் பிறந்தநாளை Google இவற்றுக்காகப் பயன்படுத்தலாம்:
- உங்கள் வயதைச் சரிபார்த்து, குறிப்பிட்ட சேவைகளையும் அம்சங்களையும் பயன்படுத்துவதற்கான வயதை அடைந்துவிட்டீர்கள் என்பதை உறுதிசெய்வது.
- Google Search பக்கத்தில் பிறந்தநாள் தீமினை எப்போது காட்டுவது என்பதைத் தெரிந்துகொள்வது.
- பிரத்தியேகப் பரிந்துரைகளையும் விளம்பரங்களையும் வழங்க உங்கள் வயதுக் குழுவைத் தீர்மானிப்பது. விளம்பர அமைப்புகளுக்குச் சென்று பிரத்தியேக விளம்பரங்களை முடக்கிக்கொள்ளலாம்.
உங்கள் Google கணக்கின் பாலினம் பிரிவில் உங்களுக்கான சில விருப்பத்தேர்வுகள் உள்ளன. நீங்கள்:
- உங்கள் பாலினத்தைக் குறிப்பிடலாம்
- பாலினத்தைக் குறிப்பிட விருப்பமில்லை என்பதைத் தேர்வுசெய்யலாம்
- பிரத்தியேகப் பாலினத்தைச் சேர்த்து Google உங்களை எப்படிக் குறிப்பிட வேண்டும் என விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யலாம்
உங்கள் பாலினத்தை யாரெல்லாம் பார்க்கலாம்?
இயல்பாக, Google சேவைகளைப் பயன்படுத்தும் பிறருடன் உங்கள் பாலினம் பகிரப்படாது. உங்கள் பாலினத்தை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதைக் கட்டுப்படுத்த உங்கள் Google கணக்கிலுள்ள என்னைப் பற்றி என்ற பிரிவுக்குச் செல்லவும்.
உங்கள் பாலினத்தை Google எப்படிப் பயன்படுத்துகிறது?
Google சேவைகளை இன்னும் பிரத்தியேகமாக்க உங்கள் பாலினத்தைப் பயன்படுத்துகிறோம். பாலினத்தைக் குறிப்பிடும்போது இவற்றைச் செய்ய எங்களுக்கு உதவுகிறீர்கள்:
- உங்களைக் குறிப்பிடும் மெசேஜ்களையும் பிறவற்றையும் பிரத்தியேகப்படுத்துவதற்கு. உதாரணமாக, உங்கள் பாலினத்தைப் பார்க்கக்கூடியவர்களுக்கு "அவருக்கு (him) மெசேஜ் அனுப்பு", "அவருடைய (her) நட்பு வட்டங்களில்" போன்ற பரிந்துரைகள் காட்டப்படும்.
- மிகவும் தொடர்புடைய, நீங்கள் விரும்பக்கூடிய உங்களுக்கேற்ற உள்ளடக்கத்தை (எ.கா. விளம்பரங்கள்) வழங்குவதற்கு.
நீங்கள் பாலினத்தைத் தெரிவிக்காதபட்சத்தில் உங்களைக் குறிப்பிடும்போது பாலின வேறுபாடற்ற வார்த்தைகளை (எ.கா. "அவருக்கு மெசேஜ் அனுப்பு") பயன்படுத்துவோம்.
எனது Google கணக்கின் மற்ற தகவல்களை மாற்றுவது எப்படி?
எனது Google கணக்கின் கடவுச்சொல்லை மாற்றுவது எப்படி?- உங்கள் Google கணக்கைத் திறக்கவும். நீங்கள் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
- "பாதுகாப்பு" பிரிவில் Googleளில் எப்படி உள்நுழைகிறீர்கள்? என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- கடவுச்சொல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கேட்கப்படும்போது மீண்டும் உள்நுழையவும்.
- திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும். வலிமையான கடவுச்சொல்லை எப்படி உருவாக்குவது எனத் தெரிந்துகொள்ளுங்கள்.
Google சேவைகளில் உங்களைப் பற்றி பிறர் எவற்றையெல்லாம் பார்க்கலாம் என்பதைத் தேர்வுசெய்ய உங்கள் Google கணக்கிலுள்ள என்னைப் பற்றி என்ற பிரிவுக்குச் செல்லவும்.
உங்களால் எந்தத் தகவல்களை மாற்ற முடியும், அவற்றை எப்படி மாற்றலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பயணிக்கும்போது தற்போதைய இருப்பிடத்தின் நேர மண்டலத்தில் இருக்கும் நிகழ்வுகளைப் பார்க்கலாம்.
Google Calendarரில் நேர மண்டலத்தை மாற்றுவது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.