நம்பகமான கம்ப்யூட்டர்களைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்

உங்கள் Google கணக்கில் ஒவ்வொரு முறை உள்நுழையும்போதும் இருபடிச் சரிபார்ப்புக் குறியீட்டை டைப் செய்யவோ பாதுகாப்பு விசையைப் பயன்படுத்தவோ வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் கம்ப்யூட்டரையோ மொபைல் சாதனத்தையோ நம்பகமானது எனக் குறிக்கலாம். நம்பகமான கம்ப்யூட்டர்களிலும் சாதனங்களிலும் உள்நுழையும்போது ஒவ்வொரு முறையும் சரிபார்ப்புக் குறியீட்டை டைப் செய்ய வேண்டியதில்லை.

நம்பகமான கம்ப்யூட்டர்களையும் சாதனங்களையும் சேர்த்தல்

  1. உங்களுக்கு நம்பகமான கம்ப்யூட்டரிலோ சாதனத்திலோ உள்நுழையவும்.
  2. சரிபார்ப்புக் குறியீட்டை டைப் செய்யும்போது இந்தக் கம்ப்யூட்டரில் மீண்டும் கேட்க வேண்டாம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

நம்பகமான சாதனத்தில் இருபடிச் சரிபார்ப்பை மேற்கொள்ளுமாறு உங்களிடம் கேட்கப்படுதல்

உள்நுழையும்போது "இந்தக் கம்ப்யூட்டரில் மீண்டும் கேட்க வேண்டாம்" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியை நீங்கள் தேர்வுசெய்திருந்தாலும் இருபடிச் சரிபார்ப்பின் மூலம் உள்நுழையும்படி கேட்கப்படலாம். பொதுவாக Chrome அல்லது Firefox போன்ற உலாவிகளில் குக்கீகள் இயக்கப்படாமல் இருந்தாலோ குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு குக்கீகள் நீக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டிருந்தாலோ இது நிகழலாம்.

ஒவ்வொரு முறை உள்நுழையும்போதும் இருபடிச் சரிபார்ப்புக் குறியீட்டை டைப் செய்யவோ பாதுகாப்பு விசையைப் பயன்படுத்தவோ வேண்டாம் என்று நினைத்தால் பின்வரும் வழிமுறைகளை முயலவும்:

  1. உலாவியின் குக்கீ அமைப்புகளை மாற்றவும். குக்கீகளைச் சேமிக்கும் வகையில் உலாவியை அமைக்கலாம் அல்லது [*.]google.com என்பதைச் சேர்ப்பதன் மூலம் Google கணக்கின் குக்கீகளுக்கு விதிவிலக்கைச் சேர்க்கலாம். அமைப்புகளை எப்படி மாற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் தகவல்களைப் பெற நீங்கள் பயன்படுத்தும் உலாவியைக் கீழே தேர்ந்தெடுக்கவும்:
  2. நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு உலாவியிலும் கம்ப்யூட்டரிலும் "இந்தக் கம்ப்யூட்டரில் மீண்டும் கேட்க வேண்டாம்" என்பதைத் தேர்வுசெய்யவும். உள்நுழைய வெவ்வேறு உலாவிகளையோ கம்ப்யூட்டர்களையோ பயன்படுத்தினால் ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் இந்தப் பெட்டியைத் தேர்வுசெய்வதையும் ஒவ்வொரு உலாவியிலும் குக்கீ அமைப்புகளை மாற்றுவதையும் உறுதிப்படுத்தவும்.

கம்ப்யூட்டர்களையும் சாதனங்களையும் நம்பகமானவை பட்டியலில் இருந்து அகற்றுதல்

  1. உங்கள் Google கணக்கைத் திறக்கவும். நீங்கள் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  2. பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "உங்கள் சாதனங்கள்" பிரிவில், அனைத்து சாதனங்களையும் நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நீங்கள் வெளியேற விரும்பும் சாதனத்தைக் கிளிக் செய்து அதன் பிறகு வெளியேறவும்.
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17367997936381883610
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false