மீட்புத் தொடர்புகளைச் சேர்த்தல், நிர்வகித்தல், பயன்படுத்துதல்

உங்கள் கணக்கில் உள்நுழைய முடியாதபோது, அதில் மீண்டும் உள்நுழைய உங்களுக்கு உதவக்கூடிய, ஒரு Google கணக்கை வைத்துள்ள நம்பகமான நபர்தான் மீட்புத் தொடர்பு. உங்கள் கணக்கிற்கு 10 மீட்புத் தொடர்புகள் வரை சேர்க்கலாம்.

நீங்கள் தேர்வுசெய்யும் மீட்புத் தொடர்பு:

  • குடும்ப உறுப்பினர், நெருங்கிய நண்பர் போன்று உங்களுக்கு நன்கு தெரிந்தவராகவும் நம்பகமானவராகவும் இருக்க வேண்டும்.
  • உங்கள் கணக்கு சம்பந்தமாக உங்களுக்கு உதவி தேவைப்படும்போது 15 நிமிடங்களுக்குள் பதிலளிப்பவராக இருக்க வேண்டும்.

உதவிக்குறிப்புகள்:

  • மீட்புத் தொடர்பும், உங்கள் மீட்பு மின்னஞ்சல் முகவரியும் வெவ்வேறானவை.
  • மீட்பு மின்னஞ்சல் முகவரி என்பது மற்றொரு மின்னஞ்சல் முகவரியாகும். அது:
    • உங்களால் Google கணக்கில் உள்நுழைய முடியாதபோது அதை மீட்டெடுக்க உதவும்.
    • பாதுகாப்பு விழிப்பூட்டல்கள் மற்றும் அறிவிப்புகளைப் பெற உதவும். உதாரணமாக, உங்கள் கணக்கில் சந்தேகத்திற்குரிய உள்நுழைவு முயற்சிகள் நடக்கும்போது.
  • மீட்புத் தொடர்பால் உங்கள் கணக்கில் நீங்கள் மீண்டும் உள்நுழைய மட்டுமே உதவ முடியும், பாதுகாப்பு விழிப்பூட்டல்களையும் அறிவிப்புகளையும் பெற முடியாது.

மீட்புத் தொடர்பைச் சேர்த்தல்

முக்கியம்:

  • Google Workspace கணக்குகளும், மேம்பட்ட பாதுகாப்புத் திட்டத்தில் பதிவுசெய்துள்ள Google கணக்குகளும் மீட்புத் தொடர்புகளைக் கொண்டிருக்க முடியாது. இருப்பினும், தகுதிபெறும் பிற Google கணக்குகளுக்கு அவை மீட்புத் தொடர்பாக இருக்க முடியும்.
  • பிள்ளைகளின் கணக்குகளுக்கு மீட்புத் தொடர்புகளைச் சேர்க்க முடியாது. அத்துடன், அந்தக் கணக்குகளால் மற்ற கணக்குகளுக்கு மீட்புத் தொடர்பாகச் செயல்படவும் முடியாது.
  • மீட்புத் தொடர்பாக Google கணக்கைச் சேர்க்கும்போது, இந்தச் சமயங்களில் பரிந்துரைகளைப் பெறமாட்டீர்கள்:
    • நீங்கள் தேட முயற்சிப்பது ஒரு சிறார் கணக்கு.
    • உங்கள் கணக்கில் இருந்து எவரையும் தொடர்புகொண்டதில்லை.
  1. உங்கள் Google கணக்கைத் திறக்கவும்.
  2. பாதுகாப்பு & உள்நுழைவு என்பதைத் தட்டவும்.
  3. “Googleளில் எப்படி உள்நுழைகிறீர்கள்?” என்ற பிரிவில் மீட்புத் தொடர்புகள் என்பதைத் தட்டவும்.
    • நீங்கள் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  4. மீட்புத் தொடர்பைச் சேர் என்பதைத் தட்டவும்.
  5. நீங்கள் நம்புபவரின் மின்னஞ்சல் முகவரியை டைப் செய்யவும்.
    • நீங்கள் மின்னஞ்சல் முகவரியை டைப் செய்யத் தொடங்கியதும், உங்கள் தொடர்புகளில் உள்ள சில மின்னஞ்சல் முகவரிகளும் தானாக நிரப்புவதற்கான விருப்பமும் காட்டப்படும். நீங்கள் பட்டியலில் இருந்து ஒரு முகவரியைத் தேர்வுசெய்யலாம் அல்லது தானாக நிரப்புவதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
    • கோரிக்கையை அனுப்பும் முன் மின்னஞ்சல் முகவரியைக் கவனமாகச் சரிபார்த்துக்கொள்ளவும்.
  6. கோரிக்கையை அனுப்பு என்பதைத் தட்டவும்.
    • உங்கள் மீட்புத் தொடர்புக்குக் கோரிக்கை அனுப்பப்பட்டதைத் தெரிவிக்கும் ஓர் அறிவிப்பைப் பெறுவீர்கள்.
    • உங்கள் கோரிக்கையைப் பற்றிய அறிவிப்பை உங்கள் மீட்புத் தொடர்பு பெறுவார். அதில் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, சுயவிவரப் படம் ஆகியவை இருக்கும்.

உதவிக்குறிப்பு: கோரிக்கை 7 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அது தொடர்பாக எதுவும் செய்யப்படாவிட்டால், நீங்கள் மற்றொரு கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது வேறொரு மீட்புத் தொடர்பைத் தேர்வுசெய்ய வேண்டும்.

மீட்புத் தொடர்பைச் சேர்

மீட்புத் தொடர்புக்கான அழைப்பை ஏற்றுக்கொள்ளுதல் அல்லது நிராகரித்தல்

முக்கியம்:

  • மீட்புத் தொடர்புக் கோரிக்கை 7 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.
  • உங்களுக்குத் தெரியாத ஒருவருக்கு மீட்புத் தொடர்பாக இருப்பதற்கான கோரிக்கையை நீங்கள் பெற்றால், அதைப் புறக்கணிக்கவும் அல்லது நிராகரிக்கவும்.
  • நீங்கள் அதிகபட்சமாக 25 முதன்மைக் கணக்குகளுக்கு மீட்புத் தொடர்பாக இருக்க முடியும். நீங்கள் நிலுவையில் வைத்துள்ள மற்றும் ஏற்றுக்கொண்ட எல்லா அழைப்புகளும் இதில் அடங்கும்.

வேறொரு பயனர் உங்களை மீட்புத் தொடர்பாக இருக்கும்படி கேட்டால், அறிவிப்பு மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.

  1. Gmailலுக்குச் செல்லவும்.
  2. மீட்புத் தொடர்புக்கான கோரிக்கை அழைப்பைக் கண்டறியவும்.
  3. கோரிக்கையைக் காட்டு என்பதைத் தட்டவும்.
    • உங்கள் Google கணக்கின் மீட்புத் தொடர்புகள் பக்கம் காட்டப்படும்.
    • நீங்கள் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  4. ஏற்கிறேன் Check அல்லது நிராகரி Remove என்பதைத் தட்டவும்.
    • நீங்கள் ஏற்றுக்கொண்டால்:
      • நீங்கள் அவரது மீட்புத் தொடர்பு என்பதைத் தெரிவிக்கும் ஓர் அறிவிப்பை அவர் பெறுவார்.
      • அவரது முதன்மை மின்னஞ்சல் முகவரி மற்றும் மீட்பு மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு மின்னஞ்சல் அனுப்பப்படும்.
    • நீங்கள் நிராகரித்துவிட்டால்:
      • நீங்கள் அழைப்பை நிராகரித்தது அவருக்குத் தெரிவிக்கப்படாது.
      • ஆனால், மீட்புத் தொடர்பாக இப்போது உங்களால் செயல்பட முடியாது என்பதை அவர் தெரிந்துகொள்வார்.
      • அவரால் 4 நாட்களுக்கு மற்றொரு கோரிக்கையை உங்களுக்கு அனுப்ப முடியாது.

உதவிக்குறிப்பு: 7 நாட்களுக்குப் பிறகு, மீட்புத் தொடர்புகள் பக்கத்தில் கோரிக்கை காட்டப்படாது.

மீட்புத் தொடர்புகள் மற்றும் அழைப்புகளை நிர்வகித்தல்

உங்கள் மீட்புத் தொடர்புகள் பக்கத்திற்குச் சென்று நிலுவையிலுள்ள மீட்புத் தொடர்புக்கான அழைப்புகளைப் பார்க்கலாம் நீக்கலாம். அழைப்பின் தற்போதைய நிலையை அங்கே தெரிந்துகொள்ள முடியும்.

உதவிக்குறிப்பு: பயனர் உங்கள் அழைப்பை நிராகரிக்கவில்லை என்றால், ஸ்பேமிங்கைத் தவிர்க்கும் வகையில் நீங்கள் ஒரு நாளுக்கு 2 அழைப்புகள் வரை மீண்டும் அனுப்பலாம். இருப்பினும், அவர் நிராகரித்துவிட்டால் உங்களால் 4 நாட்களுக்கு மற்றொரு கோரிக்கையை அனுப்ப முடியாது.

மீட்புத் தொடர்பை அகற்றுதல்

  1. உங்கள் Google கணக்கைத் திறக்கவும்.
  2. பாதுகாப்பு & உள்நுழைவு என்பதைத் தட்டவும்.
  3. “Googleளில் எப்படி உள்நுழைகிறீர்கள்?” என்ற பிரிவில் மீட்புத் தொடர்புகள் என்பதைத் தட்டவும்.
    • நீங்கள் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  4. நீக்கு என்பதைத் தட்டவும்.
  5. தொடர்பை நீக்க உறுதிசெய் என்பதைத் தட்டவும்.

மீட்புத் தொடர்பைப் பயன்படுத்துதல்

முக்கியம்:

  • மீட்புத் தொடர்பைப் பயன்படுத்தும் முன், முதலில் அவரை உங்கள் கணக்கில் சேர்க்க வேண்டும். மீட்புத் தொடர்பு உங்கள் கணக்கை மீட்டெடுக்க உங்களுக்கு உதவுவதற்கு முன்பு காத்திருப்புக் காலம் உள்ளது.
    • உங்கள் கோரிக்கையை ஏற்க உங்கள் மீட்புத் தொடர்பாக இருக்க அழைக்கப்பட்டவருக்கு 7 நாட்கள் வரை கால அவகாசம் உள்ளது.
    • கணக்கு மீட்டெடுப்பிற்காக மீட்புத் தொடர்பைப் பயன்படுத்தும் முன்பு இன்னும் 7 நாள் காத்திருக்க வேண்டும்.
  • உங்கள் கணக்கில் உங்களால் உள்நுழைய முடியாமல் இருக்கும்போதும், கணக்கு மீட்டெடுப்பு செயலாக்கத்தில் இருக்கும்போதும் உங்களால் மீட்புத் தொடர்பைச் சேர்க்க முடியாது.

உங்கள் கணக்கில் உள்நுழைய முடியாதபோது மீட்புத் தொடர்பைத் தொடர்புகொள்ளுங்கள்.

  1. உங்களால் கணக்கில் உள்நுழைய முடியவில்லை என்றால் கணக்கு மீட்டெடுப்புப் பக்கம் காட்டப்படும்.
  2. காண்பிக்கப்படும் சரிபார்ப்பு முறைகளில் இருந்து உங்கள் மீட்புத் தொடர்பைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது உங்கள் மீட்புத் தொடர்பைத் தொடர்புகொள்வதற்கான ஓர் அறிவிப்பைப் பெறலாம்.
  3. எண்ணைப் பெறுங்கள் என்பதைத் தட்டவும்.
    • அடுத்த பக்கத்தில், ஓர் எண் காட்டப்படும்.
    • இந்த எண் 15 நிமிடங்களில் காலாவதியாகிவிடும் என்பதால், உங்கள் மீட்புத் தொடர்பை உடனடியாகத் தொடர்புகொள்ளும்படி பரிந்துரைக்கிறோம்.
  4. உங்கள் மீட்புத் தொடர்பிடம் இந்த எண்ணை வழங்குங்கள்.
    • உங்கள் மீட்புத் தொடர்பின் சாதனத்திற்கு 3 வெவ்வேறு எண்கள் அனுப்பப்படும். உறுதிப்படுத்த, மீட்புத் தொடர்பிடம் நீங்கள் வழங்கிய அதே எண்ணை அவர் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உதவிக்குறிப்புகள்:

  • எண் காலாவதியாகிவிட்டால், உங்கள் மீட்புத் தொடர்புக்கு வழங்க மற்றொரு எண்ணை நீங்கள் பெறலாம் அல்லது வேறு வழியில் உள்நுழைய முயலலாம்.
  • உங்கள் மீட்புத் தொடர்பைப் பயன்படுத்திய பிறகும் கூடுதல் சரிபார்ப்பு தேவைப்பட்டால், உங்கள் கணக்கு பாதுகாப்பிற்காகத் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்படும். இந்த இடைநிறுத்தத்தின்போது கணக்கு மீட்டெடுப்புக் கோரிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக உங்களுக்குத் தெரிவிப்போம். இதன் மூலம், மீட்புத் தொடர்பு உங்களுக்குத் தெரியாமல் பயன்படுத்தப்பட்டிருந்தால் நீங்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டு உங்கள் கணக்கைப் பாதுகாக்க முடியும். இந்தத் தற்காலிக இடைநிறுத்தம் உங்கள் கணக்கைப் பாதுகாக்க எப்படி உதவுகிறது என்பதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய தகவல்கள்

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
11817464762202889486
true
உதவி மையத்தில் தேடுக
false
true
true
true
true
true
70975
false
false
false
false