உங்கள் சட்டப்பூர்வப் பெயர் மற்றும் Google கணக்கு பற்றிய அறிமுகம்

Googleளில் முதல்முறையாகப் பர்ச்சேஸ் செய்தபோதோ உங்கள் அடையாளத்தைச் சரிபார்த்தபோதோ பயன்படுத்திய பெயர்தான் உங்கள் சட்டப்பூர்வப் பெயர். இது, குறிப்பிட்ட சில பிசினஸ் தயாரிப்புகளுக்கோ சேவைகளுக்கோ பதிவு செய்ய நீங்கள் பயன்படுத்திய பெயராகவும் இருக்கலாம்.

Google ஏன் உங்கள் சட்டப்பூர்வப் பெயரைக் கேட்கிறது?

ஒழுங்குமுறைகளுடன் இணங்குவதற்கும், வெளிப்படைத்தன்மைக் கொள்கைகளை அமல்படுத்துவதற்கும், மோசடியைத் தவிர்ப்பதற்கும் Google உங்கள் சட்டப்பூர்வப் பெயரைப் பயன்படுத்துகிறது.

சட்டப்பூர்வப் பெயர் மற்றும் காட்சிப் பெயர்

உங்கள் சட்டப்பூர்வப் பெயரும் காட்சிப் பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில்லை. உங்கள் காட்சிப் பெயர் என்பது Google கணக்கை நீங்கள் உருவாக்கியபோது வழங்கிய பெயர் ஆகும்.

பெரும்பாலான Google சேவைகளில் உங்கள் காட்சிப் பெயரும் சுயவிவரப் படமும் காட்டப்படும். Google சேவைகளில் உங்களைத் தொடர்புகொள்பவர்களும் நீங்கள் உருவாக்கும் உள்ளடக்கத்தைப் பார்ப்பவர்களும் உங்கள் காட்சிப் பெயரைப் பார்க்கலாம்.

உதவிக்குறிப்பு: Google தயாரிப்பையோ சேவையையோ பயன்படுத்துவதற்காக முன்பு உங்கள் அடையாளத்தை நீங்கள் உறுதிப்படுத்தி இருந்தால், உங்கள் சட்டப்பூர்வப் பெயர் சரிபார்க்கப்பட்டது என்று காட்டப்படக்கூடும்.

Google சேவைகள் அனைத்திலும் உங்களைப் பற்றி எவற்றையெல்லாம் பிறர் பார்க்கலாம் என்பதைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் சட்டப்பூர்வப் பெயரை யார் பார்க்கலாம்?

இந்த இடங்களில் மட்டும் பிறருக்கு உங்கள் சட்டப்பூர்வப் பெயர் காட்டப்படும்:

சட்டப்பூர்வப் பெயரை மாற்றுதல்

முக்கியம்: உங்கள் சட்டப்பூர்வப் பெயர் உங்கள் அடையாளத்தைப் பிரதிபலிக்க வேண்டும். எ.கா. அரசாங்கம் வழங்கிய அடையாள ஆவணத்தில் உள்ள உங்கள் பெயர்.

  1. myaccount.google.com பக்கத்திற்குச் செல்லவும்.
    • உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட Google கணக்கு இருந்தால், சரியான கணக்கில் உள்நுழைந்திருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள தனிப்பட்ட தகவல் என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தட்டவும்.
  3. பெயர் என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தட்டவும்.
  4. கீழே உள்ள சட்டப்பூர்வப் பெயர் அதன் பிறகு சட்டப்பூர்வப் பெயரை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தட்டவும்.
  5. திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
4048377376122437252
true
உதவி மையத்தில் தேடுக
false
true
true
true
true
true
70975
false
false
false
false