உங்கள் தரவின் நகலை மூன்றாம் தரப்புடன் பகிர்தல்

முக்கியம்: Google அல்லாத நிறுவனங்களையும் டெவெலப்பர்களையும் மூன்றாம் தரப்புச் சேவைகள் என்கிறோம். நீங்கள் நம்பும் மூன்றாம் தரப்புச் சேவைகளுக்கு மட்டுமே உங்கள் தரவின் நகலை நகர்த்தவும். ஆபத்துகள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் Google தரவுகள் சிலவற்றை மூன்றாம் தரப்புடன் பயன்படுத்துவதற்காக அவற்றின் நகலைப் பெற அந்த மூன்றாம் தரப்பை அனுமதிக்கும் விருப்பத்தை Google உங்களுக்கு வழங்குகிறது. தரவின் நகலை நகர்த்துவதை இது எளிதாக்குகிறது. ஆதரிக்கப்படும் நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பயனர்களுக்கு இந்த விருப்பம் கிடைக்கும். அனைத்து பயனர்களும் ஏற்கெனவே Google Takeout மூலம் செய்யக்கூடியவற்றுடன் இவர்களுக்குக் கூடுதலாக இது கிடைக்கிறது. இந்த அம்சம் கிடைக்காத இடங்களில் உள்ள பயனர்களுக்கு: உங்கள் சொந்த உபயோகத்திற்காக உங்கள் Google கணக்கில் உள்ள உள்ளடக்கத்தின் நகலை உருவாக்கவோ அதை நீங்களே மூன்றாம் தரப்புச் சேவைக்கு நகர்த்தவோ Google Takeoutடைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

கிடைக்கும்பட்சத்தில், உங்கள் தரவை நகர்த்துவதற்கான செயல்முறை எப்போதும் மூன்றாம் தரப்பின் இணையதளம் அல்லது ஆப்ஸிலேயே தொடங்கும். இந்த விருப்பத்தைக் கிடைக்கும்படி செய்வதற்காக Google அல்லாத சேவைகள் எங்கள் கருவிகளைப் பயன்படுத்தலாம் என்றாலும், அவற்றை அமைப்பது அவர்களது விருப்பம் மற்றும் பொறுப்பாகும்.

உதவிக்குறிப்பு: பணியிடம், பள்ளி அல்லது பிற நிறுவனம் மூலம் உங்கள் கணக்கு நிர்வகிக்கப்படும்போது, உங்கள் நிர்வாகி இந்த விருப்பத்தை இயக்கியிருந்தால் மட்டுமே உங்கள் Google தரவின் நகலை மூன்றாம் தரப்புச் சேவைக்கு நகர்த்த முடியும். இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்த முடியுமா என்பதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

முக்கியம்:

  • உங்கள் தரவின் நகலை மூன்றாம் தரப்புச் சேவைக்கு நகர்த்த வேண்டுமா என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.
    • உங்கள் தரவின் நகலை நகர்த்த முடிவு செய்தால், எந்தெந்தத் தரவை நகலெடுக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யலாம்.
  • இது உங்கள் தரவின் நகலை ஒருமுறை மட்டுமே நகர்த்துவதற்கான கோரிக்கையாகும்.
  • மூன்றாம் தரப்புச் சேவைக்கு நகலை நகர்த்திய பிறகு, Google கணக்கில் இருந்து உங்கள் தரவு நீக்கப்படாது.
  • உங்கள் தரவின் நகல் மூன்றாம் தரப்புச் சேவைக்கு அனுப்பப்பட்ட பிறகு, அந்த நகலை நிர்வகிப்பதும் பாதுகாப்பதும் அவர்களின் பொறுப்பாகும்.

தரவின் நகலை நகர்த்தும் முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை:

Googleளில், உங்கள் தரவைப் பாதுகாக்கவும் அவற்றுக்கான முழுக் கட்டுப்பாட்டையும் உங்களுக்கே வழங்கவும் நாங்கள் கடுமையாகப் பணியாற்றுகிறோம். உங்கள் தரவின் நகலை நகர்த்த நீங்கள் முடிவெடுக்கும் முன், செயல்முறையைப் புரிந்துகொள்வது முக்கியமாகும்.

மூன்றாம் தரப்புச் சேவை நம்பகமானதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்

முக்கியம்: எந்தவொரு நோக்கத்திற்காகவும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை Google யாருக்கும் விற்காது. உங்கள் அனுமதி இல்லாமல், நாங்கள் தரவை நகர்த்த மாட்டோம்.

உங்கள் தரவின் நகல் மூன்றாம் தரப்புச் சேவைக்கு அனுப்பப்பட்ட பிறகு, அந்த நகலை நிர்வகிப்பதும் பாதுகாப்பதும் அவர்களின் பொறுப்பாகும். Google அதற்குப் பொறுப்பேற்காது.

தனிப்பட்ட அல்லது பாதுகாக்கவேண்டிய தகவல்கள் இருக்கக்கூடும் என்பதால் பகிரும் தரவை நீங்களும் கவனமாகச் சரிபார்க்க வேண்டும். உங்கள் தரவின் நகலை நகர்த்துவது சரியென்று நினைத்து, பகிர்வது பாதுகாப்பானது என்றால் மட்டுமே பகிரவும்.

மேலும், மூன்றாம் தரப்புச் சேவையின் தனியுரிமைக் கொள்கையையும் பாதுகாப்பு தொடர்பான வெளியீடுகளையும் படித்துப் பார்க்கும்படி பரிந்துரைக்கிறோம். உங்கள் தரவை அவர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் அதை எப்படிப் பாதுகாப்பாகவும் தனிப்பட்டதாகவும் வைத்திருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள இது உதவும். உங்கள் பாதுகாக்கவேண்டிய மற்றும் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் படிக்கலாமா, மாற்றலாமா, நீக்கலாமா, நகலை நகர்த்தலாமா அல்லது விற்கலாமா என்பதற்கான அனுமதிகள் இதில் அடங்கும்.

உங்களிடமே முழுக் கட்டுப்பாடும் உள்ளது

முக்கியம்: கடவுச்சொற்கள் போன்ற உங்கள் கணக்கின் பாதுகாப்பு தொடர்பான குறிப்பிட்ட சில தரவுகள் மற்றும் தகவல்களை நகலெடுத்து அவற்றை மூன்றாம் தரப்புச் சேவைக்கு நகர்த்த முடியாது.

Google கணக்கில் இருந்து உங்கள் தரவின் நகலை Googleளைச் சாராத சேவைக்கு நகர்த்த வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்கிறீர்கள். எந்தெந்தத் தரவு நகலெடுக்கப்பட வேண்டும் என்பதையும் நீங்களே முடிவு செய்கிறீர்கள்.

உதாரணமாக, உங்கள் YouTube தரவின் நகலை நகர்த்த முடிவு செய்தால், உங்கள் தனிப்பட்ட வீடியோக்களை நகலெடுக்க வேண்டாம் என்று தேர்வுசெய்யலாம். உங்கள் தரவின் நகலை மூன்றாம் தரப்புச் சேவைக்கு நகர்த்துவதற்கான ஒவ்வொரு கோரிக்கையிலும் நகலெடுப்பதற்கான அல்லது நகலெடுக்க வேண்டாம் என்பதற்கான விருப்பம் காட்டப்படும். அதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

உதவிக்குறிப்பு: உங்கள் தரவின் நகலை Google உருவாக்கி முடிப்பதற்குள் இந்தக் கோரிக்கையை நீங்கள் ரத்துசெய்ய முடியும். மூன்றாம் தரப்புச் சேவைக்கு நீங்கள் வழங்கிய அணுகலை அகற்ற, உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.

இது உங்கள் தரவின் நகலை ஒருமுறை மட்டுமே நகர்த்துவதற்கான கோரிக்கை

இந்தச் செயல்முறை உங்கள் Google கணக்கை மூன்றாம் தரப்புச் சேவையுடன் ஒத்திசைக்காது. இந்தச் செயல்முறை ஒருமுறை மட்டுமே உங்கள் தரவின் நகலை உருவாக்கும். பிறகு மூன்றாம் தரப்புச் சேவையினால் அது நகர்த்தப்படும்.

அதற்குப் பிறகு நீங்கள் ஏதேனும் மாற்றங்களைச் செய்திருந்து உங்கள் தரவின் நகலை மற்றொரு முறை அதே சேவைக்கு நகர்த்த விரும்பினால், இந்தச் செயல்முறையை மீண்டும் செய்ய வேண்டும். உங்கள் தரவை எத்தனை நகல்கள் வேண்டுமானாலும் எடுக்கலாம், ஆனால் உங்கள் தரவைப் பாதுகாப்பதற்கு உதவும் வகையில் ஒவ்வொரு முறை நகலெடுக்கும்போதும் நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.

உங்கள் தரவு நீக்கப்படாது

இந்தச் செயல்முறையின் ஒரு பகுதியாக, நீங்கள் பயன்படுத்தும் Google சேவைகளில் இருக்கும் உங்கள் தரவு எதையும் Google நீக்காது. மூன்றாம் தரப்புச் சேவை நகர்த்தும்போது இருக்கும் தரவை Google நகலெடுக்கும். உங்கள் Google கணக்கில் உள்ள தகவலைக் கண்டறிவது, கட்டுப்படுத்துவது மற்றும் நீக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உதவிக்குறிப்புகள்:

  • மூன்றாம் தரப்புச் சேவை உங்கள் அனுமதியைப் பெற்று உங்கள் தரவைப் பதிவிறக்கத் தொடங்கும்போது உள்ள தரவுதான் நகர்த்தப்படும். அனுமதி கேட்கும்போது உள்ள தரவு அல்ல.
  • இந்த இரண்டு செயல்களுக்கும் இடைப்பட்ட நேரத்தில் உங்கள் தரவில் செய்யப்படும் மாற்றங்களும் புதிதாகச் சேர்க்கப்படுபவையும் நகலில் காட்டப்படும்.
  • பதிவிறக்கம் தொடங்கிய பிறகு தரவில் செய்யும் மாற்றங்களும் புதிதாகச் சேர்க்கப்படுபவையும் நகலில் சேர்க்கப்படாமல் போகலாம்.

உங்கள் தரவின் நகலை Google கணக்கில் இருந்து மூன்றாம் தரப்புச் சேவைக்கு நகர்த்தத் தேர்வுசெய்யும்போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் தரவை மட்டுமே Google நகலெடுக்கும். தரவை நகர்த்துவது மூன்றாம் தரப்புச் சேவையின் பொறுப்பாகும்.

முக்கியம்: Google அல்லாத நிறுவனங்கள் மற்றும் டெவெலப்பர்களை மூன்றாம் தரப்புச் சேவைகள் என்கிறோம். நீங்கள் நம்பும் மூன்றாம் தரப்புச் சேவைகளுக்கு மட்டுமே உங்கள் தரவின் நகலை நகர்த்தவும். ஆபத்துகள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் தரவின் நகலை நகர்த்துதல்

மூன்றாம் தரப்புச் சேவை உங்களின் தரவுகள் சிலவற்றுக்கான அணுகலைக் கேட்பதால், இந்தச் செயல்முறை எப்போதும் அவர்களின் ஆப்ஸ் அல்லது இணையதளத்தில் தொடங்கும். அங்கு உங்களுக்கு இந்த விருப்பம் எப்படிக் காட்டப்படும் என்பதையோ எந்த இடத்தில் காட்டப்படும் என்பதையோ Google கட்டுப்படுத்தாது.

உங்களின் சில தரவுகளின் நகலை நகர்த்த முடிவு செய்தால்:

  • உங்கள் Google கணக்கில் உள்நுழையும்படி கேட்கப்படலாம்.
  • வழிமுறைகளைக் கவனமாகப் படித்துப் பார்த்துவிட்டு, உங்கள் தரவின் நகலையும் மூன்றாம் தரப்புச் சேவை அணுகக்கூடிய தரவையும் நகர்த்துவது குறித்து முடிவு செய்யவும்.
  • மூன்றாம் தரப்புச் சேவையினால் நகர்த்தப்படும் வகையில் உங்கள் தரவின் நகல் தயாராகும்.
  • தரவை நகர்த்திய பிறகு, அந்தத் தரவின் நகலைப் பாதுகாப்பாகவும் தனிப்பட்டதாகவும் வைத்திருப்பது மூன்றாம் தரப்புச் சேவையின் பொறுப்பாகும்.

உதவிக்குறிப்பு: நகலெடுக்கப்படும் தரவின் அளவு, நகலை மூன்றாம் தரப்புச் சேவை நகர்த்தத் தொடங்கும் நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் செயல்முறை முடிவதற்குச் சில மணிநேரங்கள் அல்லது நாட்கள் ஆகலாம்.

கருத்தைச் சமர்ப்பித்தல்

இந்தக் கட்டுரையில் விளக்கப்படாத சிக்கல்களை நீங்கள் எதிர்கொண்டால் உங்கள் கருத்தை எங்களுக்கு அனுப்பலாம்.

பொதுவான கேள்விகள்

எந்தெந்த இடங்களில் இந்த அம்சம் கிடைக்கிறது?
முக்கியம்: நீங்கள் வசிக்கும் இடத்தில் இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியாதபோது, காப்புப்பிரதி அம்சத்தை மூன்றாம் தரப்புச் சேவை ஆதரித்தால், உங்கள் தரவின் காப்புப் பிரதியை Google Takeout மூலம் நீங்கள் உருவாக்கலாம். பின்னர் அந்தக் காப்புப் பிரதியை மூன்றாம் தரப்புச் சேவைக்கு நீங்கள் பதிவேற்றலாம்.
உங்கள் Google தரவின் நகலை Googleளைச் சாராத சேவைகளுக்கு நகர்த்துவதற்கான வசதி பின்வரும் நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ளது:
  • ஆஸ்திரியா
  • பெல்ஜியம்
  • பல்கேரியா
  • குரோஷியா
  • சைப்ரஸ்
  • செக் குடியரசு
  • டென்மார்க்
  • எஸ்டோனியா
  • ஃபின்லாந்து
  • ஃபிரான்ஸ்
  • ஜெர்மனி
  • கிரீஸ்
  • ஹங்கேரி
  • அயர்லாந்து
  • இத்தாலி
  • லாத்வியா
  • லிதுவேனியா
  • லக்சம்பர்க்
  • மால்டா
  • நெதர்லாந்து
  • போலந்து
  • போர்ச்சுகல்
  • ரோமானியா
  • ஸ்லோவாக்கியா
  • ஸ்லோவேனியா
  • ஸ்பெயின்
  • ஸ்வீடன்
  • சுவிட்சர்லாந்து
  • யுனைடெட் கிங்டம்

உங்கள் கணக்கு எந்த நாட்டுடன் தொடர்புடையது என்பதை Google எப்படித் தீர்மானிக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

மேலே பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளில் உள்ள அனைத்து பயனர்களும் இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியுமா?

இல்லை, உங்கள் Google கணக்கைப் பொறுத்து இந்த அம்சம் உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பின்வரும் சூழல்களில் உங்கள் கணக்கினால் இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியாமல் போகலாம்:

எனது தரவை நகலெடுப்பதற்கான செயல்முறையில் பிழையோ சிக்கலோ ஏற்பட்டால் என்ன செய்வது?

இந்தக் காரணங்களால் Google உங்கள் தரவை நகலெடுக்க முடியாமல் போகலாம்:

  • தரவு அணுகத்தக்கதாக இல்லை. நீங்கள் நகலெடுக்க விரும்பும் சரியான தரவு வகை உங்களிடம் இருப்பதை உறுதிசெய்ய மீண்டும் சரிபார்க்கவும்.
  • முந்தைய கோரிக்கை செயலில் இருக்கும்போதே புதிய கோரிக்கையைச் சமர்ப்பித்துள்ளீர்கள். இந்தச் சூழலில் இரண்டு கோரிக்கைகளில் ஒன்று தோல்வியடையலாம். நீங்கள் புதிதாக ஒரு கோரிக்கையைச் சமர்ப்பிக்கும் முன், நிலுவையில் உள்ள அனைத்து கோரிக்கைகளும் நிறைவடையும் வரை காத்திருக்கவும்.
  • உங்கள் தரவை நகலெடுக்கும் செயல்முறையில் பிழை ஏற்பட்டது. அப்படி ஏற்படும்போது, செயல்முறையை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து செய்து பார்க்கவும்.

நகல் உருவான பிறகு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், மூன்றாம் தரப்புச் சேவையை நேரடியாகத் தொடர்புகொள்ளவும்.

எந்தெந்த Google தயாரிப்புகளில் இருந்து தரவை நகலெடுத்து மூன்றாம் தரப்புச் சேவைக்கு நகர்த்தலாம்?

முக்கியம்: Google அல்லாத நிறுவனங்கள் மற்றும் டெவெலப்பர்களை மூன்றாம் தரப்புச் சேவைகள் என்கிறோம். நீங்கள் நம்பும் மூன்றாம் தரப்புச் சேவைகளுக்கு மட்டுமே உங்கள் தரவின் நகலை நகர்த்தவும். ஆபத்துகள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த Google தயாரிப்புகளில் இருந்து சில தரவுகளின் நகலை மூன்றாம் தரப்புச் சேவைகளுக்கு நகர்த்தலாம்:

  • Chrome உலாவி
  • Google Maps
  • Play Store
  • Google Search
  • Google Shopping
  • YouTube
எனது தரவின் நகலை நான் தவறுதலாக நகர்த்திவிட்டால் என்ன செய்வது? அதை நீக்க முடியுமா?
மூன்றாம் தரப்புச் சேவை உங்கள் தரவை எப்படிப் பயன்படுத்துகிறது, எப்படிச் சேமிக்கிறது மற்றும் அதை நீங்கள் எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பதைப் புரிந்துகொள்வதை எப்போதும் உறுதிசெய்துகொள்ளவும். உங்கள் தரவின் நகலை நகர்த்திய பிறகு, அந்தத் தரவை நீக்க முடியுமா என்பதைத் தெரிந்துகொள்ள மூன்றாம் தரப்புச் சேவையைத் தொடர்புகொள்ள வேண்டும்.
நான் எந்தத் தரவின் நகலை நகர்த்தினேன் என்பதை எப்படிப் பார்ப்பது?
கூடுதல் தகவலுக்கு, மூன்றாம் தரப்புச் சேவையைத் தொடர்புகொள்ளவும்.
மூன்றாம் தரப்புச் சேவை எனது தரவைத் தவறாகப் பயன்படுத்தினால் என்ன செய்வது?
வேறு ஏதேனும் தீர்வுகள் இருந்தாலும், மூன்றாம் தரப்புச் சேவை உங்கள் தரவைத் தவறாகப் பயன்படுத்துகிறது, ஸ்பேமை உருவாக்குகிறது, உங்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்கிறது அல்லது தீங்கிழைக்கும் வழிகளில் உங்கள் தரவைப் பயன்படுத்துகிறது என்று நினைத்தால் அது குறித்து Googleளிடமும் புகாரளிக்கலாம். மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையைப் புகாரளித்தல்.

டெவெலப்பர்களுக்கு

டெவெலப்பருக்கான வழிகாட்டி, கூடுதல் பரிந்துரைகள், தகவல் ஆதாரங்கள், கொள்கைகள் ஆகியவற்றைப் பார்க்க, எங்கள் Data Portability API ஆவணத்தைப் பார்க்கவும்.

தொடர்புடைய தகவல்கள்

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12437605123496634229
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false