இணைக்கப்பட்ட உங்கள் Google சேவைகளை நிர்வகித்தல்

முக்கியம்: இந்தக் கட்டுரை ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பயனர்களுக்கு மட்டுமேயானது.

டிஜிட்டல் மார்க்கெட்டுகள் சட்டம் (DMA) என்பது மார்ச் 6, 2024 முதல் நடைமுறைக்கு வந்த ஐரோப்பிய ஒன்றியச் சட்டமாகும். DMAயின்படி, குறிப்பிட்ட சில Google சேவைகளை இணைத்தபடியே வைத்திருப்பதற்கான விருப்பத்தை ஐரோப்பிய ஒன்றியத்தில் Google உங்களுக்கு வழங்குகிறது.

இந்த Google சேவைகளில் அடங்குபவை:

  • Search
  • YouTube
  • விளம்பரச் சேவைகள்
  • Google Play
  • Chrome
  • Google Shopping
  • Google Maps

இணைக்கப்பட்டால், இந்தச் சேவைகள் குறிப்பிட்ட நோக்கங்களுக்காகத் தங்களுக்குள்ளும் பிற Google சேவைகளுடனும் தரவைப் பகிர முடியும். Googleளின் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள அனைத்து வகையான தரவும், இணைக்கப்பட்ட அனைத்து Google சேவைகளுக்கும் இடையே பகிரப்படலாம். கணக்கில் உள்நுழைந்துள்ளபோது நீங்கள் தேடுபவை, பார்க்கும் மற்றும் கேட்கும் வீடியோக்கள் போன்ற செயல்பாடுகள் இதில் அடங்கும்.

உங்கள் Google கணக்கில் என்னென்ன சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன என்பதற்கான உங்கள் தேர்வுகளை நீங்கள் நிர்வகிக்கலாம்.

உதவிக்குறிப்பு: Google சேவைகளை இணைப்பதால் உங்கள் தரவு மூன்றாம் தரப்புச் சேவைகளுடன் பகிரப்படாது.

என்னென்ன சேவைகள் இணைக்கப்பட வேண்டும் என்பதற்கான உங்கள் தேர்வுகளை மாற்றுதல்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் அமைப்புகளைத் திறக்கவும்.
  2. Google அதன் பிறகு Google கணக்கை நிர்வகியுங்கள் அதன் பிறகு தரவு & தனியுரிமை என்பதைத் தட்டவும்.
  3. “இணைக்கப்பட்ட Google சேவைகள்” என்பதற்குக் கீழுள்ள இணைத்துள்ள சேவைகளை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  4. நீங்கள் இணைக்க விரும்பும் சேவைகளைத் தேர்ந்தெடுத்து, அடுத்து என்பதைத் தட்டவும்.
    • உதவிக்குறிப்பு: இங்கே குறிப்பிடப்படாத மற்ற Google சேவைகள் எப்போதும் இணைக்கப்பட்டிருக்கும். மேலும், உங்கள் தனியுரிமை அமைப்புகளைப் பொறுத்து, எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக அவை தங்களுக்குள் தரவைப் பகிர முடியும்.
  5. நீங்கள் தேர்ந்தெடுத்தவற்றைச் சரிபார்த்து, உறுதிப்படுத்து அதன் பிறகு முடிந்தது அதன் பிறகு சரி என்பதைத் தட்டவும்.
உதவிக்குறிப்பு: என்னென்ன சேவைகளை இணைக்க வேண்டும் என்பது தொடர்பான உங்கள் தேர்வுகளை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் சரிபார்த்து மாற்றலாம். 

Related resources 

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1026377575057571707
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false