உங்கள் Google கணக்கில் படத்தைச் சேர்த்தல் அல்லது மாற்றுதல்

பிறர் உங்களை அடையாளம் காணவும், உங்கள் கணக்கில் நீங்கள் உள்நுழைந்துள்ளதைத் தெரிந்துகொள்ளவும் Google கணக்கில் சுயவிவரப் படத்தைச் சேர்க்கலாம். உங்கள் சுயவிவரப் படத்தை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.


முக்கியம்: Google சேவைகள் அனைத்திலும் உங்கள் சுயவிவரப் படம் பயன்படுத்தப்படும். உங்களின் மற்ற படங்கள் பகிரப்படாது. உங்கள் சுயவிவரப் படம் எங்கெல்லாம் காட்டப்படும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

சுயவிவரப் படத்தைச் சேர்த்தல் அல்லது மாற்றுதல்

  1. உலாவியில் myaccount.google.com என்ற தளத்திற்குச் செல்லவும். உங்கள் Google கணக்கில் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  2. மேல் இடதுபுறத்தில் தனிப்பட்ட தகவல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “அடிப்படைத் தகவல்” என்பதற்குக் கீழே "சுயவிவரப் படம்" என்பதைக் கண்டறியவும். அதன் பிறகு உங்கள் பெயரின் முதலெழுத்தையோ தற்போதைய சுயவிவரப் படத்தையோ கொண்ட வட்டத்தைக் கிளிக் செய்யவும்.
    • சுயவிவரப் படத்தைச் சேர்க்க, கீழ்ப்புறத்தில் "சுயவிவரப் படத்தைச் சேர்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • தற்போதைய படத்தை மாற்ற, கீழ்ப்புறத்தில் "மாற்று" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. விளக்கப்படங்களில் இருந்து ஒன்றைத் தேர்வுசெய்யலாம், உங்கள் சாதனத்தில் இருந்து ஒரு படத்தைப் பதிவேற்றலாம் அல்லது உங்கள் Google Photosஸில் இருந்து ஒரு படத்தைத் தேர்வுசெய்யலாம்.
  5. தேவைக்கேற்ப படத்தைச் சுழற்றிச் செதுக்கவும்.
  6. கீழ் இடதுபுறத்தில் உள்ள சுயவிவரப் படமாகச் சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உதவிக்குறிப்புகள்:

  • உங்கள் சுயவிவரப் படம் காட்டப்படும் பெரும்பாலான இடங்களில் நீங்கள் அதைத் தேர்ந்தெடுத்து மாற்றலாம்.
  • முந்தைய சுயவிவரப் படங்களைப் பார்க்க, மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனு More அதன் பிறகு முந்தைய சுயவிவரப் படங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உதவிகரமான தொழில்நுட்பம் அல்லது கீபோர்டு மூலம் படத்தைச் செதுக்குதல்

ஒரு மூலையில் இருந்து படத்தைச் செதுக்குதல்

  1. செதுக்க வேண்டிய படத்தின் ஒரு மூலையைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. படத்தைச் செதுக்க அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தவும்.

செதுக்குவதற்கான முழுச் சதுரத்தையும் நகர்த்துதல்

  1. செதுக்குவதற்கான முழுச் சதுரத்தையும் தேர்ந்தெடுக்கவும்.
  2. செதுக்குவதற்கான சதுரத்தின் இடத்தை மாற்ற அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தவும்.
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
870072439890046438
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false