'Google கணக்கை இணைத்தல்' அம்சத்தின் மூலம் தரவைப் பாதுகாப்பாகப் பகிர Google உங்களுக்கு எப்படி உதவுகிறது?

மேம்பட்ட மற்றும் பிரத்தியேகமான அனுபவங்களைப் பெற, மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையிலுள்ள உங்கள் கணக்குடன் உங்கள் Google கணக்கை நீங்கள் பாதுகாப்பாக இணைக்கலாம்.

Google உங்கள் தரவை எப்படிப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது?

மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையிலுள்ள உங்கள் கணக்குடன் உங்களின் Google கணக்கை இணைக்கும்போது:

  • பொதுவாக மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையுடன் உங்கள் Google கணக்குத் தரவு பகிரப்படாது. உங்கள் Google கணக்கில் இருந்து எந்தவொரு தரவும் பகிரப்படுவதற்கு முன்பு உங்கள் அனுமதி தேவைப்படும்.
  • மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையிலுள்ள உங்கள் கணக்கின் கடவுச்சொல் Googleளுடன் பகிரப்படாது.
  • மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையில் இருந்து 'Google கணக்கை இணைத்தல்' அம்சத்தை நீங்கள் அனுமதிக்கும்போது உங்கள் கணக்குகளை இணைப்பதற்கான தரவை மட்டுமே Google அணுகும்.
  • எப்போது வேண்டுமானாலும் உங்கள் கணக்குகளுக்கு இடையேயான இணைப்பை நீங்கள் அகற்றலாம்.

உங்கள் Google கணக்கை இணைக்கும்போது பகிரப்படும் தரவு

மூன்றாம் தரப்பு எந்தத் தரவைப் பகிரும்?

மூன்றாம் தரப்பு உங்கள் தரவைப் பகிர்வதற்கு முன்பு, மூன்றாம் தரப்புக் கணக்கிற்கான அணுகலை Googleளுக்கு வழங்க வேண்டுமா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையைப் பொறுத்து பின்வரும் விவரங்கள் உங்களுக்குக் காட்டப்படலாம்:

  • மூன்றாம் தரப்புக் கணக்கின் எந்தெந்தப் பகுதிகளை (பொருந்தினால்) Google அணுகலாம்?
  • கணக்கை எந்த அளவுக்கு (பொருந்தினால்) Google அணுகலாம்?
  • உங்கள் சார்பாக Google என்னென்ன செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்?

மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையில் நீங்கள் உருவாக்கியுள்ள ஒரு கணக்குடன் உங்கள் Google கணக்கை இணைக்கும்போது பின்வரும் அனுமதிகள் Googleளுக்கு வழங்கப்படலாம்:

  • உங்கள் கணக்கின் வகையைப் பார்த்தல். உங்கள் சந்தா அல்லது கணக்கு வகையின் அடிப்படையில் எந்தெந்த உள்ளடக்கம் மற்றும் அம்சங்களுக்கான அணுகல் உங்களுக்கு உள்ளது என்பதை Google பார்க்க இது அனுமதிக்கும்.
  • உங்கள் உள்ளடக்கத்தைப் பார்த்தல் அல்லது திருத்துதல். உள்ளடக்கத்தைத் தேடி ஸ்ட்ரீம் செய்தல், உங்கள் பிளேலிஸ்ட்களைத் திருத்துதல், ஒரு சாதனத்தில் பிளே செய்யத் தொடங்கிய வீடியோவை விட்ட இடத்தில் இருந்து வேறொரு சாதனத்தில் பிளே செய்தல் போன்றவற்றைச் செய்ய Googleளை இது அனுமதிக்கும்.
  • நீங்கள் இதுவரை வாங்கியவற்றைப் பார்த்தல். உங்கள் ஷாப்பிங் கார்ட்டில் பொருத்தமான தயாரிப்புகளைச் சேர்க்க Googleளை இது அனுமதிக்கும்.
உங்கள் மூன்றாம் தரப்புக் கணக்கிற்கான அணுகலை Google எப்படியெல்லாம் பயன்படுத்தக்கூடும்?

உங்கள் மூன்றாம் தரப்புக் கணக்கிலிருந்து பெறப்படும் தகவல்களின் மூலம் உங்கள் அனுபவத்தை Google பிரத்தியேகமாக்கலாம். உதாரணமாக, மூன்றாம் தரப்பு ஆப்ஸில் எந்தெந்த ஷோக்களைப் பார்த்துள்ளீர்கள் என்பதை Google TVயில் கண்டறிதல். பிற உதாரணங்கள்:

  • நீங்கள் வாங்கிய இசையைப் பிளே செய்யும்படியோ இணைக்கப்பட்ட இசை ஸ்ட்ரீமிங் ஆப்ஸின் பிளேலிஸ்ட்டில் பாடலைச் சேர்க்கும்படியோ உங்கள் Google Assistantடிடம் சொல்லுதல்.
  • இணைக்கப்பட்ட வீடியோ ஸ்ட்ரீமிங் ஆப்ஸில் Google Search மூலம் ஒரு ஷோவைக் கண்டறிந்து, விட்ட இடத்தில் இருந்து அதைப் பிளே செய்தல்.
  • ஸ்மார்ட் லைட் பல்புகளை ஆன் செய்யும்படியோ ஆஃப் செய்யும்படியோ உங்கள் Google Assistantடிடம் சொல்லுதல்.
உங்கள் தரவு எவ்வளவு காலத்திற்குப் பகிரப்படும்?

உங்கள் Google கணக்கிற்கும் மூன்றாம் தரப்புக் கணக்கிற்கும் இடையேயான இணைப்பு செயலில் உள்ளவரை Googleளும் மூன்றாம் தரப்பும் தரவைப் பகிரலாம்.

உதவிக்குறிப்பு: இணைக்கப்பட்ட Google கணக்கை நீங்கள் நீக்கினால் இதற்கு முன்பு பகிர்ந்துள்ள தரவு பாதிக்கப்படாது.

Google பகிரும் தரவு

மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையில் நீங்கள் உருவாக்கிய கணக்கிற்கான அணுகலை Googleளுக்கு நீங்கள் வழங்கும்போது, அந்தக் கணக்கில் இருந்து Googleளுக்குத் தரவு பகிரப்படும்.

சில சூழல்களில் மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவை Googleளிடம் இருந்து தரவைப் பெறலாம். உதாரணமாக, பின்வருவனவற்றைச் செய்யும்படி மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவை உங்களைக் கேட்கலாம்:

  • ஆப்ஸிலோ சேவையிலோ உள்நுழைய ஏற்கெனவே உங்களிடம் உள்ள Google கணக்கைப் பயன்படுத்துதல்.
  • உங்கள் Google கணக்கிற்கான கூடுதல் அணுகலை மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவைக்கு வழங்குதல்.
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7987857882926123613
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false