மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் சேவைகளுடன் Google கணக்கை இணைத்தல்

'Google கணக்கை இணைத்தல்' அம்சம் மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையில் உள்ள உங்கள் கணக்கின் குறிப்பிட்ட சில அம்சங்களுக்கான அணுகலை Googleளுக்கு வழங்கும். Google அல்லாத நிறுவனங்களும் டெவெலப்பர்களும் மூன்றாம் தரப்பினர் ஆவர்.

உதாரணமாக, இசை ஸ்ட்ரீமிங் சேவையிலுள்ள உங்கள் கணக்கை உங்களின் Google கணக்குடன் இணைத்து Google Assistantடிடம் ஒரு பாடலைப் பிளே செய்யும்படியோ பாட்காஸ்ட்டை மீண்டும் தொடங்கும்படியோ கேட்கலாம்.

முக்கியம்: 'Google கணக்கை இணைத்தல்' அம்சத்தை நீங்கள் பயன்படுத்தும்போது மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையுடன் Google கணக்குத் தரவை நாங்கள் பகிரமாட்டோம். என்னென்ன தரவு பகிரப்படுகிறது என்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் Google கணக்கை எவற்றுடன் எல்லாம் இணைத்துள்ளீர்கள்?

இணைக்கப்பட்ட கணக்குகளைக் காட்டு

இணைக்கப்பட்ட கணக்குகளை நிர்வகிப்பது அல்லது நீக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் Google கணக்கை இணைத்தல்

Google தயாரிப்பில் இருந்து இணைத்தல்

Google Assistant, Google Shopping போன்ற Google தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தும்போது மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையுடன் இணைப்பதற்கான அறிவிப்பு உங்களுக்குக் காட்டப்படலாம்.

இணைக்க:

  1. மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையைத் திறந்து அதன் உள்நுழைவுப் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. Google மூலம் உள்நுழைக என்பதைத் தட்டவும்.
  3. ஏற்கிறேன், இணை என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவைகளைப் பொறுத்து இந்தச் செயல்முறை மாறுபடலாம்.

மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவை அனுமதித்தால் Google தயாரிப்பிலேயே இந்தச் செயல்முறையை நீங்கள் நிறைவுசெய்யலாம்.

சில மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவைகளில், அவற்றின் ஆப்ஸிலேயே Googleளுடன் இணைக்கலாம்.

மூன்றாம் தரப்புச் சேவை அல்லது தளத்தில் இருந்து இணைத்தல்

சில மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவைகளில் அவற்றில் இருந்தே நேரடியாக உங்கள் Google கணக்கை இணைக்கலாம். உங்கள் கணக்கை இணைப்பதற்கான அறிவிப்பு காட்டப்படும்போது:

  1. மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையில், நீங்கள் இணைக்க விரும்பும் Google கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

உதவிக்குறிப்பு: மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவைகளைப் பொறுத்து இந்தச் செயல்முறை மாறுபடலாம்.

'Google கணக்கை இணைத்தல்' அம்சத்தின் பலன்கள்

பின்வருபவை போன்ற பிரத்தியேக அனுபவங்களைப் பெற இது உதவும்:

  • மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையில் ஆர்டர் செய்ய Google Assistantடைப் பயன்படுத்துதல்.
  • ஸ்ட்ரீமிங் சேவையில் இசையைப் பிளே செய்தல்.
  • லைட்டுகள், தெர்மோஸ்டாட் போன்ற இணைக்கப்பட்ட ஸ்மார்ட் வீட்டுச் சாதனங்களை Google Home ஆப்ஸ், Google Assistant ஆகியவற்றின் மூலம் கட்டுப்படுத்துதல்.
  • எந்த ஒரு சாதனத்திலும் Google TVயின் மூலம், இதுவரை பார்த்தவற்றைக் கண்டறிதல்.

இணைக்கப்பட்ட கணக்குகள் தொடர்பான பொதுவான கேள்விகள்

இணைக்கப்பட்ட கணக்குகளை நிர்வகிப்பது அல்லது நீக்குவது எப்படி?

முக்கியம்: இணைப்பை நீக்கினால் மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையில் உங்கள் Google கணக்கின் மூலம் சில அம்சங்களை உங்களால் பயன்படுத்த முடியாமல் போகலாம்.

உங்கள் Google கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள ஆப்ஸ் அல்லது சேவைகளைப் பார்க்க:

  1. மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவைகள் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. இணைப்புகளின் பட்டியலில் இருந்து தேவையான மூன்றாம் தரப்பு ஆப்ஸையோ சேவையையோ கண்டறியவும்.
  3. விவரங்களைக் காட்டு என்பதைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.
    • விருப்பத்திற்குரியது: அனைத்து இணைப்புகளையும் நீக்கு என்பதைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.

இணைப்புகளைச் சரிபாருங்கள்

Google கணக்கு இல்லாமலேயே 'Google கணக்கை இணைத்தல்' அம்சத்தைப் பயன்படுத்த முடியுமா?

முடியாது, 'Google கணக்கை இணைத்தல்' அம்சத்தைப் பயன்படுத்த ஒரு Google கணக்கும், மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையில் ஒரு கணக்கும் உங்களுக்குத் தேவை. கணக்கை இணைப்பதன் ஒரு பகுதியாக உங்கள் Google கணக்கிலும் நீங்கள் உள்நுழைய வேண்டும்.

‘Google கணக்கை இணைத்தல்’ அம்சமும் “Google மூலம் உள்நுழைக” அம்சமும் ஒன்றா?

இல்லை, உங்கள் Google கணக்கின் மூலம் மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவைகளில் நீங்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் உள்நுழைய “Google மூலம் உள்நுழைக” அம்சம் உதவுகிறது. Google மூலம் உள்நுழைக அம்சம் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையின் அம்சங்களை உங்கள் Google கணக்கின் மூலம் பயன்படுத்த, மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையிலுள்ள உங்கள் தரவை Googleளுடன் பகிர இந்த அம்சம் அனுமதிக்கிறது. என்னென்ன தரவு பகிரப்படுகிறது என்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

எந்தெந்த Google தயாரிப்புகளில் இருந்து மூன்றாம் தரப்புக் கணக்குகளை இணைக்கலாம்?

பின்வருவன போன்ற Google தயாரிப்புகளில் இருந்து மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையுடன் உங்கள் Google கணக்கை இணைக்கலாம்:

  • Google Assistant: மூன்றாம் தரப்பு ஆப்ஸிலோ சேவையிலோ ஆர்டர் செய்யலாம்.
  • Google Home: லைட்டுகள், தெர்மோஸ்டாட் போன்ற இணைக்கப்பட்ட ஸ்மார்ட் வீட்டுச் சாதனங்களைக் கட்டுப்படுத்தலாம்.
  • Google TV: மேம்பட்ட பரிந்துரைகளைப் பெறலாம் அல்லது பார்த்த உள்ளடக்கத்தை வேறொரு சாதனத்தில் ‘தொடர்ந்து பாருங்கள்’ பிரிவில் கண்டறியலாம்.
'Google கணக்கை இணைத்தல்' அம்சத்தைப் பயன்படுத்தினால் எனது Google கணக்குத் தரவு பகிரப்படுமா?

சில சூழல்களில், குறிப்பிட்ட சில தகவல்கள் பகிரப்படலாம். இருப்பினும், பகிரப்படுவதற்கு முன்பு நீங்கள் ஒப்புதல் வழங்க வேண்டியிருக்கும். பயன்படுத்துவதற்குத் தேவைப்படும் தரவை மட்டுமே மூன்றாம் தரப்பு ஆப்ஸோ சேவையோ Googleளுடன் பகிரும். என்னென்ன தரவு பகிரப்படுகிறது என்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

நான் பல Google கணக்குகளைப் பயன்படுத்தினால் எந்தக் கணக்கு இணைக்கப்படும்?

நீங்கள் உள்நுழைந்துள்ள Google கணக்கையே நாங்கள் பயன்படுத்துவோம். வேறொரு Google கணக்கை இணைக்க விரும்பினால், மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையுடன் கணக்கை இணைப்பதை நிறைவுசெய்வதற்கு முன்பு அந்தக் கணக்கிற்கு நீங்கள் மாற வேண்டும்.

மூன்றாம் தரப்பு ஆப்ஸிலோ சேவையிலோ நான் கணக்கு வைத்திருக்க வேண்டுமா?

ஆம்: கணக்கை இணைப்பதை நிறைவுசெய்ய மூன்றாம் தரப்பு ஆப்ஸிலோ சேவையிலோ உங்களுக்குக் கணக்கு இருக்க வேண்டும். மூன்றாம் தரப்புக் கணக்கு உங்களுக்கு இல்லை என்றால் கணக்கை உருவாக்குவதற்கான அறிவிப்பு காட்டப்படலாம்.

'Google கணக்கை இணைத்தல்' அம்சத்தை எங்கெல்லாம் பயன்படுத்துகிறேன் என்பதை எப்படிக் கண்காணிப்பது?

உங்கள் Google கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் சேவைகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7170126708632205855
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false