உங்கள் Google கணக்கிற்கும் மூன்றாம் தரப்புக்கும் இடையிலான இணைப்புகளை நிர்வகித்தல்

உதவிகரமான அம்சங்களைப் பெற, உங்கள் Google கணக்கிற்கும் மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் சேவைகளுக்கும் இடையே தரவைப் பகிரும்படி நீங்கள் தேர்வுசெய்யலாம்.

முக்கியம்: Google அல்லாத நிறுவனங்களும் டெவெலப்பர்களும் மூன்றாம் தரப்பினர் ஆவர். நீங்கள் நம்பும் மூன்றாம் தரப்பினருடன் மட்டுமே உங்கள் தரவைப் பகிருங்கள். அவற்றுடனான இணைப்புகளை உங்கள் அனுமதியின்றி Google அமைக்காது.

மூன்றாம் தரப்பு இணைப்புகள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

உங்களின் தற்போதைய மூன்றாம் தரப்பு இணைப்புகள் அனைத்தையும் சரிபார்க்க:

  1. உங்கள் Google கணக்கில் மூன்றாம் தரப்பு இணைப்புகள் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. பட்டியலில் இருந்து ஆப்ஸையோ சேவையையோ கண்டறியவும்.
  3. நீங்கள் இணைப்புகளைச் சரிபார்க்க விரும்பும் ஆப்ஸையோ சேவையையோ தேர்ந்தெடுக்கவும்.

உதவிக்குறிப்பு: Google Password Managerரில் கடவுச்சொல் சேமிக்கப்பட்டுள்ள ஒரு மூன்றாம் தரப்பு ஆப்ஸையோ சேவையையோ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அந்தப் பக்கத்தில் ஓர் இணைப்பு காட்டப்படும். உங்கள் கடவுச்சொற்களைச் சேமிப்பதும் நிர்வகிப்பதும் பாதுகாப்பதும் எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

மூன்றாம் தரப்பு இணைப்புகளை நிர்வகித்தல்

Google மூலம் உள்நுழைக

மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவைகளில் உங்கள் Google கணக்கின் மூலம் உள்நுழைய, Google மூலம் உள்நுழைக அம்சத்தைப் பயன்படுத்தலாம். புதிய கடவுச்சொல்லை உருவாக்க வேண்டிய அவசியமின்றி வெவ்வேறு பிளாட்ஃபார்ம்களிலும் உலாவிகளிலும் நீங்கள் உள்நுழையலாம்.

இந்த இணைப்புகளைச் சரிபார்த்தல் & நிர்வகித்தல்

Google மூலம் உள்நுழைக அம்சத்தை ஓர் ஆப்ஸிலோ சேவையிலோ பயன்படுத்துவதை நிறுத்த:

முக்கியம்: இந்த இணைப்பை நீக்கினால் அந்த ஆப்ஸிலோ சேவையிலோ தானாகவே உள்நுழையும் செயல்முறையை Google நிறுத்திவிடும். மூன்றாம் தரப்பு ஆப்ஸையோ சேவையையோ இது நீக்காது.

  1. உங்கள் Google கணக்கில் மூன்றாம் தரப்பு இணைப்புகள் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. Google மூலம் உள்நுழைக என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. நீங்கள் இணைப்பை அகற்ற விரும்பும் மூன்றாம் தரப்பு ஆப்ஸையோ சேவையையோ தேர்ந்தெடுத்து அதன் பிறகு விவரங்களைக் காட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • உதவிக்குறிப்பு: அந்த ஆப்ஸ் அல்லது சேவையுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்பு வகைகள் இருந்தால், “{ஆப்ஸ் பெயர்} இல் உள்நுழைய Google எப்படி உதவுகிறது?” என்பதன் கீழ் 'Google மூலம் உள்நுழைக' இணைப்பு காட்டப்படும்.
  4. Google மூலம் உள்நுழைக அம்சத்தைப் பயன்படுத்துவதை நிறுத்து அதன் பிறகு உறுதிசெய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Google மூலம் உள்நுழைக அம்சம் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் தரவைப் பாதுகாப்பாகப் பகிர Google மூலம் உள்நுழைக அம்சம் எப்படி உதவுகிறது?

உங்கள் Google கணக்கை இணைத்தல்
மேம்பட்ட மற்றும் பிரத்தியேக அனுபவங்களைப் பெற, உங்கள் Google கணக்கை மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையுடன் இணைக்கலாம்.

உதாரணமாக: ஓர் இசை ஸ்ட்ரீமிங் சேவையை உங்கள் Google கணக்குடன் இணைப்பதன் மூலம் அந்த ஸ்ட்ரீமிங் சேவையில் இருந்து பாடலைப் பிளே செய்யும்படி உங்கள் Google Assistantடிடம் கேட்கலாம்.

இந்த இணைப்புகளைச் சரிபார்த்தல் & நிர்வகித்தல்

முக்கியம்: இந்த இணைப்பை நீக்கினால் அந்த மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவைக் கணக்கிற்கான அணுகலை Google இழக்கும். இந்த இணைப்பு இருந்தால் மட்டுமே செயல்படக்கூடிய அம்சங்களை உங்கள் Google கணக்கில் நீங்கள் உள்நுழைந்துள்ள எந்தவொரு சாதனத்திலும் பயன்படுத்த முடியாது.

மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவைக்கான Googleளின் அணுகலை அகற்ற:

  1. உங்கள் Google கணக்கில் மூன்றாம் தரப்பு இணைப்புகள் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. இணைக்கப்பட்ட கணக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. நீங்கள் இணைப்பை அகற்ற விரும்பும் மூன்றாம் தரப்பு ஆப்ஸையோ சேவையையோ தேர்ந்தெடுக்கவும்.
    • உதவிக்குறிப்பு: அந்த ஆப்ஸ் அல்லது சேவையுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்பு வகைகள் இருந்தால், “{ஆப்ஸ் பெயர்} கணக்கிற்கான குறிப்பிட்ட அணுகல் Googleளுக்கு உள்ளது” என்பதன் கீழ் இந்த இணைப்பு காட்டப்படும்.
  4. நீங்கள் அகற்ற விரும்பும் மூன்றாம் தரப்புக் கணக்கிற்கு அடுத்துள்ள இணைப்பை நீக்கு அதன் பிறகு உறுதிசெய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உதவிக்குறிப்பு: இணைப்பை நீக்கும் முன்பு, Googleளுடன் அந்த மூன்றாம் தரப்பு என்ன வகையான தகவல்களைப் பகிர்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அதன் தனியுரிமைக் கொள்கையைப் படித்துப் பாருங்கள்.

Googleளுடன் தகவல்களைப் பகிரும் மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் சேவைகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் Google கணக்கிற்கான அணுகலை மூன்றாம் தரப்புடன் பகிர்தல்

உங்கள் Google கணக்கிற்கான குறிப்பிட்ட அணுகலை மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவைகளுக்கு நீங்கள் வழங்கலாம்.

உதாரணமாக, ஒரு ஃபிட்னஸ் ஆப்ஸ் மூலம் நீங்கள் பதிவுசெய்துள்ள உடற்பயிற்சி வகுப்புகளை உங்களுக்குக் காட்ட Google Calendarருக்கான அணுகலை அந்த ஆப்ஸ் கோரலாம்.

முக்கியம்: உங்கள் Google கணக்கிற்கான அணுகலை ஒரு மூன்றாம் தரப்பிற்கு வழங்கும் முன், அதன் தனியுரிமைக் கொள்கையையும் பாதுகாப்பு வெளியிடுதல்களையும் படித்துப் பாருங்கள். இதன் மூலம் மூன்றாம் தரப்பு ஆப்ஸோ சேவையோ உங்கள் தரவை எப்படிப் பயன்படுத்துகிறது, எப்படிப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது போன்ற விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

இந்த இணைப்புகளைச் சரிபார்த்தல் & நிர்வகித்தல்

மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவைக்கான அணுகலைச் சரிபார்க்க அல்லது அகற்ற:

முக்கியம்: அணுகலை அகற்றினால் மூன்றாம் தரப்பு ஆப்ஸோ சேவையோ உங்கள் Google கணக்கை அணுக முடியாது. இதனால் சில அம்சங்கள் உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.

  1. உங்கள் Google கணக்கில் மூன்றாம் தரப்பு இணைப்புகள் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. Google கணக்கிற்கு அணுகல் உள்ளவை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. நீங்கள் சரிபார்க்க விரும்பும் ஆப்ஸையோ சேவையையோ தேர்ந்தெடுக்கவும்.
    • உங்கள் Google கணக்கிற்கான குறிப்பிட்ட அணுகல் உள்ள மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவைகளை வடிகட்ட, இதற்கான அணுகல் என்பதைத் தேர்ந்தெடுத்து ஒரு Google தயாரிப்பையோ வேறு அணுகல் என்பதையோ தேர்வுசெய்யவும்.
  4. விவரங்களைக் காட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • உதவிக்குறிப்பு: அந்த ஆப்ஸ் அல்லது சேவையுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்பு வகைகள் இருந்தால், “உங்கள் Google கணக்கிற்கான குறிப்பிட்ட அணுகல் {ஆப்ஸ் பெயர்}க்கு உள்ளது” என்பதன் கீழ் இந்த இணைப்பு காட்டப்படும்.
  5. அந்த மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையிடம் உள்ள உங்கள் Google கணக்கிற்கான அணுகலைச் சரிபார்க்கவும்.
  6. ஆப்ஸ் அல்லது சேவையிடம் உள்ள அணுகலை அகற்ற விரும்பினால் அணுகலை அகற்று அதன் பிறகு உறுதிசெய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையைப் புகாரளித்தல்

ஒரு மூன்றாம் தரப்பு ஆப்ஸோ சேவையோ உங்கள் தரவைத் தவறாகப் பயன்படுத்துவதாக நினைத்தால்:

  1. உங்கள் Google கணக்கில் மூன்றாம் தரப்பு இணைப்புகள் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. Google கணக்கிற்கு அணுகல் உள்ளவை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. நீங்கள் சரிபார்க்க விரும்பும் ஆப்ஸையோ சேவையையோ தேர்ந்தெடுக்கவும்.
  4. விவரங்களைக் காட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. பக்கத்தின் கீழ்ப்புறத்தில், இந்த ஆப்ஸைப் புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. படிவத்தை நிரப்பிவிட்டு, சமர்ப்பி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் Google கணக்கிற்கான அணுகல் உள்ள மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் சேவைகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் தரவையும் தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாப்பதில் Google எப்படி உதவுகிறது?

  • உங்கள் Google கணக்கின் கடவுச்சொல்லை எந்தவொரு மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையுடன் Google பகிராது.
  • உங்கள் Google கணக்கிலிருந்து மூன்றாம் தரப்பிற்கு என்னென்ன வகையான தரவு பகிரப்பட ஒப்புதல் அளித்துள்ளீர்கள் என்பதைச் சரிபார்க்கலாம்.
  • உங்கள் Google கணக்கிற்கான மூன்றாம் தரப்பின் அணுகலை எப்போது வேண்டுமானாலும் அகற்றலாம்.

முக்கியம்: உங்கள் Google கணக்கிற்கும் மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவைக்கும் இடையிலான இணைப்பை அகற்றினாலும், நீங்கள் அதனுடன் ஏற்கெனவே பகிர்ந்த தரவு அதில் தொடர்ந்து இருக்கக்கூடும். மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவையுடன் பகிரப்பட்டுள்ள தரவை நீக்குவது தொடர்பான விவரங்களுக்கு அந்த ஆப்ஸ் அல்லது சேவையின் இணையதளத்தைப் பார்க்கவும்.

தொடர்புடைய தகவல்கள்

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15769460008976605517
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false