வீடு மற்றும் பணியிட அமைப்புகளை அமைத்தல்

Google தயாரிப்புகளில் உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க உங்கள் Google கணக்கில் உள்ள வீடு மற்றும் பணியிட முகவரிகளைப் பயன்படுத்தலாம்.

உங்கள் Google கணக்கில் வீடு மற்றும் பணியிட முகவரிகளை அமைத்தால் அதிகத் தொடர்புடைய முடிவுகளையும் வேகமான வழிகாட்டுதல்களையும் பெறலாம். Google முழுவதும் உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க உங்கள் முகவரிகளைப் பயன்படுத்துவோம். உதாரணத்திற்கு, உங்கள் வீட்டிற்கு அருகிலான தேடல் முடிவுகள், பணியிடம் செல்வதற்கான வழிகள், அதிகத் தொடர்புடைய விளம்பரங்கள் ஆகியவற்றைக் காட்ட முடியும். உங்கள் Google கணக்கில் இருந்து எப்போது வேண்டுமானாலும் முகவரிகளை நீங்கள் நீக்கலாம்.

வீடு அல்லது பணியிட முகவரியைச் சேர்த்தல் அல்லது மாற்றுதல்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில், சாதனத்தின் அமைப்புகள் ஆப்ஸை திறக்கவும்.
  2. Google அதன் பிறகு Google கணக்கை நிர்வகியுங்கள் அதன் பிறகு தனிப்பட்ட தகவல் என்பதைத் தட்டவும்.
  3. "முகவரிகள்" என்பதன் கீழ் வீடு அல்லது பணியிடம் என்பதைத் தட்டவும்.
  4. முகவரியை டைப் செய்யவும்.
  5. சேமி என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் வீடு மற்றும் பணியிட முகவரியை உங்களால் மட்டுமே அணுக முடியும். உங்கள் Google கணக்கில் ஒரு முகவரியை எல்லோரும் பார்க்கும் வகையில் சேமிக்க வேண்டும் எனில் அதை உங்கள் சுயவிவர முகவரியாகச் சேர்க்கலாம்.

வீடு அல்லது பணியிட முகவரியை அகற்றுதல்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில், சாதனத்தின் அமைப்புகள் ஆப்ஸை திறக்கவும்.
  2. Google அதன் பிறகு Google கணக்கை நிர்வகியுங்கள் அதன் பிறகு தனிப்பட்ட தகவல் என்பதைத் தட்டவும்.
  3. "முகவரிகள்" என்பதன் கீழ் வீடு அல்லது பணியிடம் என்பதைத் தட்டவும்.
  4. அகற்று என்பதைத் தட்டவும்.

வீடு அல்லது பணியிடத்திற்கான வழிகளைப் பின் செய்தல்

Google Mapsஸில் உள்ள “செல்” பிரிவில், உங்களால் பின் செய்யப்பட்ட பயணங்கள் ETA மற்றும் டிராஃபிக் தகவலுடன் காட்டப்படும். உங்களுக்கு விருப்பமான பயணங்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google Maps ஆப்ஸை Maps திறக்கவும்.
  2. உங்கள் வீடு அல்லது பணியிட முகவரியைத் தேடவும்.
  3. வழிகள் Directions என்பதைத் தட்டவும்.
  4. பயண முறையைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. வீடு அல்லது பணியிடம் என்பதைத் தட்டவும்.
  6. கீழே, பின் செய் என்பதைத் தட்டவும்.

வீடு அல்லது பணியிடத்திற்கு ஓர் ஐகானைத் தேர்வுசெய்யவும்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google Maps ஆப்ஸை Maps திறக்கவும்.
  2. சேமித்தவை Save place என்பதைத் தட்டவும்.
  3. "உங்கள் பட்டியல்கள்" என்பதன் கீழே லேபிளிடப்பட்டவை என்பதைத் தட்டவும்.
  4. "வீடு" அல்லது "பணியிடம்" என்பதற்கு அடுத்துள்ள மூன்று புள்ளி மெனுவை தட்டி அதன் பிறகு ஐகானை மாற்று என்பதைத் தட்டவும்.
  5. வீடு அல்லது பணியிடத்திற்கு ஓர் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. சேமி என்பதைத் தட்டவும்.
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8376771878742312315
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false