Google சேவைகளில் இருந்து வரும் மின்னஞ்சல்களை நிர்வகித்தல்

Google சேவைகளுக்கான உங்கள் மின்னஞ்சல் விருப்பத்தேர்வுகளை Google சேவை மின்னஞ்சல்கள் பக்கத்தில் நிர்வகிக்கலாம். அந்தப் பக்கத்தில் செய்திமடல்கள், அறிவிப்புகள் போன்ற Google சந்தாக்களில் இருந்து குழுவிலகலாம்.

முக்கியம்: Google அனுப்பும் சேவை அறிவிப்புகள் போன்ற சில மின்னஞ்சல்களை நீங்கள் பெற விரும்பவில்லை என்று தேர்வுசெய்ய முடியாது.

மின்னஞ்சல் விருப்பத்தேர்வுகளை நிர்வகித்தல்

  1. Android சாதனத்தில் Google Chromeமைத் திறக்கவும்.
  2. மேலே இவற்றில் ஒன்றைச் செய்யலாம்:
    • உங்கள் ஐகான் அதன் பிறகு Google கணக்கை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
    • உள்நுழைக அதன் பிறகு Google கணக்கை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  3. தரவு & தனியுரிமை என்பதைத் தட்டவும்.
  4. “Google சேவை மின்னஞ்சல்கள்” என்பதன் கீழ் உள்ள மின்னஞ்சல் விருப்பத்தேர்வுகளை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.

உங்கள் Google மின்னஞ்சல் சந்தாக்களை நீங்கள் இங்கே நிர்வகிக்கலாம்.

விடுபட்ட சந்தாக்களைக் கண்டறிதல்

உங்கள் சந்தாக்களில் ஏதேனும் விடுபட்டிருந்தால் எங்களுக்குக் கருத்தை அனுப்பலாம்.

விரைவில் Google சேவை மின்னஞ்சல்கள் பக்கத்தில் இருந்து பல Google மின்னஞ்சல் சந்தாக்களை நீங்கள் நிர்வகிக்கலாம். தற்போது, சில சந்தாக்களை மட்டுமே அவற்றின் தயாரிப்புப் பக்கத்தில் இருந்து நிர்வகிக்க முடியும்.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. Google அதன் பிறகு Google கணக்கை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  3. மேலே உள்ள தரவு & தனியுரிமை என்பதைத் தட்டவும்.
  4. “Google சேவை மின்னஞ்சல்கள்” என்பதன் கீழ் உள்ள மின்னஞ்சல் விருப்பத்தேர்வுகளை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  5. கீழ்ப்புறத்தில் உள்ள கருத்தை அனுப்புக என்பதைத் தட்டவும்.

பிழையறிந்து திருத்துதல்

ஒரு சாதனத்தில் மட்டுமே சந்தா காட்டப்படுகிறது

சில சாதனங்களில், சாதனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியில் இருக்கும் சந்தாக்கள் மட்டுமே காட்டப்படும். உதாரணத்திற்கு, உங்கள் சாதனத்தின் மொழி ஆங்கிலம் என அமைக்கப்பட்டிருந்தால் ஆங்கில உள்ளடக்கம் உள்ள சந்தாக்கள் மட்டுமே காட்டப்படலாம்.

புஷ் அறிவிப்புகளைப் பெற விரும்பவில்லை

தற்போது Google சேவை மின்னஞ்சல்கள் பக்கத்தில் இருந்து உங்களால் புஷ் அறிவிப்புகளை நிர்வகிக்க முடியாது. இந்த வசதியை நாங்கள் எதிர்காலத்தில் சேர்க்கக்கூடும்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
9298157118790092933
true
உதவி மையத்தில் தேடுக
false
true
true
true
true
true
70975
false
false
false
false