Google சேவைகளில் இருந்து வரும் மின்னஞ்சல்களை நிர்வகித்தல்

Google சேவைகளில் இருந்து வரும் மின்னஞ்சல்களுக்கான உங்களது விருப்பத்தேர்வுகளை Google சேவை மின்னஞ்சல்கள் பக்கத்தில் நிர்வகிக்கலாம்.

முக்கியம்: Google அனுப்பும் சேவை அறிவிப்புகள் போன்ற சில மின்னஞ்சல்களை நீங்கள் பெற விரும்பவில்லை எனத் தேர்வுசெய்ய முடியாது.

உங்களது பெரும்பாலான Google சந்தாக்கள் தொடர்பான மின்னஞ்சல் விருப்பத்தேர்வுகளை Google சேவை மின்னஞ்சல்கள் பக்கத்தில் நிர்வகிக்கலாம். அந்தப் பக்கத்தில், Google சந்தாக்கள் தொடர்பான செய்திமடல்கள், அறிவிப்புகள் போன்ற மின்னஞ்சல்களில் இருந்து குழுவிலகலாம்.

மின்னஞ்சல் விருப்பத்தேர்வுகளை நிர்வகித்தல்

  1. உங்கள் iPhone அல்லது iPadல் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் வலப்புறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதலெழுத்தைத் தட்டி அதன் பிறகு Google கணக்கை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  3. மேலே உள்ள தரவு & தனியுரிமை என்பதைத் தட்டவும்.
  4. “Google சேவை மின்னஞ்சல்கள்” என்பதன் கீழ் உள்ள மின்னஞ்சல் விருப்பத்தேர்வுகளை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.

உங்கள் Google மின்னஞ்சல் சந்தாக்களை நீங்கள் இங்கே நிர்வகிக்கலாம்.

விடுபட்ட சந்தாக்களைக் கண்டறிதல்

உங்கள் சந்தாக்களில் ஏதேனும் விடுபட்டிருந்தால் எங்களுக்குக் கருத்தை அனுப்பலாம்.

  1. உங்கள் iPhone அல்லது iPadல் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் வலப்புறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதலெழுத்தைத் தட்டி அதன் பிறகு Google கணக்கை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  3. மேலே உள்ள தரவு & தனியுரிமை என்பதைத் தட்டவும்.
  4. “Google சேவை மின்னஞ்சல்கள்” என்பதன் கீழ் உள்ள மின்னஞ்சல் விருப்பத்தேர்வுகளை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  5. கீழ்ப்புறத்தில் உள்ள கருத்தை அனுப்புக என்பதைத் தட்டவும்.

பிழையறிந்து திருத்துதல்

நான் தேடும் சந்தாவை என்னால் கண்டறிய முடியவில்லை

விரைவில் Google சேவை மின்னஞ்சல்கள் பக்கத்தில் இருந்து இன்னும் பல Google மின்னஞ்சல் சந்தாக்களை நீங்கள் நிர்வகிக்கலாம். தற்போது சில சந்தாக்களை அவற்றின் தயாரிப்புப் பக்கத்தில் மட்டுமே உங்களால் நிர்வகிக்க முடியும்.

சந்தா விவரங்கள் ஒரு சாதனத்தில் மட்டுமே காட்டப்படுகிறது

சில சாதனங்களில், சாதனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியில் இருக்கும் சந்தாக்கள் மட்டுமே காட்டப்படும். உதாரணத்திற்கு, உங்கள் சாதனத்தின் மொழி ஆங்கிலம் என அமைக்கப்பட்டிருந்தால் ஆங்கில உள்ளடக்கம் உள்ள சந்தாக்கள் மட்டுமே காட்டப்படலாம்.

புஷ் அறிவிப்புகளைப் பெற விரும்பவில்லை

தற்போது Google சேவை மின்னஞ்சல்கள் பக்கத்தில் இருந்து உங்களால் புஷ் அறிவிப்புகளை நிர்வகிக்க முடியாது. இந்த வசதியை நாங்கள் எதிர்காலத்தில் சேர்க்கக்கூடும்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7369176741655467576
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false