அணுகல் தடுக்கப்பட்டுள்ளது: ஆதரிக்கப்படாத OAuth முறையை மூன்றாம் தரப்பு ஆப்ஸ் பயன்படுத்துகிறது

பயனர்கள் பாதுகாப்பாக உள்நுழைவதற்கும், அவர்களின் Google கணக்குத் தரவை மூன்றாம் தரப்பு ஆப்ஸுடன் பகிர்வதற்கும் Google பாதுகாப்பான வழிகளைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு குறைவான அங்கீகரிப்பு முறைகளைக் கொண்டுள்ள ஆப்ஸ், ஃபிஷிங் மற்றும் ஆப்ஸ் மாறாட்டத் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயங்கள் அதிகப்படியாக உள்ளன. எனவே உங்கள் கணக்கைப் பாதுகாக்க உதவும் வகையில் இதுபோன்ற ஆப்ஸில் இருந்து வரும் Google உள்நுழைவுக் கோரிக்கைகள் தடுக்கப்படும்.

மூன்றாம் தரப்பு ஆப்ஸுடன் உங்கள் தரவு எப்படிப் பகிரப்படுகிறது என்பதைப் பற்றி மேலும் அறிக

தவறான கோரிக்கையை ஆப்ஸ் அனுப்பியது

ஆதரிக்கப்படாத அங்கீகரிப்பு முறையைப் பயன்படுத்துவதற்காக ஆப்ஸ் தடைசெய்யப்பட்டிருந்தால், “அணுகல் தடுக்கப்பட்டது: ஆப்ஸ் தவறான கோரிக்கையை அனுப்பியது” என்ற செய்தி இருக்கும் “பிழை 400” பக்கம் காட்டப்படலாம்.

இந்தப் பிழை காட்டப்பட்டால் என்ன செய்வது?

ஆப்ஸின் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்தவில்லை எனில் அதைச் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பித்து மீண்டும் முயலவும்.

  • ஆப்ஸ் நிறுவப்பட்டுள்ள ஆப்ரேட்டிங் சிஸ்டம் காலாவதியாகிவிட்டால் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தைச் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கவும்.

ஆப்ஸ் டெவெலப்பரைத் தொடர்புகொண்டு, கூடுதல் பாதுகாப்புள்ள அங்கீகரிப்பு முறைகளைப் பயன்படுத்தும் வகையில் ஆப்ஸை மேம்படுத்துமாறு நீங்கள் கேட்கலாம்.

டெவெலப்பரின் தொடர்புத் தகவலைக் கண்டறிய:

  1. மூன்றாம் தரப்பு ஆப்ஸிற்குச் செல்லவும்.
  2. "Google மூலம் உள்நுழைக" செயல்பாட்டைத் தொடங்கவும்.
  3. "Google மூலம் உள்நுழைக" என்ற ஒப்புதல் திரையில் ஆப்ஸின் பெயரைக் கிளிக் செய்து, டெவெலப்பரின் தொடர்பு மின்னஞ்சல் முகவரியைப் பார்க்கவும்.

ஆப்ஸ் டெவெலப்பர்களுக்கான தகவல்கள்

iOS, Android, Chrome ஆப்ஸ் OAuth கிளையண்ட் வகைகளுக்கு லூப்பேக் IP முகவரி முறையையோ மற்ற கிளையண்ட் வகைகளுக்கு Out-Of-Band முறையையோ உங்கள் ஆப்ஸ் பயன்படுத்தினால் நீங்கள் கூடுதல் பாதுகாப்பான வேறொரு முறைக்கு மாற வேண்டியிருக்கும். விரிவான வழிமுறைகளுக்கு, Out-Of-Band (OOO) செயல்முறையின் புதிய பதிப்பிற்கான வழிகாட்டியையும் லூப்பேக் IP முகவரி செயல்முறையின் புதிய பதிப்பிற்கான வழிகாட்டியையும் பார்க்கவும்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6471528270305000358
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false