உங்கள் ஆன்லைன் நற்பெயரை நிர்வகித்தல்

இப்போதெல்லாம், இணையத்தில் தனிப்பட்ட தகவல்கள் அதிகளவில் கிடைக்கின்றன. உதாரணமாக, உங்கள் நண்பர்கள் சிலர் சமூக வலைதளத்தில் உங்கள் பெயரைக் குறிப்பிடலாம், ஆன்லைன் படங்களில் உங்களைக் குறியிடலாம் அல்லது வலைப்பதிவு இடுகைகளிலோ கட்டுரைகளிலோ உங்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

உங்களைப் பற்றி வெளியிடப்பட்ட தகவல்களைப் பெரும்பாலும் Google Searchசில் முதலில் தேடிப் பார்ப்பார்கள். உங்கள் ஆன்லைன் நற்பெயரை நிர்வகிக்கவும் Googleளில் உங்களைப் பற்றிப் பிறர் தேடும்போது என்ன காட்டப்பட வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்த உதவவும் இங்கே சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன:

1. உங்களைப் பற்றித் தேடுங்கள்

உங்களைப் பற்றி என்னென்ன தகவல்கள் காட்டப்படுகின்றன என்பதைப் பார்க்க Googleளில் உங்கள் பெயரை டைப் செய்து தேடிப் பாருங்கள்.

2. Google கணக்கை உருவாக்குங்கள்

Google கணக்கு மூலம் Google சேவைகள் முழுவதிலும் பிறர் உங்களைப் பற்றிப் பார்க்கும் தகவல்களான சுயவிவரம், தொடர்பு விவரங்கள், இன்ன பிற விவரங்கள் போன்ற தகவல்களை நிர்வகிக்கலாம்.

3. தேவையற்ற உள்ளடக்கத்தையும் அது தொடர்புடைய தேடல் முடிவுகளையும் அகற்றுதல்

ஆன்லைனில் காட்டப்படக் கூடாது என நீங்கள் கருதும் உங்களைப் பற்றிய தகவல் (உதாரணம்: உங்கள் ஃபோன் எண், தகாத படம் போன்றவை) எதையாவது ஆன்லைனில் நீங்கள் பார்த்தால் முதலில் அந்தத் தகவலைக் கட்டுப்படுத்துவது நீங்களா அல்லது வேறொருவரா என்பதைக் கண்டறியுங்கள். தேவையில்லாத உள்ளடக்கம் நீங்கள் கட்டுப்படுத்தாத தளத்திலோ பக்கத்திலோ உள்ளது எனில் Googleளில் இருந்து தனிப்பட்ட தகவல்களை அகற்றுதல் என்பதில் கொடுக்கப்பட்டுள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்றலாம்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16270087412491530154
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false