முக்கியம்:
- சில நாடுகளில் இந்த அம்சம் கிடைக்காது.
- உங்கள் பணி, பள்ளி அல்லது பிற நிறுவனத்தின் மூலம் உங்கள் Google கணக்கு அமைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த அம்சம் கிடைக்கும்.
உங்கள் தனிப்பட்ட தகவலை மாற்றுதல்
உங்கள் சுட்டுப்பெயர் போன்ற தனிப்பட்ட தகவலை நீங்கள் திருத்தலாம்.
- Google கணக்குப் பக்கத்திற்குச் செல்லவும்.
- நபர்களும் பகிர்தலும் என்பதைக் கிளிக் செய்யவும்.
- “பிறருக்கு என்னென்ன தகவல்கள் காட்டப்படலாம்” என்பதற்குக் கீழ், என்னைப் பற்றி என்பதைக் கிளிக் செய்யவும்.
- சுட்டுப்பெயர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- தேவையான மாற்றங்களைச் செய்யவும்.
உதவிக்குறிப்பு: உங்கள் சுட்டுப்பெயர்களை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். Google சேவைகள் எல்லாவற்றிலும் உங்களைப் பற்றி எவற்றையெல்லாம் பிறர் பார்க்கலாம் என்பதைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
சுட்டுப்பெயர்கள் என்றால் என்ன?
உங்களை எப்படிக் குறிப்பிட வேண்டும் என்பதைப் பிறர் அறிந்துகொள்ள சுட்டுப்பெயர்கள் உதவுகின்றன. தகவல்தொடர்பை மேம்படுத்துவதுடன் மரியாதைக்குரிய அடையாளமாகவும் அவை விளங்குகின்றன.
சுட்டுப்பெயர்கள் அம்சம் சில மொழிகளிலும் பிராந்தியங்களிலும் தற்போது கிடைக்கவில்லை. தற்போதைய மொழி அமைப்புகள் எதுவாக இருப்பினும் சுட்டுப்பெயர்கள் அமைக்கப்பட்டுள்ள மொழிகளில் அவை காட்டப்படும்.
உங்கள் Google கணக்கில் “சுட்டுப்பெயர்கள்” பிரிவில் நீங்கள்:
- ஏற்கெனவே இருக்கும் சுட்டுப்பெயர்கள் தொகுப்பில் இருந்து ஒன்றைத் தேர்வுசெய்யலாம்.
- பிரத்தியேகச் சுட்டுப்பெயர்களைச் சேர்க்கலாம்.
- சுட்டுப்பெயர்களை அமைக்க வேண்டாம் எனத் தேர்வுசெய்யலாம்.
- உங்கள் சுட்டுப்பெயர்களை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதைத் தேர்வுசெய்யலாம்.
உங்கள் சுட்டுப்பெயர்களை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதைத் தேர்வுசெய்தல்
Google தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தும் பிற பயனர்களுக்கு இயல்பாகவே உங்கள் சுட்டுப்பெயர்கள் காட்டப்படாது. சுட்டுப்பெயர்களை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதைத் தேர்வுசெய்ய, உங்கள் Google கணக்கில் “என்னைப் பற்றி” பிரிவிற்குச் சென்று “எனக்கு மட்டும்”, “எனது நிறுவனத்திற்கு” அல்லது “அனைவருக்கும்” என்று தெரிவுநிலையை மாற்றவும்.
உங்கள் சுட்டுப்பெயர்களை Google எப்படிப் பயன்படுத்துகிறது?
உங்கள் சுட்டுப்பெயர்கள் பிறருக்குக் காட்டப்படலாம் என்பதை நீங்கள் தேர்வுசெய்தால் Gmail, Chat, அல்லது பிற Google தயாரிப்புகளில் பிறர் உங்களின் தொடர்புத் தகவலைப் பார்க்கும்போதோ உங்கள் தோற்றப் படத்தின் மீது கர்சரைக் கொண்டு செல்லும்போதோ அவை காட்டப்படும். Google Meetடில் உங்கள் படத்திற்கு அடுத்ததாகவும் அவை காட்டப்படும்.
விளம்பரங்கள் அல்லது பிற பிரத்தியேகமாக்கல் அம்சங்களுக்காகச் சுட்டுப்பெயர் பயன்படுத்தப்படாது.