உங்கள் கணக்கிற்கான மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் அம்சத்தை நிர்வகித்தல்

Google Chrome மற்றும் Gmailலில் ஃபிஷிங், மால்வேர் ஆகியவற்றுக்கு எதிராகக் கூடுதல் பாதுகாப்பை வழங்க, உங்கள் கணக்கிற்கான மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் அம்சம் உதவும்.
மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் அம்சத்தை இயக்குதல்

உங்கள் கணக்கிற்கான மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் அம்சம் எப்படிச் செயல்படுகிறது?

ஆபத்தான இணையதளங்கள், பதிவிறக்கங்கள், நீட்டிப்புகள் ஆகியவற்றுக்கு எதிராக விரைவாகவும் அதிக முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்பை வழங்க, உங்கள் கணக்கிற்கான மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் அம்சம் பின்னணியில் தானாகச் செயல்படும்.
உங்கள் கணக்கிற்கான மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் அம்சத்தை இயக்கினால், உள்நுழைந்திருக்கும்போது உங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதோடு Google Chrome, Gmail ஆகியவற்றில் உங்கள் பாதுகாப்பையும் அதிகரிக்கும்.
மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் அம்சம் பயன்படுத்தும் தகவல்கள்
உங்கள் கணக்கையும் தரவையும் பாதுகாக்கும் வகையில் உங்கள் கணக்கிற்கான மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் அம்சம் பின்வருபவைகளில் ஆபத்தான உள்ளடக்கம் உள்ளதா எனச் சரிபார்க்கும்:
  • URLகள்
  • பதிவிறக்கங்கள்
  • உலாவி நீட்டிப்புகள்
  • சிஸ்டம் தகவல்கள்
  • இணையப் பக்கங்களின் சிறிய மாதிரி
மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் அம்சம் இந்தத் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறது?
Google:
  • நீங்கள் உள்நுழைந்திருக்கும்போது Google Chrome, Gmail ஆகியவற்றில் உங்களின் பாதுகாப்பை அதிகரிக்க, மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் அம்சத்தில் இருந்து தகவல்களைப் பயன்படுத்தும்.
  • Google ஆப்ஸ் முழுவதிலும் நீங்கள் பாதுகாப்பாக இருக்க, நீங்கள் உள்நுழைந்திருக்கும்போது மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் அம்சத்தில் இருந்து தகவல்களை உங்கள் Google கணக்குடன் தற்காலிகமாக இணைக்கும்.
பாதுகாப்புடன் இருப்பதற்கு இந்தத் தகவல்கள் எவ்வாறு உதவுகின்றன?
பின்வரும் சூழ்நிலைகளில் உதவுவதற்காக இந்தத் தகவல்களை Google பயன்படுத்துகிறது:
  • நிகழ்நேரப் பாதுகாப்பு ஸ்கேனிங் மூலம் உங்களுக்கு எச்சரிக்கை வழங்குதல் அல்லது ஆபத்தான இணையதளங்கள், பதிவிறக்கங்கள், நீட்டிப்புகள் ஆகியவற்றைத் தடுத்தல்.
  • ஃபிஷிங், மால்வேர் ஆகியவற்றைக் கண்டறிந்து உங்களையும் இணையத்தைப் பயன்படுத்தும் அனைவரையும் அவற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் Googleளின் செயல்திறனை மேம்படுத்துதல்.
  • Google ஆப்ஸ் முழுவதிலும் ஆபத்தான இணைப்புகளைப் பயன்படுத்துவதில் இருந்து உங்களுக்குச் சிறப்பான பாதுகாப்பை வழங்குதல்.

உங்கள் கணக்கிற்கான மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் அம்சத்தை நிர்வகித்தல்

  1. எனது Google கணக்கு என்பதற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள, பாதுகாப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. “உங்கள் கணக்கிற்கான மேம்பட்ட பாதுகாப்பு உலாவல்” என்பதற்குச் செல்லவும்.
  4. மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் அம்சத்தை நிர்வகி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் என்பதை இயக்கவும் அல்லது முடக்கவும். 
    • உங்கள் கணக்கிற்கான மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் அம்சத்தை இயக்கினால், பின்வரும் சூழ்நிலையில் Chromeமிலும் மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் அம்சம் இயக்கப்படும்:
    • உங்கள் கணக்கில் மேம்பட்ட பாதுகாப்பு உலாவல் அம்சத்தை முடக்கினால்:
      • இந்த அமைப்பு மாற்றம் நிறைவடைய 24 மணிநேரம் வரை ஆகக்கூடும்.
      • ஆபத்தான இணையதளங்கள், பதிவிறக்கங்கள், நீட்டிப்புகள் ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்க, Google பாதுகாப்பு உலாவல் தொடர்ந்து உதவும்
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10545323350797922414
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false