உங்கள் கணக்கைச் சரிபார்த்தல்

தவறான பயன்பாட்டில் இருந்து உங்களைப் பாதுகாக்க, நீங்கள் கணக்கை உருவாக்கும் முன்போ அதில் உள்நுழையும் முன்போ நீங்கள் ரோபோட் இல்லை என்பதை உறுதிப்படுத்தும்படி சில சமயங்களில் கேட்போம். ஃபோன் மூலம் செய்யப்படும் இந்தக் கூடுதல் உறுதிப்படுத்தல் எங்கள் சிஸ்டங்களை ஸ்பேமர்கள் தவறாகப் பயன்படுத்துவதில் இருந்து தடுக்க உதவுகிறது.

உதவிக்குறிப்பு: உங்கள் கணக்கைச் சரிபார்க்க மொபைல் சாதனம் தேவை.

மெசேஜ் அல்லது குரல் மூலம் சரிபார்ப்பதற்கான கட்டணம்

மெசேஜ் அல்லது குரல் மெசேஜ்கள் மூலம் சரிபார்ப்பதற்கான கட்டணம் உங்கள் திட்டத்தையும், சேவை வழங்கும் நிறுவனத்தையும் பொறுத்து வேறுபடும். ஆனால் பெரும்பாலும் மெசேஜிற்கும் அழைப்பிற்கும் வழக்கமான கட்டணங்களே விதிக்கப்படும். குரல் அழைப்பு விருப்பத்தைத் தேர்வுசெய்யும்போது உங்கள் வீட்டு ஃபோன் எண்களையும் பயன்படுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு உங்கள் மொபைல் சேவை வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்.

சரிபார்ப்புச் சிக்கல்களைச் சரிசெய்தல்

மெசேஜ் வரவில்லையா?

நீங்கள் மக்கள் தொகை அதிகமுள்ள இடத்தில் இருந்தாலோ உங்கள் மொபைல் நெட்வொர்க் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு சரியாகப் பராமரிக்கப்படாமல் இருந்தாலோ மெசேஜ் தாமதமாக டெலிவரி ஆகலாம். சில நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தும் மெசேஜ் வரவில்லை எனில் குரல் அழைப்பு விருப்பத்தைப் பயன்படுத்தவும்.

"இந்த ஃபோன் எண்ணைச் சரிபார்ப்புக்குப் பயன்படுத்த முடியாது"

இந்தப் பிழைச் செய்தி காட்டப்பட்டால் நீங்கள் வேறொரு எண்ணைப் பயன்படுத்த வேண்டும். தவறான பயன்பாட்டில் இருந்து உங்களைப் பாதுகாக்க, ஒவ்வொரு ஃபோன் எண் மூலமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கணக்குகளை உருவாக்கும்படி வரம்புகளை அமைத்திருக்கிறோம். இதற்குப் பதிலாக, குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரின் ஃபோன் எண்ணை நீங்கள் பயன்படுத்தலாம். வேறொரு மொபைல் நிறுவனத்தில் இருந்து பெற்ற எண்ணைப் பயன்படுத்தியும் நீங்கள் உள்நுழையலாம்.

“சரிபார்ப்பதற்காக இந்த மொபைல் எண் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது”

இந்தப் பிழைச் செய்தி காட்டப்பட்டால் நீங்கள் வேறொரு எண்ணைப் பயன்படுத்த வேண்டும். தவறான பயன்பாட்டில் இருந்து உங்களைப் பாதுகாக்க, ஒவ்வொரு ஃபோன் எண் மூலமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கணக்குகளைச் சரிபார்க்கும்படி வரம்புகளை அமைத்திருக்கிறோம். இதற்குப் பதிலாக, குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரின் ஃபோன் எண்ணை நீங்கள் பயன்படுத்தலாம்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4367725579812737977
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false