ஒருங்கிணைந்த கணக்குப் பாதுகாப்பு அம்சம் உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க எப்படி உதவுகிறது?

 

சந்தேகத்திற்குரிய நிகழ்வுகளைக் கண்டறியும் எங்கள் பாதுகாப்புத் தொழில்நுட்பம் உங்கள் Google கணக்கை இன்னும் சிறப்பாகப் பாதுகாக்க உதவுகிறது. ஒருங்கிணைந்த கணக்குப் பாதுகாப்பு அம்சத்தின் மூலம், சந்தேகத்திற்குரிய நிகழ்வுகளைக் கண்டறியும்போது உங்கள் Google கணக்குடன் நீங்கள் இணைத்துள்ள ஆப்ஸுக்கும் சேவைகளுக்கும் நாங்கள் பாதுகாப்பு அறிவிப்புகளை அனுப்ப முடியும். அப்படிச் செய்வதால், உங்களை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்க மூன்றாம் தரப்பு ஆப்ஸும் சேவைகளும் சந்தேகத்திற்குரிய நிகழ்வைக் கண்டறிவதற்கான Googleளின் அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

ஒருங்கிணைந்த கணக்குப் பாதுகாப்பு எப்படிச் செயல்படுகிறது?

எந்தெந்த ஆப்ஸும் சேவைகளும் Googleளிடம் இருந்து பாதுகாப்பு அறிவிப்புகளைப் பெறுகின்றன?

Googleளிடம் இருந்து பாதுகாப்பு அறிவிப்புகளைப் பெற, மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவை:

பாதுகாப்பு அறிவிப்புகள் எப்போது அனுப்பப்படும்?

உங்கள் Google கணக்கில் முக்கியமான நிகழ்வு நடக்கும்போது பாதுகாப்பு அறிவிப்புகள் அனுப்பப்படும். முக்கியமான நிகழ்வுகளுக்கான எடுத்துக்காட்டுகள்:

  • உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படுவது
  • உங்கள் கணக்கு இடைநிறுத்தப்படுவது அல்லது முடக்கப்படுவது
  • உங்கள் சாதனங்கள் அல்லது உலாவிகளில் இருந்து கணக்கு வெளியேற்றப்படுவது
பாதுகாப்பு அறிவிப்புகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?

Google, பங்கேற்கும் ஆப்ஸ் மற்றும் சேவைகள் இந்த நோக்கங்களுக்காகப் பாதுகாப்பு அறிவிப்புகளைப் பயன்படுத்துகின்றன:

  • உங்கள் கணக்கில் சந்தேகத்திற்குரிய செயல்பாட்டை இன்னும் சிறப்பாகக் கண்டறிவது
  • உங்கள் கணக்கைப் பாதுகாப்பதற்கு உதவ, பங்கேற்கும் ஆப்ஸ் அல்லது சேவையில் இருந்து உங்களை வெளியேற்றுவது

ஒருங்கிணைந்த கணக்குப் பாதுகாப்பை நிர்வகித்தல்

இதில் பங்கேற்கும் ஆப்ஸையும் சேவைகளையும் கண்டறிதல்
  1. மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் சேவைகளுக்கான இணைப்புகள் பக்கத்திற்கு செல்லவும்.
    • நீங்கள் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  2. ஓர் ஆப்ஸோ சேவையோ ஒருங்கிணைந்த கணக்குப் பாதுகாப்பில் பங்கேற்றுள்ளதா என்பதைக் கண்டறிய அதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • ஆப்ஸோ சேவையோ ஒருங்கிணைந்த கணக்குப் பாதுகாப்பு பேட்ஜுடன் Cross-account protection icon காட்டப்பட்டால் அது ஒருங்கிணைந்த கணக்குப் பாதுகாப்பில் பங்கேற்றுள்ளதாக அர்த்தம்.
கணக்கிற்கான அணுகலை அகற்றுதல்

ஒருங்கிணைந்த கணக்குப் பாதுகாப்பில் பங்கேற்கும் மூன்றாம் தரப்பு ஆப்ஸையோ சேவையையோ நீங்கள் பயன்படுத்த விரும்பவில்லை என்றால் உங்கள் கணக்கிற்கான அதன் அணுகலை அகற்றிக்கொள்ளலாம்.

மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சேவைக்கான அணுகலை நீங்கள் அகற்றியதும்:

  • இணைப்பு நிறுத்தப்பட்டதற்கான கடைசி அறிவிப்பை ஆப்ஸ் பெறும்.
  • உங்கள் Google கணக்கிற்கான பாதுகாப்பு அறிக்கைகள் இனி ஆப்ஸிற்கு அனுப்பப்படாது.

'Google மூலம் உள்நுழைவைச்' சரிபாருங்கள்

 

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
818869741807898348
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false