ஆப்ஸ் கடவுச்சொற்கள் மூலம் உள்நுழைதல்

உதவிக்குறிப்பு: ஆப்ஸ் கடவுச்சொற்களை நாங்கள் பரிந்துரைப்பதில்லை. பெரும்பாலான நேரங்களில் அவை தேவைப்படுவதும் இல்லை. கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க, உங்கள் Google கணக்குடன் ஆப்ஸை இணைக்கும்போது "Google மூலம் உள்நுழைக" என்ற விருப்பத்தைப் பயன்படுத்தவும்.

ஆப்ஸ் கடவுச்சொல் என்பது 16 இலக்கக் கடவுக்குறியீடாகும். இது பாதுகாப்பு குறைவான ஆப்ஸ் அல்லது சாதனம் உங்கள் Google கணக்கை அணுகுவதற்கு அனுமதி வழங்குகிறது. இருபடிச் சரிபார்ப்பு இயக்கப்பட்டிருக்கும் கணக்குகளுக்கு மட்டுமே ஆப்ஸ் கடவுச்சொற்களைப் பயன்படுத்த முடியும்.

ஆப்ஸ் கடவுச்சொற்களை எப்போது பயன்படுத்தலாம்?

உதவிக்குறிப்பு: iOS 11 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளை உடைய iPhone, iPad சாதனங்களுக்கு ஆப்ஸ் கடவுச்சொற்கள் தேவையில்லை. அதற்குப் பதிலாக 'Google மூலம் உள்நுழைக' அம்சத்தைப் பயன்படுத்துங்கள்.

‘Google மூலம் உள்நுழைக’ அம்சம் ஆப்ஸில் காட்டப்படவில்லை என்றால் இவற்றில் ஒன்றைச் செய்யலாம்:

  • ஆப்ஸ் கடவுச்சொற்களைப் பயன்படுத்துதல்
  • கூடுதல் பாதுகாப்புடைய ஆப்ஸ் அல்லது சாதனத்திற்கு மாறுதல்

ஆப்ஸ் கடவுச்சொற்களை உருவாக்குதல் மற்றும் பயன்படுத்துதல்

முக்கியம்: ஆப்ஸ் கடவுச்சொல்லை உருவாக்க, உங்கள் Google கணக்கில் இருபடிச் சரிபார்ப்பு இயக்கப்பட்டிருக்க வேண்டும்.

நீங்கள் இருபடிச் சரிபார்ப்பை இயக்கியிருந்து, உள்நுழையும்போது "தவறான கடவுச்சொல்" என்ற பிழைச் செய்தி காட்டப்பட்டால் ஆப்ஸ் கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும்.

  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. பாதுகாப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. "Googleளில் உள்நுழைதல்" என்பதற்குக் கீழே உள்ள இருபடிச் சரிபார்ப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. பக்கத்தின் கீழ்ப்புறத்தில் உள்ள ஆப்ஸ் கடவுச்சொற்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. ஆப்ஸ் கடவுச்சொல்லை எங்கு பயன்படுத்துவீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள உதவும் பெயரை டைப் செய்யவும்.
  6. உருவாக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி ஆப்ஸ் கடவுச்சொல்லை டைப் செய்யவும். ஆப்ஸ் கடவுச்சொல் என்பது உங்கள் சாதனத்தில் உருவாக்கப்படும் 16 இலக்கக் கடவுக்குறியீடாகும்.
  8. முடிந்தது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இருபடிச் சரிபார்ப்பை அமைத்த பிறகு ஆப்ஸ் கடவுச்சொல்லைச் சேர்ப்பதற்கான விருப்பம் காட்டப்படவில்லை என்றால் அதற்கு இவை காரணமாக இருக்கலாம்:

உதவிக்குறிப்பு: பொதுவாக, ஒவ்வொரு சாதனம் அல்லது ஆப்ஸிற்கும் ஆப்ஸ் கடவுச்சொல்லை ஒருமுறை டைப் செய்ய வேண்டியிருக்கலாம்.

ஏன் ஆப்ஸ் கடவுச்சொல் தேவைப்படக்கூடும்?

உதவிக்குறிப்பு: உங்கள் கணக்குடன் இணைக்க விரும்பும் ஆப்ஸ் அல்லது சாதனத்தில் "Google மூலம் உள்நுழைக" அம்சம் இருந்தால் ஆப்ஸ் கடவுச்சொல்லை உருவாக்க வேண்டாம்.

இருபடிச் சரிபார்ப்பைப் பயன்படுத்தும்போது, பாதுகாப்பு குறைவான சில ஆப்ஸ் அல்லது சாதனங்கள் உங்கள் Google கணக்கை அணுக முடியாதபடி தடுக்கப்படலாம். தடுக்கப்பட்ட ஆப்ஸ் அல்லது சாதனம் உங்கள் Google கணக்கை அணுகுவதற்கு ஆப்ஸ் கடவுச்சொற்கள் ஒரு வழியாகும்.
கடவுச்சொல் மாற்றப்பட்ட பின் ஆப்ஸ் கடவுச்சொற்கள் அகற்றப்படுதல்

உங்கள் கணக்கைப் பாதுகாக்க, Google கணக்கின் கடவுச்சொல்லை நீங்கள் மாற்றும்போது ஆப்ஸ் கடவுச்சொற்களை அகற்றுவோம். Google கணக்குடன் ஆப்ஸைத் தொடர்ந்து பயன்படுத்த, புதிய ஆப்ஸ் கடவுச்சொல்லை உருவாக்குங்கள்.

உதவிக்குறிப்பு: "Google மூலம் உள்நுழைக" அம்சம் ஆப்ஸில் காட்டப்பட்டால் ஆப்ஸை உங்கள் Google கணக்குடன் இணைக்க அந்த அம்சத்தைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம்.

ஆப்ஸ் கடவுச்சொல் மறந்துவிட்டது

ஒவ்வொரு ஆப்ஸ் கடவுச்சொல்லையும் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் புதிய ஆப்ஸ் கடவுச்சொல்லை உருவாக்கலாம்.

ஆப்ஸ் கடவுச்சொற்களைப் பயன்படுத்தும் சாதனம் தொலைந்துவிட்டால்:

  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. மேலே உள்ள பாதுகாப்பு என்பதைத் தட்டவும்.
  3. ஆப்ஸ் கடவுச்சொற்கள் என்பதைத் தட்டி, தொலைந்த சாதனத்தில் உள்ள ஆப்ஸ் கடவுச்சொற்களை அகற்றலாம். நீங்கள் மீண்டும் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
உங்களால் இப்போதும் உள்நுழைய முடியவில்லை

Google அல்லாத ஆப்ஸைப் பயன்படுத்தும்போது உங்களால் உள்நுழைய முடியவில்லை என்றால் ஆப்ஸின் உள்நுழைவுச் செயல்முறை பாதுகாப்பற்றதாக இருக்கலாம். ஆப்ஸின் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கவும். அதன்பிறகு "Google மூலம் உள்நுழைக" விருப்பம் காட்டப்பட்டால் அதைப் பயன்படுத்தி உள்நுழையவும்.

உதவிக்குறிப்பு: கூடுதல் பாதுகாப்புள்ள ஆப்ஸிற்கும் நீங்கள் மாறலாம்.

ஆப்ஸ் கடவுச்சொற்களை அகற்றுதல்

சாதனத்தை நீங்கள் தொலைத்துவிட்டாலோ ஆப்ஸ் கடவுச்சொல் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஆப்ஸை நீங்கள் பயன்படுத்துவதில்லை என்றாலோ, அதற்கான ஆப்ஸ் கடவுச்சொல்லை அகற்றும்படி பரிந்துரைக்கிறோம். அந்தச் சாதனம் அல்லது ஆப்ஸில் இருந்து உங்கள் Google கணக்கை யாரும் அணுக முடியாதபடி இது பாதுகாப்பை உறுதிசெய்கிறது.

ஆப்ஸ் கடவுச்சொல்லை அகற்ற:

  1. உங்கள் ஆப்ஸ் கடவுச்சொற்களுக்குச் செல்லவும்.
  2. ஆப்ஸ் கடவுச்சொற்கள் உள்ள ஆப்ஸ் பட்டியலில், நீங்கள் கடவுச்சொல்லை அகற்ற விரும்பும் ஆப்ஸைக் கண்டறியவும்.
  3. ஆப்ஸில் இருந்து அணுகலை அகற்ற, அகற்றுவதற்கான ஐகானை Remove கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு:

  • நீங்கள் Android 4.0+ பயனராக இருந்தால், உங்கள் கணக்கிற்கான அணுகல் உள்ள ஆப்ஸில் இருந்து "Android" ஐ அகற்றும்படி பரிந்துரைக்கிறோம்.
  • ஆப்ஸ் கடவுச்சொல்லை நீங்கள் அகற்றிய பின்னர், உங்கள் Google கணக்கை அந்த ஆப்ஸினால் அணுக முடியாது.
Microsoft Outlook தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்தல்
  • "Google மூலம் உள்நுழைக" அம்சத்தைப் பயன்படுத்த:
    • Google கணக்கின் பயனர் பெயரைப் பயன்படுத்தி Outlookகில் உள்நுழையவும். Outlook ஆப்ஸ் அல்லது நிரலின் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துவதை உறுதிசெய்துகொள்ளவும்.
  • ஆப்ஸ் கடவுச்சொல்லைப் பயன்படுத்த:
    • உங்கள் Google கணக்கில் இருபடிச் சரிபார்ப்பு இயக்கப்பட்டிருந்து உங்களால் “Google மூலம் உள்நுழைக” அம்சத்தைப் பயன்படுத்த முடியவில்லை என்றால் அதற்குப் பதிலாக ஆப்ஸ் கடவுச்சொல்லைப் பயன்படுத்தலாம்.
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
844246581625066420
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false