Google Authenticator ஆப்ஸ் மூலம் சரிபார்ப்புக் குறியீடுகளைப் பெறுதல்

இருபடிச் சரிபார்ப்பை அமைத்தால் குறியீடுகளை உருவாக்க Google Authenticator ஆப்ஸைப் பயன்படுத்தலாம். இணைய இணைப்போ மொபைல் சேவையோ இல்லாமல்கூட குறியீடுகளை உருவாக்க முடியும். இருபடிச் சரிபார்ப்பு குறித்து மேலும் அறிக.

உங்கள் சாதனங்கள் அனைத்திலும் Google Authenticator குறியீடுகளை ஒத்திசைத்தே வைத்திருத்தல்

Google கணக்கில் உள்நுழைவதன் மூலம் உங்கள் சாதனங்கள் அனைத்திலும் சரிபார்ப்புக் குறியீடுகளை ஒத்திசைத்தே வைத்திருக்கலாம். இதற்கான விருப்பத்தேர்வு Android சாதனங்களுக்கு Google Authenticator 6.0 பதிப்பிலும் iOS சாதனங்களுக்கு Google Authenticator 4.0 பதிப்பிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தரவு என்க்ரிப்ஷன்
எங்கள் தயாரிப்புகள் அனைத்திலும், தரவு பரிமாறிக்கொள்ளப்படும்போதும் சரி, சேமித்த நிலையிலும் சரி தரவை Google என்க்ரிப்ஷன் செய்கிறது. குறிப்பிட்ட சில தயாரிப்புகளில், முழுமையான என்க்ரிப்ஷன் (E2EE) மூலம் உங்கள் தரவிற்குக் கூடுதல் பாதுகாப்பைப் பெறும் வசதியையும் நாங்கள் வழங்குகிறோம். இருப்பினும், கடவுச்சொல்லை நீங்கள் மறந்துவிட்டால் தரவை நீங்கள் அணுகமுடியாதபடி E2EE அதை நிரந்தரமாகப் பூட்டிவிடக்கூடும். அனைத்துவிதமான விருப்பங்களையும் நீங்கள் பெறுவதை உறுதிப்படுத்த, Google Authenticator போன்ற எங்களின் சில தயாரிப்புகளில் E2EE அம்சத்தை விருப்பத்தேர்வாக விரைவில் வெளியிடவுள்ளோம்.

ஆப்ஸ் தேவைகள்

iPhone, iPod Touch அல்லது iPadல் Google Authenticator ஆப்ஸைப் பயன்படுத்த:

  • உங்கள் சாதனம் சமீபத்திய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இருக்க வேண்டும்
  • இருபடிச் சரிபார்ப்பு இயக்கப்பட்டிருக்க வேண்டும்

உதவிக்குறிப்பு: நீங்கள் iPhone 3G அல்லது அதற்குப் பிந்தைய சாதனத்தைப் பயன்படுத்தினால் Authenticator ஆப்ஸைப் பயன்படுத்த QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

Authenticator ஆப்ஸைப் பயன்படுத்துதல்

INSTALL GOOGLE AUTHENTICATOR

Authenticator ஆப்ஸை அமைத்தல்

  1. iPhone அல்லது iPadல் உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. மேலே உள்ள பாதுகாப்பு என்பதைத் தட்டவும்.
    • தொடக்கத்தில் ‘பாதுகாப்பு’ பிரிவு காட்டப்படவில்லை எனில் அது காட்டப்படும் வரை ஸ்வைப் செய்யவும்.
    • சில சாதனங்களில், பக்கவாட்டு மெனுவில் பாதுகாப்பு பிரிவு காட்டப்படும்.
  3. "கூடுதல் உள்நுழைவு விருப்பங்களைச் சேர்க்கலாம்" என்பதன் கீழுள்ள Authenticator என்பதைத் தட்டவும்.
    • நீங்கள் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  4. அங்கீகரிப்பு ஆப்ஸை அமை என்பதைத் தட்டவும்.
  5. திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

Google Authenticator குறியீடுகளைப் பிற சாதனங்களுக்கு மாற்றுதல்

Google Authenticator மூலம் Google கணக்கில் உள்நுழைகிறீர்கள் எனில் உங்கள் குறியீடுகள் நீங்கள் பயன்படுத்தும் புதிய சாதனத்திற்குத் தானாகவே காப்புப் பிரதி எடுக்கப்படும் மற்றும் மீட்டெடுக்கப்படும்.

Google கணக்கில் உள்நுழைந்திருக்கவில்லை என்றாலும், நீங்களாகவே வெறொரு சாதனத்திற்கு உங்கள் குறியீடுகளை மாற்றலாம்:
புதிய மொபைலுக்கு Authenticator குறியீடுகளை நீங்களாகவே மாற்றுவதற்குத் தேவையானவை:

  • Google Authenticator குறியீடுகள் உள்ள உங்கள் பழைய சாதனம்
  • Google Authenticator ஆப்ஸின் சமீபத்திய பதிப்பு நிறுவப்பட்டுள்ள பழைய மொபைல்
  • உங்களின் புதிய மொபைல்
  1. உங்கள் புதிய மொபைலில் Google Authenticator ஆப்ஸை நிறுவவும்.
  2. Google Authenticator ஆப்ஸில் தொடங்குக என்பதைத் தட்டி உள்நுழையவும்.
  3. ‘மெனு’ ஐகானை தட்டி அதன் பிறகு கணக்குகளை மாற்று அதன் பிறகு கணக்குகளை இறக்கு என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் பழைய மொபைலில் QR குறியீட்டை உருவாக்கவும்:
    1. Authenticator ஆப்ஸில் ‘மெனு’ ஐகானை தட்டி அதன் பிறகு கணக்குகளை மாற்று அதன் பிறகு கணக்குகளை ஏற்றுதல் என்பதைத் தட்டவும்.
    2. உங்கள் புதிய மொபைலுக்கு மாற்ற விரும்பும் கணக்குகளைத் தேர்ந்தெடுக்கவும்.
    3. அடுத்து என்பதைத் தட்டவும்.
      • ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை மாற்றுகிறீர்கள் எனில் ஒன்றுக்கு மேற்பட்ட QR குறியீடுகளை உங்கள் பழைய மொபைல் உருவாக்கலாம்.
  5. புதிய மொபைலில் QR குறியீட்டை ஸ்கேன் செய்க என்பதைத் தட்டவும்.

QR குறியீடுகளை ஸ்கேன் செய்ததும், உங்கள் Authenticator கணக்குகள் மாற்றப்பட்டன என்பதற்கான உறுதிப்படுத்தல் அறிவிப்பைப் பெறுவீர்கள்.

உதவிக்குறிப்பு: உங்கள் கேமராவால் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய முடியவில்லை எனில் அதில் அதிகப்படியான விவரங்கள் இருக்கக்கூடும். குறைவான கணக்குகளுடன் மீண்டும் ஏற்ற முயலவும்.

பல கணக்குகளில் Authenticator ஆப்ஸைப் பயன்படுத்துதல்

பல கணக்குகளுக்கு இருபடிச் சரிபார்ப்பை அமைத்தல்

ஒரே மொபைல் சாதனத்தில் இருந்து பல கணக்குகளுக்கு Authenticator ஆப்ஸால் குறியீடுகளை வழங்க முடியும். ஒவ்வொரு Google கணக்கிற்கும் வெவ்வேறு ரகசியக் குறியீடு இருக்கும்.

கூடுதல் கணக்குகளை அமைக்க:

தனிப்பட்ட திரையை இயக்குதல்

கூடுதல் பாதுகாப்பிற்காக, Google Authenticator ஆப்ஸில் தனிப்பட்ட திரையை இயக்கலாம். ஆப்ஸைப் பயன்படுத்த அனுமதி வழங்கும் முன்பு பயோமெட்ரிக்ஸ் முறையில் (FaceID அல்லது TouchID) இதை அன்லாக் செய்ய வேண்டியிருக்கும்.

தனிப்பட்ட திரையை இயக்க:

  • Authenticator ஆப்ஸில் ‘மெனு’ ஐகானை தட்டி அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு தனிப்பட்ட திரை என்பதைத் தட்டவும்.
  • நிலைமாற்றியை இயக்கவும்.
iPhone & iPad Android
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11603106530133602691
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false