இருபடிச் சரிபார்ப்பை முடக்குதல்

உள்நுழைவதற்குக் கடவுச்சொல்லும் சரிபார்ப்புக் குறியீடும் தேவைப்பட்டால் உங்கள் கணக்கு கூடுதல் பாதுகாப்புடன் உள்ளது என அர்த்தம். இந்தக் கூடுதல் பாதுகாப்பை அகற்றினால், நீங்கள் உள்நுழையும்போது கடவுச்சொல் மட்டுமே கேட்கப்படும். இதனால் உங்கள் கணக்கில் பிறர் எளிதில் உள்நுழையக்கூடும்.

  1. உங்கள் Google கணக்கைத் திறக்கவும்.
  2. "பாதுகாப்பு" பிரிவில் இருபடிச் சரிபார்ப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  3. முடக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. இருபடிச் சரிபார்ப்பு முறையை முடக்க விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த பாப்-அப் சாளரம் ஒன்று காட்டப்படும். முடக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இந்தக் கணக்கில் உள்நுழைவதற்கு நீங்கள் சேமித்துள்ள அனைத்து மாற்றுக் குறியீடுகளையும் அழிக்கவும்.

நீங்கள் பயன்படுத்தாத ஆப்ஸ் கடவுச்சொற்களை அகற்றுதல்

உங்கள் Google கணக்கை அணுகுவதற்கு ஆப்ஸை அனுமதிக்க நீங்கள் ஆப்ஸ் கடவுச்சொற்களைப் பயன்படுத்தியிருந்தால் இருபடிச் சரிபார்ப்பை முடக்கும்போது பிழைகள் காட்டப்படலாம். இப்படி நிகழ்ந்தால் உங்கள் Google கணக்கின் கடவுச்சொல்லை மீண்டும் டைப் செய்யவும்.

ஆப்ஸ் கடவுச்சொற்களை அகற்றுமாறு உங்களுக்குப் பரிந்துரைக்கிறோம்:

  1. உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
  2. "பாதுகாப்பு" பிரிவில் நீங்கள் Google இல் உள்நுழைவது எப்படி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. ஆப்ஸ் கடவுச்சொற்கள் என்பதைத் தேர்வுசெய்யவும். நீங்கள் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  4. ஆப்ஸ் அல்லது சாதனம் என்பதற்கு அடுத்துள்ள, அகற்று அகற்றுவதற்கான ஐகான் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

ஆப்ஸிலோ சாதனத்திலோ நீங்கள் அடுத்த முறை உள்நுழையும்போது உங்கள் Google கணக்கின் பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் டைப் செய்யுமாறு உங்களிடம் கேட்கப்படும். ஆப்ஸ் கடவுச்சொல் அகற்றப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள ஆப்ஸ் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளக்கூடும் என்பதால் இவற்றை ஆப்ஸ் உடனடியாகக் கேட்காமல் போகலாம்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4513379106233013788
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false