Google எப்படி உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதோடு அதற்கான கட்டுப்பாடுகளையும் உங்களிடமே வழங்குகிறது?

ஆன்லைனில் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது உங்கள் தகவலைப் பாதுகாப்பதையும் தனியுரிமைக்கு மதிப்பளிப்பதையும் குறிக்கும். எனவேதான் நாங்கள் உருவாக்கும் ஒவ்வொரு தயாரிப்பிலும் உங்கள் தகவலைப் பாதுகாப்பாக வைத்திருப்பதையும் அதைப் பொறுப்புடன் கையாளுவதையும் உங்களிடம் முழுக் கட்டுப்பாட்டை வழங்குவதையும் குறித்து கவனம் செலுத்துகின்றோம். இணையத்தில் உலாவுவது, இன்பாக்ஸை நிர்வகிப்பது, வழிகளைப் பெறுவது என Google தயாரிப்புகளின் மூலம் நீங்கள் என்ன செய்தாலும் அவற்றைப் பாதுகாப்பானதாக்க ஒவ்வொரு நாளும் எங்கள் குழுக்கள் வேலை செய்கின்றன.
உங்கள் Google கணக்கில் இருந்து எப்போது வேண்டுமானாலும் உங்கள் தரவுத் தனியுரிமை அமைப்புகளை நீங்கள் கட்டுப்படுத்தலாம். தரவுத் தனியுரிமைக் கருவிகள் மற்றும் அமைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள எங்கள் பாதுகாப்பு மையத்தைப் பார்வையிடவும்.

Google தயாரிப்புகள் & சேவைகளை மேலும் பயனுள்ளதாக்கத் தரவைப் பயன்படுத்துதல்

மேலும் பயனுள்ள தயாரிப்புகளையும் சேவைகளையும் பெற செயல்பாட்டுத் தரவு உதவுகிறது

Google தயாரிப்புகளில் வேகமான தேடல், தானியங்குப் பரிந்துரைகள் போன்ற பயனுள்ள மற்றும் பிரத்தியேக அனுபவங்களை வழங்க உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள செயல்பாட்டுத் தரவு பயன்படுகிறது. எந்த நேரத்திலும் நீங்கள், உங்கள் கணக்கில் எந்தெந்தச் செயல்பாடுகள் சேமிக்கப்பட வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தலாம், தரவைப் பதிவிறக்கலாம், செயல்பாட்டை நீக்கலாம்.
பின்வருபவற்றுக்கும் உங்கள் தரவு எங்களுக்கு உதவுகிறது:
  • எதிர்பார்த்தபடி எங்கள் சேவைகள் வேலை செய்வதை உறுதிசெய்தல்.
  • தடங்கல்களைக் கண்காணித்தல் மற்றும் நீங்கள் எங்களிடம் தெரிவிக்கும் சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துதல்.
  • எங்கள் சேவைகளை மேம்படுத்துதல். உதாரணமாக, எந்தெந்தத் தேடல் சொற்கள் அடிக்கடி எழுத்துப் பிழையுடன் டைப் செய்யப்படுகின்றன என்பதை அறிந்துகொள்வது எங்கள் சேவைகள் முழுவதும் பயன்படுத்தப்படும் எழுத்துப் பிழைச் சரிபார்ப்பு அம்சங்களை மேம்படுத்த உதவுகிறது.

Google உங்கள் தனிப்பட்ட தகவலை விற்பதில்லை

உங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் யாருக்கும் விற்பதில்லை. கட்டணமில்லாமல் எங்கள் சேவைகளை உங்களுக்கு வழங்குவது விளம்பரங்களால் சாத்தியமாகிறது. மேலும், எங்களுடன் கூட்டாளராக உள்ள தளங்களும் ஆப்ஸும் தங்களின் உள்ளடக்கத்திற்கான நிதியைப் பெறவும் விளம்பரங்கள் உதவுகின்றன. உங்கள் தனிப்பட்ட தகவல்கள் விற்பனைக்கானவை அல்ல. உங்களுக்கு விளம்பரங்களைக் காட்டுவதற்கான செயல்பாட்டின் ஒவ்வொரு படியிலும் உங்கள் தரவைத் தனிப்பட்டதாகவே வைத்திருக்கிறோம். விளம்பரங்கள் எப்படி வேலை செய்கின்றன என்பது குறித்து மேலும் அறிக.

உங்கள் தனியுரிமை அமைப்புகளை எப்படிக் கட்டுப்படுத்துவது?

பயன்படுத்த எளிதான அமைப்புகளின் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களின் கட்டுப்பாட்டை உங்கள் வசமே வைத்திருங்கள்
முக்கியமான தகவல்கள், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தையும் உங்கள் Google கணக்கிலேயே பார்க்கலாம். நாங்கள் உருவாக்கியுள்ள டாஷ்போர்டு, எனது செயல்பாடு போன்ற கருவிகளின் மூலம் உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள தரவை எளிதாகப் பார்க்கலாம். மேலும், செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் போன்ற ஆற்றல்மிக்க தனியுரிமை அமைப்புகளின் மூலம் உங்கள் Google கணக்கில் எந்தெந்தச் செயல்பாட்டுத் தரவு சேமிக்கப்படலாம் என்பதை நீங்களே தேர்வுசெய்யலாம்.
உங்களுக்கு ஏற்ற தனியுரிமை அமைப்புகளைத் தேர்வுசெய்வதற்கான உதவியைப் பெற தனியுரிமைச் சரிபார்ப்புக்குச் செல்லவும்.
பிரத்தியேகப் பரிந்துரைகள் மூலம் உங்கள் கணக்கை மேலும் பாதுகாப்பாக வைத்திடுங்கள்
உங்கள் Google கணக்கின் பாதுகாப்பு நிலையைச் சரிபார்ப்பது, கணக்கின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பிரத்தியேக உதவிக் குறிப்புகளைப் பெறுவது ஆகியவற்றைப் பாதுகாப்புச் சரிபார்ப்பு எளிதாக்குகிறது.
அத்துடன் இருபடிச் சரிபார்ப்பின் மூலம் உங்கள் கணக்கிற்குக் கூடுதல் பாதுகாப்பு அடுக்கையோ மேம்பட்ட பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் Googleளின் மிக வலிமையான கணக்குப் பாதுகாப்பையோ நீங்கள் சேர்க்கலாம்.
உங்கள் கணக்கை மேலும் பாதுகாப்பாக மாற்றுவது எப்படி என்பதைப் பற்றி மேலும் அறிக.
விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க எந்தத் தரவு மற்றும் செயல்பாடு பயன்படுத்தப்படலாம் என்பதைக் கட்டுப்படுத்துங்கள்
Google ஆப்ஸை நீங்கள் பயன்படுத்தும்போது, விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க எந்தத் தரவு மற்றும் செயல்பாடு பயன்படுத்தப்படலாம் என்பதைக் கட்டுப்படுத்தலாம் அல்லது ஒட்டுமொத்தமாக விளம்பரப் பிரத்தியேகமாக்கலை முடக்கலாம். விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்கப் பயன்படுத்தப்படும் தரவை விளம்பர அமைப்புகளின் மூலமே எளிதாகக் கட்டுப்படுத்தும் வகையில் அமைத்துள்ளோம். விளம்பரங்களைக் காட்டுவதற்காக எங்களுடன் இணைந்து பணியாற்றும் பிற விளம்பரதாரர்கள் உடனான உங்கள் செயல்பாடு மற்றும் உரையாடல்களின் அடிப்படையில் நீங்கள் விரும்பக்கூடும் என நாங்கள் கணிப்பவையும் Google கணக்கில் நீங்கள் சேர்க்கும் தகவல்களும் இந்தத் தரவில் அடங்கும்.
Google கணக்கில் உள்நுழைந்திருக்கும்போது உங்கள் விளம்பர அமைப்புகளில், விளம்பரங்கள் பிரத்தியேகமாக்கப்படும் விதத்தை நிர்வகிக்கலாம் அல்லது விளம்பரப் பிரத்தியேகமாக்கலை ஒட்டுமொத்தமாக முடக்கலாம்.
iOS 14 புதுப்பிப்பு வந்தது முதல், iOS சாதனங்களுக்கான Appleளின் ஆப்ஸ் கண்காணிப்பு வெளிப்படைத்தன்மைக் கொள்கைக்கு இணங்க, பிரத்தியேக விளம்பரப்படுத்தல் மற்றும் விளம்பரம் தொடர்பான அளவீட்டிற்காக விளம்பர அடையாளங்காட்டி (IDFA) அல்லது பிற தகவல்களை Google இனி பயன்படுத்தாது.
Google Ads மற்றும் தரவைப் பற்றி மேலும் அறிய எங்கள் பாதுகாப்பு மையத்திற்குச் செல்லவும்.
இதுவரை தேடியவை பற்றிய தரவைக் கட்டுப்படுத்துதல்
உங்கள் அமைப்புகளைப் பொறுத்து, நீங்கள் தேடிய சொற்கள், பயன்படுத்திய இணைப்புகள் போன்ற தரவு உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படலாம். உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்தத் தரவு உதவுகிறது. உதாரணமாக, Searchசில் நீங்கள் விட்ட இடத்தில் இருந்தே தொடர உங்கள் சமீபத்திய செயல்பாடு உதவுகிறது. நீங்கள் டைப் செய்வதற்கு ஏற்ப தேடல் குறிப்புகளையும் Googleளால் கணிக்க முடியும். மேலும், நீங்கள் டைப் செய்யத் தொடங்குவதற்கு முன்னரே சமீபத்திய தேடல்களுக்கான விரைவு அணுகலை வழங்கவும் முடியும்.
Search அமைப்புகளில், இதுவரை தேடியவற்றைப் பார்க்கலாம், அவற்றை உங்கள் Google கணக்கில் இருந்து நீக்கலாம், தொடர்புடைய தனியுரிமைக் கட்டுப்பாடுகளை விரைவாக அணுகலாம், Search எப்படி வேலை செய்கிறது என்பதைக் குறித்து எனது Search தரவு என்பதில் மேலும் தெரிந்துகொள்ளலாம். இதுவரை தேடியவை 3, 18 அல்லது 36 மாதங்களுக்குப் பிறகு தானாகவும் தொடர்ச்சியாகவும் நீக்கப்படும் வகையில் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டில் அமைக்கலாம். நீங்கள் கணக்கைப் பயன்படுத்தும் விதத்தை மேலும் பிரத்தியேகமாக்க, Google சேவைகள் முழுவதுமான உங்கள் செயல்பாடுகள் குறித்த தரவை ‘இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு’ சேமிக்கிறது. இதில் இருப்பிடம் போன்ற தொடர்புடைய தகவல்கள் அடங்கும்.
எனது செயல்பாடுகள் என்பதில் இருந்து உங்கள் செயல்பாடுகளை நீக்கினாலும் அவை உலாவியில் சேமிக்கப்பட்டிருக்கலாம். உலாவல் செயல்பாட்டை எப்படி நீக்குவது என அறிக.
'இதுவரை சென்ற இடங்கள்' அமைப்பைக் கட்டுப்படுத்துதல்
‘இதுவரை சென்ற இடங்கள்’ என்பது Google கணக்கு சார்ந்த அமைப்பாகும். நீங்கள் ஒவ்வொரு மொபைல் சாதனத்துடனும் செல்லும் இடங்கள், பயன்படுத்தும் வழிகள், மேற்கொள்ளும் பயணங்கள் ஆகியவற்றை நினைவுகூர உதவும் வகையில் ஒரு தனிப்பட்ட வரைபடமான ‘காலப்பதிவை’ இது உருவாக்கும். இதற்கு உங்கள் மொபைல் சாதனத்தில் கீழே உள்ளவற்றைச் செய்திருக்க வேண்டும்:
  • உங்கள் Google கணக்கில் உள்நுழைந்திருப்பது.
  • 'இதுவரை சென்ற இடங்கள்' இயக்கப்பட்டிருப்பது.
  • 'இருப்பிட அறிக்கையிடல்' இயக்கப்பட்டிருப்பது.
இதுவரை சென்ற இடங்களை எப்படி நீக்குவது என்பதைப் பற்றி மேலும் அறிக. 3, 18 அல்லது 36 மாதங்களுக்கும் முன்பு நீங்கள் சென்ற இடங்களைத் தானாக நீக்கும்படியும் தேர்வுசெய்யலாம்.
உங்கள் ஆப்ஸில் பிற இருப்பிடத் தரவைக் கட்டுப்படுத்துதல்
உங்கள் சாதனத்தின் இருப்பிட அமைப்பு இயக்கப்பட்டு, ஆப்ஸ் மற்றும் உலாவி அமைப்புகள் அனுமதித்தால் மொபைல்களால் ஆப்ஸிற்கும் இணையதளங்களுக்கும் இருப்பிடத் தகவலை அனுப்ப முடியும். உங்கள் சாதனத்தின் இருப்பிட அமைப்பின் மூலம் Google உட்பட எந்தவொரு ஆப்ஸ் அல்லது இணையதளமும் இருப்பிடத் தகவலைப் பெறலாமா என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். கூடுதலாக, சில Google ஆப்ஸ் உங்கள் இருப்பிடத்தைக் கணிக்க உங்கள் புவியியலுடன் தோராயமாகத் தொடர்புடைய IP முகவரிகளைப் பயன்படுத்துகின்றன. அத்துடன் உங்கள் இணைய சேவை வழங்குநரால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட IP முகவரியிலிருந்து உங்கள் பொதுவான பகுதியைப் பற்றிய தகவலைச் சில Google ஆப்ஸ் பெறலாம்.
முக்கியம்: Google உட்பட நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸ் அல்லது பார்வையிடும் இணையதளங்கள் உங்கள் சாதனத்தின் IP முகவரிக்கான அணுகலைக் கொண்டிருக்கலாம். அதாவது, நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் பார்வையிடும் இணையதளங்கள் அனைத்தும் பொதுவாகவே உங்கள் இருப்பிடம் குறித்த சில தகவல்களைப் பெற முடியும். இவற்றை நீங்கள் VPN மூலம் தடுக்கலாம்.
உங்கள் செயல்பாட்டை நீக்குதல்
நேரடியாகவோ தானாகவோ உங்கள் செயல்பாட்டை எப்படி நீக்குவது என்பதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் அல்லது கீழுள்ள படிகளைப் பின்பற்றவும்.
முக்கியம்: ஆவணங்கள், மின்னஞ்சல்கள், படங்கள் போன்ற உள்ளடக்கமோ ஃபைல்களோ 'எனது செயல்பாடுகள்' பக்கத்தில் சேமிக்கப்படாது. Drive, Gmail, Photos போன்ற தயாரிப்புகளில் உள்ள உள்ளடக்கத்தையோ ஃபைல்களையோ அந்தந்தத் தயாரிப்புகளிலேயே நேரடியாக நிர்வகிக்கலாம்.

நேரடியாகச் செயல்பாட்டை நீக்குதல்

  1. myactivity.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. கீழே ஸ்க்ரோல் செய்து உங்கள் செயல்பாட்டுக்குச் செல்லவும்.
  3. நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. "செயல்பாட்டை நீக்கு" என்பதற்குக் கீழ், நேர வரம்பைத் தேர்ந்தெடுக்கவும். அனைத்துச் செயல்பாடுகளையும் நீக்க இதுவரை அனைத்தும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. எந்தெந்தச் சேவைகளில் இருந்து செயல்பாட்டை நீக்க வேண்டுமென்பதைத் தேர்வுசெய்யவும்.
  6. அடுத்து and then நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

தானாகச் செயல்பாட்டை நீக்குதல்

  1. myactivity.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. “எனது Google செயல்பாடு” என்பதற்குக் கீழ், ஒரு செயல்பாட்டுக் கட்டுப்பாட்டைத் தேர்ந்தெடுக்கவும்:
    • இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு
    • இதுவரை சென்ற இடங்கள்
    • YouTube செயல்பாடுகள்
  3. தானாக நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. உங்கள் செயல்பாட்டை எவ்வளவு காலம் வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து and then அடுத்து and then உறுதிப்படுத்து பட்டனைத் தேர்ந்தெடுத்து நீங்கள் தேர்வுசெய்ததைச் சேமிக்கவும்.
சில செயல்பாடுகள் நீங்கள் தேர்வுசெய்த கால வரம்புக்கு முன்பாகவே காலாவதியாகிவிடக்கூடும்.

உலாவல் செயல்பாட்டை நீக்குதல்

‘எனது செயல்பாடுகள்’ என்பதில் இருந்து உங்கள் செயல்பாடுகளை நீக்கினாலும் அவை உலாவியில் சேமிக்கப்பட்டிருக்கலாம்.

பிற செயல்பாடுகளை நீக்குதல்

  1. myactivity.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. உங்கள் செயல்பாடுகளுக்கு மேலுள்ள தேடல் பட்டியில், மூன்று புள்ளி மெனுவை தட்டி and then பிற Google செயல்பாடுகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. இங்கே இவற்றைச் செய்யலாம்:
    • குறிப்பிட்ட செயல்பாடுகளை நீக்குதல்: செயல்பாட்டுக்குக் கீழே, நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • செயல்பாட்டை நீக்குவதற்குச் சரியான இடத்திற்குச் செல்லுதல்: செயல்பாட்டிற்குக் கீழே செல், காட்டு அல்லது நிர்வகியுங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
Google கணக்கின் செயல்பாடுகளையும் தரவையும் நீக்குவது குறித்த கூடுதல் தகவல்களுக்கு எங்கள் தனியுரிமை உதவி மையத்திற்குச் செல்லவும்.
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13428812907166646732
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false