அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Googleளில் நிகழ்வுகளைத் தேடுதல்

உங்கள் மொபைல் சாதனத்திலோ கம்ப்யூட்டரிலோ google.comமில் நிகழ்ச்சிகளைக் கண்டறியலாம். உங்களுக்கு ஆர்வமானதாகத் தோன்றும் நிகழ்ச்சியைப் பற்றி மேலும் அறியவோ, அங்கு செல்வதற்கான வழிகளைப் பெறவோ, டிக்கெட்கள் எங்கு கிடைக்கும் என்பதைக் கண்டறியவோ அதைத் தேர்வுசெய்யவும்.

கவனத்திற்கு: இந்த அம்சம் அனைத்து மொழிகளில் அல்லது நாடுகளில் கிடைக்காது. 
தொடங்குவதற்கு: எனக்கு அருகிலுள்ள நிகழ்ச்சிகள் அல்லது குடும்பத்திற்கேற்ற நிகழ்ச்சிகள் என்பன போன்ற தேடல்களை முயலவும்.

இருப்பிடத்தின் அடிப்படையில் தேடுதல்

  • உங்களுக்கு அருகிலுள்ள நிகழ்ச்சிகளைக் கண்டறிய: இருப்பிடத்தைச் சேர்க்காமல் நிகழ்ச்சியைத் தேடவும். உதாரணமாக நிகழ்ச்சிகள் அல்லது எனக்கு அருகிலுள்ள நிகழ்ச்சிகள் எனத் தேடவும்.
  • வேறு இடங்களின் நிகழ்ச்சிகளைக் கண்டறிய: உங்கள் தேடலில் இருப்பிடத்தைச் சேர்க்கவும். உதாரணமாக சிகாகோவில் நிகழும் இசை நிகழ்ச்சிகள் என உள்ளிடவும்.

நிகழ்ச்சிப் பரிந்துரைகளை உலாவுதல்

 நீங்கள் Google கணக்கில் உள்நுழையவில்லை என்றால், பிரபலமான நிகழ்ச்சிகளையோ உங்களுக்கு அருகிலுள்ள நிகழ்ச்சிகளையோ மட்டுமே பார்க்க முடியும்.

உங்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட கூடுதல் நிகழ்ச்சிகளைக் கண்டறிய: 

  1. google.comமிற்குச் சென்று நிகழ்ச்சியைத் தேடவும்.
  2. கூடுதல் நிகழ்ச்சிகளைத் தேடு அதன் பிறகு உங்களுக்கானவை என்பதைத் தட்டவும்.

நீங்கள் கலந்து கொள்வதற்கு முன் நிகழ்ச்சியின் விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் நிகழ்ச்சியின் பட்டியலைப் பார்க்கும்போது இருந்ததற்கும் அவை நிகழும்போது இருப்பவற்றிற்கும் இடையே திட்டங்கள் மாறக்கூடும். நிறம், மதம், உடல்நலம் அல்லது பிற பாதுகாக்கப்பட்ட குழுக்கள் அல்லது தலைப்புகள் ஆகியவற்றை Google யூகிக்காது. பரிந்துரைகளில் இந்தத் தலைப்புகள் பயன்படுத்தப்படாது.

நிகழ்ச்சியை சேமித்தல்

  1. google.comமிற்குச் சென்று நிகழ்ச்சியைத் தேடவும்.
  2. நீங்கள் சேமிக்க விரும்பும் நிகழ்ச்சியைக் கண்டறியவும்.
  3. நிகழ்ச்சிப் பட்டியலில், சேமி Add to என்பதைத் தட்டவும்.

நீங்கள் சேமித்த நிகழ்ச்சிகளைக் கண்டறிய நிகழ்ச்சிகளைத் தேடவும். கூடுதல் நிகழ்ச்சிகளைத் தேடு அதன் பிறகு சேமிக்கப்பட்டவை என்பதைத் தட்டவும்.

Googleளில் உங்கள் நிகழ்ச்சிகளைச் சேர்த்தல்

நிகழ்ச்சிகளை நீங்கள் நடத்துகிறீர்கள் எனில் Googleளில் உங்கள் நிகழ்ச்சிகளைச் சேர்ப்பது எப்படி என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

பரிந்துரைகள் எவ்வாறு வேலை செய்கின்றன

Googleளில் பிரபலமானவை அல்லது பிரபலமடைபவை, முன்பு பிரபலமாக இருந்த நிகழ்வுகளை ஒத்திருப்பது போன்றவற்றின் அடிப்படையில் நிகழ்வுகள் குறித்த பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. Google கணக்கில் உள்நுழைந்து தனிப்பட்ட முடிவுகள் அம்சத்தை இயக்கியிருந்தால் Google தயாரிப்புகளில் நீங்கள் மேற்கொண்ட செயல்பாடுகளின் அடிப்படையிலும் Google பரிந்துரைகளை வழங்கும். இவை நீங்கள் விரும்பக்கூடிய நிகழ்வுகள் என Google கருதுபவையாகும், ஆனால் உங்களுக்கு எது ஏற்றது என்பதை நீங்கள்தான் தேர்வுசெய்ய வேண்டும். எனது Search தரவு என்பதில் தனிப்பட்ட முடிவுகள் அம்சத்தை முடக்கலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
424902472050546827
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false