Google Drive சேமிப்பிடத்தில் ஃபைல்களை நிர்வகித்தல்

Google Drive, Gmail, Google Photos ஆகிய அனைத்திலும் பயன்படுத்தும் வகையில் உங்கள் சேமிப்பகம் பகிரப்பட்டுள்ளது. உங்கள் கணக்கின் சேமிப்பக வரம்பை அடைந்துவிட்டால் நீங்கள் Driveவில் ஃபைல்களைப் பதிவேற்றவோ உருவாக்கவோ முடியாது. Google சேமிப்பகக் கொள்கைகள் குறித்து மேலும் அறிக.

Google Drive சேமிப்பகத்தில் உள்ள ஃபைல்களை எப்படி நிர்வகிப்பது என்று தெரிந்துகொள்ள:

உங்களிடம் எவ்வளவு சேமிப்பிடம் உள்ளது என்று பாருங்கள்

உங்களிடம் மீதமுள்ள சேமிப்பிட அளவைத் தெரிந்துகொள்ள, கம்ப்யூட்டரில் google.com/settings/storage தளத்திற்குச் செல்லவும்.

திட்டத்தைப் பொறுத்து சேமிப்பகக் கொள்கைகள் எப்படி மாறுபடுகின்றன என்று தெரிந்துகொள்ளுங்கள்

திட்டத்தைப் பொறுத்து சேமிப்பகக் கொள்கைகள் மாறுபடும்:

  • உங்களின் கணக்கு, கட்டணம் இல்லாத 15 ஜி.பை. சேமிப்பகம் கொண்ட தனிப்பட்ட கணக்காகும்: Drive, Gmail, Photos ஆகிய அனைத்திலும் பயன்படுத்தும் வகையில் இந்தச் சேமிப்பகம் பகிரப்பட்டுள்ளது.
  • Google கணக்கில் நீங்கள் உள்நுழையவில்லை: எந்தத் திட்டத்தில் இருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உங்கள் Google கணக்கில் உள்நுழைந்து இந்தக் கட்டுரையை ரெஃப்ரெஷ் செய்யவும்.
Google Workspace சேமிப்பகம்

Google Drive, Gmail, Google Photos ஆகிய அனைத்திலும் பயன்படுத்தும் வகையில் Google Workspace சேமிப்பகம் பகிரப்பட்டுள்ளது. சேமிப்பக உபயோகம் எப்படி கணக்கிடப்படுகிறது என அறிக.

Google Workspace பதிப்பைப் பொறுத்து ஒவ்வொரு பயனருக்கான சேமிப்பக அளவு இருக்கும். பெரும்பாலான Google Workspace பதிப்புகளில் பகிரப்பட்ட சேமிப்பகம் உள்ளது. பகிரப்பட்ட சேமிப்பகம் பின்வரும் அட்டவணைகளில் மொத்தச் சேமிப்பகமாகவோ இறுதிப் பயனர் உரிமங்களின் எண்ணிக்கையைச் சேமிப்பக அளவால் பெருக்கி வரும் மொத்தச் சேமிப்பக அளவாகவோ குறிப்பிடப்பட்டிருக்கும்.

Google Workspace பதிப்பு அல்லது சந்தா சேமிப்பக வரம்புகள்

G Suite Basic

புதிய வாடிக்கையாளர்களுக்கு இனி கிடைக்காது

ஒவ்வொரு இறுதிப் பயனருக்கும் 30 ஜி.பை. கிடைக்கும்

G Suite Business

G Suite Business - காப்பிடப்பட்ட பயனர்கள்

புதிய வாடிக்கையாளர்களுக்கு இனி கிடைக்காது

வரம்பற்ற சேமிப்பகம்

ஒவ்வொரு காப்பிடப்பட்ட பயனருக்கும் 1 டெ.பை. கிடைக்கும்

Google Workspace Business Starter காப்பிடப்பட்ட பயனர்கள் உட்பட இறுதிப் பயனர்களின் எண்ணிக்கையை 30 ஜி.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம்
Google Workspace Business Standard காப்பிடப்பட்ட பயனர்கள் உட்பட இறுதிப் பயனர்களின் எண்ணிக்கையை 2 டெ.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம்
Google Workspace Business Plus காப்பிடப்பட்ட பயனர்கள் உட்பட இறுதிப் பயனர்களின் எண்ணிக்கையை 5 டெ.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம்
Google Workspace Enterprise Starter இறுதிப் பயனர்களின் எண்ணிக்கையை 1 டெ.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம்

Google Workspace Enterprise Standard

Google Workspace Enterprise Plus

காப்பிடப்பட்ட பயனர்கள் உட்பட இறுதிப் பயனர்களின் எண்ணிக்கையை 5 டெ.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம்

5 அல்லது அதற்கு மேற்பட்ட இறுதிப் பயனர்களைக் கொண்ட வாடிக்கையாளர்கள் Google Workspace உதவிக் குழுவுக்கு வைக்கும் நியாயமான கோரிக்கையின் அடிப்படையில் Googleளின் விருப்புரிமையின்படி கூடுதல் சேமிப்பகம் கிடைக்கக்கூடும்.

Google Workspace for Education

Google Workspace பதிப்பு அல்லது சந்தா சேமிப்பக வரம்புகள்

Google Workspace for Education Fundamentals

Google Workspace for Education Standard

இறுதிப் பயனர்கள் அனைவருக்கும் மொத்தம் 100 டெ.பை. கிடைக்கும்
Google Workspace for Education Teaching and Learning Upgrade இறுதிப் பயனர் உரிமங்களின் எண்ணிக்கையைக் கூடுதலாக 100 ஜி.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம்
Google Workspace for Education Plus இறுதிப் பயனர் உரிமங்களின் எண்ணிக்கையைக் கூடுதலாக 20 ஜி.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம்

Google Workspace for Education சேமிப்பகம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு சேமிப்பகம் கிடைக்கும் நிலையையும் பயன்பாட்டையும் புரிந்துகொள்ளுதல் என்பதற்குச் செல்லவும்.

Google Workspace Essentials

Google Workspace Essentials பதிப்புகளில் Gmail இருக்காது.

Google Workspace பதிப்பு அல்லது சந்தா சேமிப்பக வரம்புகள்

Google Workspace Essentials Starter

ஒவ்வொரு இறுதிப் பயனருக்கும் 15 ஜி.பை. கிடைக்கும்

Google Workspace Essentials

புதிய வாடிக்கையாளர்களுக்கு இனி கிடைக்காது

இறுதிப் பயனரின் எண்ணிக்கையை 100 ஜி.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம், அதிகபட்சம் 2 டெ.பை. வரை
Google Workspace Enterprise Essentials இறுதிப் பயனர்களின் எண்ணிக்கையை 1 டெ.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம்
Google Workspace Enterprise Essentials Plus இறுதிப் பயனர்களின் எண்ணிக்கையை 5 டெ.பை. என்ற அளவால் பெருக்குவதால் கிடைக்கும் சேமிப்பகம்

Google Workspace Frontline

Google Workspace பதிப்பு அல்லது சந்தா சேமிப்பக வரம்புகள்

Google Workspace Frontline Starter

Google Workspace Frontline Standard

ஒவ்வொரு இறுதிப் பயனருக்கும் 5 ஜி.பை. கிடைக்கும்*

*இந்தச் சேமிப்பக வரம்பு Google Workspace Frontline பதிப்பைப் பயன்படுத்தும் இறுதிப் பயனர்கள் அனைவருக்கும் பொருந்தும் (வெவ்வேறு சேமிப்பக வரம்புகளை வழங்கும் வேறொரு Google Workspaceஸை வாடிக்கையாளர் வாங்கியிருந்தாலும் கூட).

Google Workspace for Nonprofits

Google Workspace பதிப்பு அல்லது சந்தா சேமிப்பக வரம்புகள்

Google Workspace for Nonprofits

ஒவ்வொரு இறுதிப் பயனருக்கும் 30 ஜி.பை. கிடைக்கும்
Google One சேமிப்பகம்
Drive, Gmail, Photos மற்றும் குடும்பக் கணக்குகள் முழுவதிலும் (பொருந்தக்கூடிய இடங்களில்) பயன்படுத்தும் வகையில் Google One சேமிப்பகம் பகிரப்பட்டுள்ளது. Google Workspace பதிப்பைப் பொறுத்து ஒவ்வொரு பயனருக்கான சேமிப்பக அளவு இருக்கும்.

Google One Plan

Payment

Availability

100 GB

Monthly or yearly

Everyone

200 GB

Monthly or yearly

Everyone

2 TB

Monthly or yearly

Everyone

5 TB

Monthly or yearly

Upgrade for existing members

10 TB

Monthly

Upgrade for existing members

20 TB

Monthly

Upgrade for existing members

30 TB

Monthly

Upgrade for existing members
Google One உறுப்பினர்கள் தங்கள் திட்ட அம்சங்களை அதிகபட்சம் 5 குடும்ப உறுப்பினர்கள் வரை பகிர்ந்துகொள்ளலாம்.
Google கணக்குடன் அனைவருக்கும் கட்டணம் இல்லாமல் 15 ஜி.பை. கிளவுடு சேமிப்பகம் கிடைக்கிறது. Google Oneனில் மீதமுள்ள கட்டணச் சேமிப்பகம் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பகிரப்படும். உங்கள் குடும்பத்தினருடன் எப்படிப் பகிர்வது அல்லது பகிர்வதை நிறுத்துவது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

சேமிப்பிடத்தைக் காலியாக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்

முக்கியம்: நீக்கியவை ஃபோல்டரில் உள்ள ஃபைல்கள் 30 நாட்களுக்குப் பிறகு தானாகவே நீக்கப்படும். இந்த நேர வரம்பு முடிவதற்குள் ஃபைல்களை மீட்டெடுக்கலாம். 30 நாட்களுக்குப் பிறகு ஃபைல்கள் நிரந்தரமாக நீக்கப்படும்.
Google Drive, Gmail அல்லது Google Photos ஃபைல்களை நீக்கி, சேமிப்பிடத்தைக் காலியாக்க அவற்றை நீக்கியவை ஃபோல்டருக்கு நகர்த்தவும். அதன்பிறகு நீக்கியவை ஃபோல்டரைக் காலியாக்கவும். ஒரே நேரத்தில் பல ஃபைல்கள் அல்லது ஃபோல்டர்களை நீக்கினாலோ மீட்டெடுத்தாலோ நிரந்தரமாக நீக்கினாலோ அந்த மாற்றங்கள் காட்டப்படுவதற்குச் சிறிது நேரம் ஆகக்கூடும்.

சேமிப்பிடத்தைப் பயன்படுத்துபவை குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

Google Drive
முக்கியம்: ஜூன் 1, 2021 முதல் Google Docs, Sheets, Slides, Drawings, Forms, Jamboard ஆகியவற்றில் புதிதாக உருவாக்கப்படும் ஃபைல்கள் அனைத்தும் சேமிப்பக வரம்பில் கணக்கிடப்படும். ஏற்கெனவே உள்ள ஃபைல்களில் ஜூன் 1, 2021 அன்றோ அதற்குப் பின்னரோ மாற்றங்கள் எதுவும் செய்யாவிட்டால் சேமிப்பக வரம்பில் அவை கணக்கிடப்படாது. 
  • 'எனது Driveவில்' உள்ள பெரும்பாலான ஃபைல்கள் சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும். நீங்கள் பதிவேற்றும் அல்லது ஒத்திசைக்கும் ஃபைல்களும் (PDFகள், படங்கள், வீடியோக்கள் போன்றவை) ஃபோல்டர்களும் 'எனது Driveவில்' இருக்கும். நீங்கள் உருவாக்கும் Google Docs, Sheets, Slides, Forms போன்ற ஃபைல்களும் அதில் அடங்கும்.
  • 'நீக்கியவை' ஃபோல்டரில் உள்ளவையும் சேமிப்பிடத்தைப் பயன்படுத்துகின்றன. 'நீக்கியவை' ஃபோல்டரை எப்படிக் காலியாக்குவது என்று அறிக.
  • பணி அல்லது பள்ளிக் கணக்கின் மூலம் Driveவைப் பயன்படுத்தினால், பகிர்ந்த இயக்ககத்தின் 'நீக்கியவை' ஃபோல்டரில் உள்ளவையும் நிறுவனத்தின் சேமிப்பகத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
Gmail
ஸ்பேம் மற்றும் 'நீக்கியவை' ஃபோல்டர்களில் உள்ள மின்னஞ்சல்கள், இணைப்புகள் போன்றவை சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும்.
Google Photos
  • அசல் தரத்தில் காப்புப் பிரதி எடுக்கப்பட்டுள்ள படங்களும் வீடியோக்களும் சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும்.
  • ஜூன் 1, 2021க்குப் பிறகு உயர் தரத்தில் (இப்போது ஸ்டோரேஜ் சேவர் என்று பெயரிடப்பட்டுள்ளது) அல்லது அடிப்படைத் தரத்தில் காப்புப் பிரதி எடுக்கப்பட்டுள்ள படங்களும் வீடியோக்களும். ஜூன் 1, 2021க்கு முன் உயர்தரத்திலோ அடிப்படைத் தரத்திலோ நீங்கள் காப்புப் பிரதி எடுத்த படங்களும் வீடியோக்களும் Google கணக்குச் சேமிப்பகத்தில் கணக்கிடப்படாது. Photos காப்புப் பிரதி விருப்பங்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும் பிற உள்ளடக்கம்

Gmail, Drive, Photos ஆகியவற்றில் உள்ளவை தவிர்த்து பிற ஃபைல்களும் உங்கள் Google சேமிப்பிடத்தைப் பயன்படுத்தலாம். உதாரணங்கள்: உங்கள் WhatsApp மெசேஜ்கள் மற்றும் மீடியாவின் காப்புப் பிரதிகள்.

உங்கள் WhatsApp மெசேஜ்கள் காப்புப் பிரதி எடுக்கப்படுவதை முடக்க:

  1. WhatsApp ஆப்ஸைத் திறந்து அமைப்புகளுக்குச் செல்லவும்.
  2. Drive காப்புப் பிரதிகள் என்பதை முடக்கவும்.

ஏற்கெனவே உள்ள உங்கள் WhatsApp காப்புப் பிரதிகளை இவற்றின் மூலம் நிர்வகிக்கலாம்:

  • WhatsApp ஆப்ஸ்
  • "உங்கள் Google கணக்கை நிர்வகியுங்கள்" என்பதற்குக் கீழ் உள்ள Google கணக்கு அமைப்புகள்
Google Driveவில் உள்ள சேமிப்பக வித்தியாசங்கள்

Google Drive for desktopபில் உள்ள ஆவணங்கள் drive.google.com தளத்திலுள்ள அதே ஆவணங்களை விட மாறுபட்ட அளவுள்ள சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும்.

  • ‘நீக்கியவை’ ஃபோல்டரிலுள்ள ஆவணங்கள் Google Driveவில் சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும். ஆனால் அவை உங்கள் கம்ப்யூட்டருடன் ஒத்திசைக்கப்படாது.
  • பகிரப்படும் ஆவணங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும். ஆனால் Google Drive சேமிப்பிடத்தைப் பயன்படுத்தாது.
  • ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபோல்டர்களில் உள்ள ஆவணங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலுள்ள அனைத்து ஃபோல்டர்களுடனும் ஒத்திசைக்கப்படும் என்பதால் அதிகச் சேமிப்பிடம் பயன்படுத்தப்படும்.
  • உங்கள் கம்ப்யூட்டருடன் சில ஃபோல்டர்களை மட்டும் ஒத்திசைத்தால் Google Driveவில் காட்டப்படுவதை விட உங்கள் கம்ப்யூட்டரிலுள்ள சேமிப்பிடம் குறைவாக இருக்கும்.
  • Mac அல்லது PC தேவைகள் காரணமாக உங்கள் கம்ப்யூட்டரில் காட்டப்படும் ஃபைலின் அளவு drive.google.com தளத்தில் காட்டப்படுவதைவிடச் சிறிதளவு வேறுபடக்கூடும்.

சேமிப்பிடத்தைப் பயன்படுத்தாதவை குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

Google Drive
  • "என்னுடன் பகிர்ந்தவை" பிரிவிலும் பகிர்ந்த இயக்ககங்களிலும் உள்ள ஃபைல்கள் சேமிப்பிடத்தைப் பயன்படுத்தாது. உரிமையாளரின் Google Driveவில் உள்ள சேமிப்பிடத்தை மட்டுமே இந்த ஃபைல்கள் பயன்படுத்தும்.
  • Google Sites.
  • ஜூன் 1, 2021க்கு முன்பு நீங்கள் உருவாக்கி அந்தத் தேதிக்குப் பிறகு திருத்தாத Google Docs, Sheets, Slides, Forms, Jamboard மற்றும் Drawings ஃபைல்கள்.
Google Photos
ஜுன் 1, 2021க்கு முன்பு ஸ்டோரேஜ் சேவர் தரத்தில் அல்லது அடிப்படைத் தரத்தில் காப்புப் பிரதி எடுக்கப்பட்ட படங்களும் வீடியோக்களும் அதிகச் சேமிப்பிடத்தைப் பயன்படுத்துவதில்லை.

உங்கள் சேமிப்பிடம் நிரம்பிவிட்டால் என்னவாகும் என்று தெரிந்துகொள்ளுங்கள்

முக்கியம்: 2 ஆண்டுகளாக உங்கள் கணக்கு சேமிப்பக வரம்பைத் தாண்டியிருந்தால், Gmail, Drive, Photos ஆகியவற்றில் இருந்து உங்கள் உள்ளடக்கம் நீக்கப்படலாம்.
Gmail
உங்களால் மெசேஜ்களை அனுப்பவோ பெறவோ முடியாது. உங்களுக்கு அனுப்பப்படுகிற மெசேஜ்கள் அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பப்படும்.
Google Drive
உங்களால் புதிய ஃபைல்களை ஒத்திசைக்கவோ பதிவேற்றவோ முடியாது. Google Docs, Sheets, Slides, Drawings, Forms, Jamboard ஆகியவற்றில் புதிய ஃபைல்களை உருவாக்க முடியாது. சேமிப்பகத்தைப் பயன்படுத்தும் அளவை நீங்கள் குறைக்கும் வரை பாதிக்கப்பட்ட இந்த ஃபைல்களை உங்களாலும் பிறராலும் திருத்தவோ நகலெடுக்கவோ முடியாது. உங்கள் கம்ப்யூட்டரின் Google Drive ஃபோல்டருக்கும் 'எனது Driveவிற்கும்' இடையே ஒத்திசைவு நிறுத்தப்படும்.
Google Photos

படங்களையோ வீடியோக்களையோ காப்புப் பிரதி எடுக்க முடியாது. கூடுதல் படங்களையும் வீடியோக்களையும் சேர்க்க விரும்பினால் Google சேமிப்பகத்தைக் காலியாக்குங்கள் அல்லது கூடுதல் Google சேமிப்பகத்தை வாங்குங்கள்.

சேமிப்பிடத்தைக் காலியாக்குங்கள்

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5489254296247137299
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false