Google Driveவை எவ்வாறு பயன்படுத்துவது?


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் வேண்டுமா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

Google Driveவைப் பயன்படுத்தி உங்கள் கோப்புகளைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கலாம் மற்றும் எந்தச் சாதனத்தில் இருந்தும் கோப்புகளைத் திறக்கலாம், திருத்தலாம்.

Google Driveவைப் பயன்படுத்தத் தொடங்குதல்

Driveவில் 15 ஜி.பை. சேமிப்பிடத்தைக் கட்டணம் இல்லாமல் பெறுவீர்கள். Google Driveவில் எவையெல்லாம் அதிக இடத்தைப் பயன்படுத்துகின்றன என்பது குறித்தும் கூடுதல் சேமிப்பிடத்தை எங்கு வாங்குவது என்பது குறித்தும் தெரிந்துகொள்ளுங்கள்.

படி 1: drive.google.com தளத்திற்குச் செல்லவும்

கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும். 

எனது Drive பிரிவில் இருப்பவை: 

  • நீங்கள் பதிவேற்றும் அல்லது ஒத்திசைக்கும் ஃபைல்கள் மற்றும் ஃபோல்டர்கள்
  • நீங்கள் உருவாக்கும் Google Docs, Sheets, Slides மற்றும் Forms

உங்கள் Mac அல்லது PCயில் இருந்து ஃபைல்களை எப்படிக் காப்புப் பிரதி எடுப்பது, ஒத்திசைப்பது என்பது குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

உதவிக்குறிப்பு: ‘முகப்பு’, ‘எனது Drive’ ஆகியவற்றில் ஒன்றை உங்கள் Google Driveவின் தொடக்கப் பக்கமாக நீங்கள் தேர்வுசெய்யலாம். உங்கள் தொடக்கப் பக்கத்தை மாற்ற, அமைப்புகள்  அதன் பிறகு அமைப்புகள் என்பதற்குச் செல்லவும். “தொடக்கப் பக்கம்” என்பதற்குக் கீழே உங்கள் விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுக்கவும்.

  • சமீபத்தில் திறந்தவை, பகிர்ந்தவை, திருத்தியவை ஆகியவற்றின் அடிப்படையில், பரிந்துரைக்கப்படும் ஃபைல்களும் ஃபோல்டர்களும். 
  • வகை, நபர்கள், மாற்றிய தேதி அல்லது Driveவில் எங்கு உள்ளது என்பதன் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும் ஃபைல்களை எளிதாகக் கண்டறிய வடிகட்டும் சிப்கள் உதவுகின்றன. 

இல்லையென்றால் முகப்புப் பக்கத்தில் காட்டப்படும் பேனரில் எனது Driveவிற்கு மாற்று என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  • சமீபத்தில் திறந்தவை, பகிர்ந்தவை, திருத்தியவை ஆகியவற்றின் அடிப்படையில், பரிந்துரைக்கப்படும் ஃபைல்களும் ஃபோல்டர்களும். 
  • வகை, நபர்கள், மாற்றிய தேதி அல்லது Driveவில் எங்கு உள்ளது என்பதன் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும் ஃபைல்களை எளிதாகக் கண்டறிய வடிகட்டும் சிப்கள் உதவுகின்றன. 

இல்லையென்றால் முகப்புப் பக்கத்தில் காட்டப்படும் பேனரில் எனது Driveவிற்கு மாற்று என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 2: ஃபைல்களைப் பதிவேற்றவும் அல்லது உருவாக்கவும்

உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து ஃபைல்களைப் பதிவேற்றலாம் அல்லது Google Driveவில் ஃபைல்களை உருவாக்கலாம்.

படி 3: ஃபைல்களைப் பகிர்ந்து ஒழுங்கமைக்கவும்

உங்கள் ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் பிறர் அணுக, திருத்த அல்லது அவற்றில் கருத்து தெரிவிக்க அவற்றை நீங்கள் பகிரலாம்.

உங்களுடன் பிறர் பகிர்ந்த ஃபைல்களைப் பார்க்க, "என்னுடன் பகிர்ந்தவை" பிரிவிற்குச் செல்லவும்.

Google Driveவில் இருந்து வெளியேறுதல்

  1. drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. மேலே வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைக் கிளிக் செய்யவும்.
    • படம் காட்டப்படவில்லை என்றால், கணக்கு ஐகான்   காட்டப்படலாம்.
  3. வெளியேறு என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5698774360344222016
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false