iOS பூட்டுத் திரையில் Drive விட்ஜெட்டைச் சேர்த்தல்

iPhone அல்லது iPadன் பூட்டுத் திரையில் Google Drive விட்ஜெட்டைச் சேர்ப்பதன் மூலம் ஸ்கிரீனை அன்லாக் செய்யாமலேயே Drive ஆப்ஸைத் திறக்க முடியும்.

முக்கியம்:
• இந்த அம்சம் iOS 16 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்கும் iPhone சாதனத்தில் மட்டுமே கிடைக்கும். 
• உங்கள் iOS சாதனத்தில் ஏற்கெனவே நிறுவப்பட்ட Google ஆப்ஸிற்கு மட்டுமே விட்ஜெட்களை உருவாக்க முடியும்.

பூட்டுத் திரை விட்ஜெட்டைச் சேர்த்தலும் உள்ளமைத்தலும்

முக்கியம்: கேலரியில் பூட்டுத் திரை விட்ஜெட் காட்டப்பட வேண்டுமெனில் Drive ஆப்ஸை நிறுவியிருக்க வேண்டும்.

  1. பிரத்தியேகமாக்கல் பயன்முறையைத் திறக்க, பூட்டுத் திரையை அழுத்திப் பிடித்திருக்கவும்.
  2. பிரத்தியேகமாக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
  3. பூட்டுத் திரை அதன் பிறகு விட்ஜெட்களைச் சேர் என்பதைத் தட்டவும். 
  4. Drive விட்ஜெட்டிற்குச் செல்லவும்.
  5. Drive விட்ஜெட்டைத் தட்டவும். 
  6. கடிகாரத்திற்குக் கீழே உள்ள ஷார்ட்கட் பட்டிக்கு விட்ஜெட்டை இழுக்கவும். 
  7. பட்டிக்கு Drive விட்ஜெட் வந்ததும் உள்ளமைவுகளைப் பார்க்க விட்ஜெட்டைத் தட்டவும்.
  8. நீங்கள் விரும்பும் உள்ளமைவைத் தேர்ந்தெடுத்து அதன் பிறகு முடிந்தது அதன் பிறகு வால்பேப்பர் ஜோடியாக அமை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  9. பிரத்தியேகமாக்கலை நிறைவுசெய்ய, பிரத்தியேகமாக்கல் பயன்முறையில் இருந்து வெளியே வரும்வரை பூட்டுத் திரையைத் தட்டவும்.

Drive பூட்டுத் திரை விட்ஜெட்டைப் பிரத்தியேகமாக்குதல்

  1. FaceID மூலம் பூட்டுத் திரையை அன்லாக் செய்யவும். 
  2. பிரத்தியேகமாக்கல் பயன்முறையைத் திறக்க, பூட்டுத் திரையை அழுத்திப் பிடித்திருக்கவும். 
  3. பிரத்தியேகமாக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
  4. பூட்டுத் திரை விட்ஜெட் கேலரியை மேலே இழுக்க, விட்ஜெட் பட்டியில் ஏற்கெனவே இருக்கும் Drive விட்ஜெட்டைத் தட்டவும்.
  5. உள்ளமைவுகளைப் பார்க்க விட்ஜெட்டை மீண்டும் தட்டவும்.
  6. நீங்கள் விரும்பும் உள்ளமைவைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. விட்ஜெட் கேலரியை மூட, ஐகானைக் கிளிக் செய்து அதன் பிறகு முடிந்தது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  8. பிரத்தியேகமாக்கலை நிறைவுசெய்ய, பிரத்தியேகமாக்கல் பயன்முறையில் இருந்து வெளியே வரும்வரை பூட்டுத் திரையைத் தட்டவும்.

தொடர்புடைய தகவல்கள்

Google Drive விட்ஜெட்டைச் சேர்த்தலும் பிரத்தியேகமாக்கலும்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17836892647179403120
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false