Google கணக்கின் படம், பெயர் மற்றும் பிற தகவல்களை மாற்றுதல்

Googleளைப் பயன்படுத்தும் பிறரால் உங்கள் பெயர், சுயவிவரப் படம் மற்றும் பிற அடிப்படைத் தகவல்களை அணுக முடியும். Google சேவைகளில் பிறருக்கு நீங்கள் எப்படித் தெரிய வேண்டும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

முக்கியம்: உங்கள் Google கணக்கின் பெயரையோ சுயவிவரப் படத்தையோ மாற்றினால் உங்கள் YouTube சேனலின் பெயரோ சுயவிவரப் படமோ மாறாது. மேலும் தகவலுக்கு உங்கள் சேனல் பிராண்டிங்கை நிர்வகியுங்கள் என்பதற்குச் செல்லவும்.

உங்கள் YouTube சேனலின் அடிப்படைத் தகவல் குறித்து மேலும் அறிக.

சுயவிவரப் படத்தைச் சேர்த்தல் அல்லது மாற்றுதல்

  1. Sign in to your Google Account.
  2. Under "Personal info," click Photo.
  3. Upload a photo from your computer or choose one of your Google Photos.
  4. Rotate and crop your photo as needed.
  5. At the bottom left, click Save as profile picture.

Tips:

  • You can tap and edit your profile picture in most places where your picture shows up.
  • To find past profile pictures, at the top right, click More More அதன் பிறகு Past profile pictures.

உதவிகரமான தொழில்நுட்பம் அல்லது கீபோர்டு மூலம் படத்தைச் செதுக்குதல்

ஒரு மூலையில் இருந்து படத்தைச் செதுக்குதல்

  1. செதுக்க வேண்டிய படத்தின் ஒரு மூலையைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தி படத்தைச் செதுக்கவும்.

செதுக்குவதற்கான முழுச் சதுரத்தையும் நகர்த்துதல்

  1. செதுக்குவதற்கான முழுச் சதுரத்திற்குச் செல்லவும்.
  2. செதுக்குவதற்கான சதுரத்தை நகர்த்த அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தவும்.

உங்கள் பெயரைத் திருத்துதல்

You can change your name as many times as you want.

  1. உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
  2. "தனிப்பட்ட தகவல்" என்பதன் கீழுள்ள பெயர் அதன் பிறகு திருத்து திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
உதவிக்குறிப்பு: உங்கள் பெயர் எங்கே காட்டப்படுகிறது எனப் பாருங்கள்.

 

பெயரை மாற்றிய பிறகும் பழைய பெயர் காட்டப்படும் சிக்கலைச் சரிசெய்தல்

பெயரை மாற்றிய பிறகு உங்கள் தற்காலிகச் சேமிப்பையும் குக்கீகளையும் அழிக்கவும். அவற்றை அழித்தாலும் உங்கள் பெயர் அனைத்து தயாரிப்புகளிலும் மாறும் என்பது உறுதியல்ல. நீங்கள் குறிப்பிடப்பட்டுள்ள முந்தைய Chat உரையாடல்களில் உங்களின் பழைய பெயர் காட்டப்படலாம்.

முக்கியம்: குக்கீகளை அழிக்கும்போது Google அல்லாத தளங்களில் இருந்து நீங்கள் வெளியேற்றப்படலாம்.

தனிப்பட்ட தகவலை மாற்றுதல்

உங்கள் பிறந்தநாள், பாலினம் போன்ற தனிப்பட்ட தகவலைத் திருத்தலாம். உங்கள் கணக்கில் உள்ள மின்னஞ்சல் முகவரிகள், ஃபோன் எண்கள் ஆகியவற்றையும் மாற்றலாம்.
  1. உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
  2. “தனிப்பட்ட தகவல்” என்பதன் கீழ், மாற்ற விரும்பும் தகவலைக் கிளிக் செய்யவும்.
  3. திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

கூடுதல் விவரங்கள்

பெயர்

You can change your name as many times as you want.

புனைப்பெயர்

புனைப்பெயரைச் சேர்க்கவோ திருத்தவோ அகற்றவோ 'என்னைப் பற்றி' பிரிவுக்கோ account.google.com தளத்திற்கோ செல்லவும். account.google.com தளத்தில் இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  1. தனிப்பட்ட தகவல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. உங்கள் பெயருக்கு வலதுபுறத்திலுள்ள அதன் பிறகு ஐகானைக் கிளிக் செய்யவும்.
  3. "புனைப்பெயர்" என்பதற்கு அடுத்துள்ள திருத்துவதற்கான ஐகானை Edit கிளிக் செய்யவும்.
பிறந்தநாள்

உங்கள் கணக்கில் பிறந்தநாளை ஒருமுறை சேர்த்துவிட்டால் அதை நீக்க முடியாது. இருப்பினும் நீங்கள் அதை மாற்றலாம், அது யாருக்குக் காட்டப்பட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யலாம்.

முக்கியம்: Google சேவைகளில் உங்கள் கணக்கைப் பாதுகாக்கவும் பிரத்தியேகமாக்கவும் உங்கள் பிறந்தநாளை Google பயன்படுத்தக்கூடும்.

உங்கள் பிறந்தநாளை யாரெல்லாம் பார்க்கலாம்?

Google சேவைகளைப் பயன்படுத்தும் பிறருடன் உங்கள் பிறந்தநாளைத் தானாகப் பகிர மாட்டோம். உங்கள் பிறந்தநாளை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதைக் கட்டுப்படுத்த:

  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள தனிப்பட்ட தகவல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “அடிப்படைத் தகவல்” என்பதற்குக் கீழேயுள்ள பிறந்தநாள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஏற்கெனவே வழங்காமல் இருந்தால் உங்கள் பிறந்தநாளை வழங்கவும்.
  5. “உங்கள் பிறந்தநாளை யார் பார்க்கலாம் என்பதைத் தேர்வுசெய்யவும்” என்பதன் கீழ் நீங்கள் மட்டும் அல்லது அனைவரும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் பிறந்தநாளைத் தனிப்படுத்திக் காட்டுதல்

“உங்கள் பிறந்தநாளை யார் பார்க்கலாம் என்பதைத் தேர்வுசெய்யவும்” என்பதை அனைவரும் (அல்லது எனது நிறுவனம், பொருந்தினால்) என அமைக்கும்போது, அதைத் தனிப்படுத்திக் காட்ட Googleளை நீங்கள் அனுமதிக்கலாம். உதாரணத்திற்கு, உங்கள் பிறந்தநாள் நெருங்கும்போது உங்கள் சுயவிவரப் படம் காட்டப்படும் இடங்களிலெல்லாம் Google அதை அலங்கரிக்கக்கூடும். உங்களைத் தொடர்புகொள்ளும்போதோ சில Google சேவைகளில் நீங்கள் உருவாக்கும் உள்ளடக்கத்தைப் பார்க்கும்போதோ உங்கள் பிறந்தநாளையும் அதுகுறித்த தனிப்படுத்தல்களையும் பிறர் பார்க்க முடியும்.

உங்கள் பிறந்தநாளைக் காட்ட விரும்பவில்லை எனில், “உங்கள் பிறந்தநாளை யார் பார்க்கலாம் என்பதைத் தேர்வுசெய்யவும்” என்பதன் கீழ் நீங்கள் மட்டும் என அமைக்கவும். Google அதைத் தனிப்படுத்திக் காட்டாது. சில இடங்களில் உங்கள் சுயவிவரப் படத்தை Google தொடர்ந்து அலங்கரிக்கும், ஆனால் அதை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும்.

உதவிக்குறிப்பு: உங்களின் சரியான பிறந்தநாள் நெருங்கும்போது உங்கள் சுயவிவரப்படம் தனிப்படுத்திக் காட்டப்படவில்லை எனில் உங்கள் சுயவிவரத்தில் உங்கள் பிறந்தநாள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். வேறொரு தேதியில் உங்கள் பிறந்தநாள் பிறருக்குத் தனிப்படுத்திக் காட்டப்பட்டால் Google Contactsஸில் அவர்கள் தேதியைத் தவறாகக் குறிப்பிட்டிருக்கலாம்.

உங்கள் பிறந்தநாள் தகவலை Google பயன்படுத்தும் சில வழிகள்

உங்கள் பிறந்தநாளை Google இவற்றுக்காகப் பயன்படுத்தலாம்:

பாலினம்

உங்கள் Google கணக்கின் பாலினம் பிரிவில் உங்களுக்கான சில விருப்பத்தேர்வுகள் உள்ளன. நீங்கள்:

  • உங்கள் பாலினத்தைக் குறிப்பிடலாம்
  • பாலினத்தைக் குறிப்பிட விருப்பமில்லை என்பதைத் தேர்வுசெய்யலாம்
  • பிரத்தியேகப் பாலினத்தைச் சேர்த்து Google உங்களை எப்படிக் குறிப்பிட வேண்டும் என விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யலாம்

உங்கள் பாலினத்தை யாரெல்லாம் பார்க்கலாம்?

இயல்பாக, Google சேவைகளைப் பயன்படுத்தும் பிறருடன் உங்கள் பாலினம் பகிரப்படாது. உங்கள் பாலினத்தை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதைக் கட்டுப்படுத்த உங்கள் Google கணக்கிலுள்ள என்னைப் பற்றி என்ற பிரிவுக்குச் செல்லவும்.

உங்கள் பாலினத்தை Google எப்படிப் பயன்படுத்துகிறது?

Google சேவைகளை இன்னும் பிரத்தியேகமாக்க உங்கள் பாலினத்தைப் பயன்படுத்துகிறோம். பாலினத்தைக் குறிப்பிடும்போது இவற்றைச் செய்ய எங்களுக்கு உதவுகிறீர்கள்:

  • உங்களைக் குறிப்பிடும் மெசேஜ்களையும் பிறவற்றையும் பிரத்தியேகப்படுத்துவதற்கு. உதாரணமாக, உங்கள் பாலினத்தைப் பார்க்கக்கூடியவர்களுக்கு "அவருக்கு (him) மெசேஜ் அனுப்பு", "அவருடைய (her) நட்பு வட்டங்களில்" போன்ற பரிந்துரைகள் காட்டப்படும்.
  • மிகவும் தொடர்புடைய, நீங்கள் விரும்பக்கூடிய உங்களுக்கேற்ற உள்ளடக்கத்தை (எ.கா. விளம்பரங்கள்) வழங்குவதற்கு.

நீங்கள் பாலினத்தைத் தெரிவிக்காதபட்சத்தில் உங்களைக் குறிப்பிடும்போது பாலின வேறுபாடற்ற வார்த்தைகளை (எ.கா. "அவருக்கு மெசேஜ் அனுப்பு") பயன்படுத்துவோம்.

பிற தகவல்களை மாற்றுதல்

உங்கள் கடவுச்சொல்லை மாற்றுதல்
  1. உங்கள் Google கணக்கைத் திறக்கவும். நீங்கள் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  2. "பாதுகாப்பு" பிரிவில் நீங்கள் Google இல் உள்நுழைவது எப்படி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. கடவுச்சொல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கேட்கப்படும்போது மீண்டும் உள்நுழையவும்.
  4. திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும். வலிமையான கடவுச்சொல்லை எப்படி உருவாக்குவது எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆன்லைன் பாதுகாப்பு பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறுதல்.

உங்களைப் பற்றி பிறர் எவற்றையெல்லாம் பார்க்கலாம் என்பதைக் கட்டுப்படுத்துதல்

Google சேவைகளில் உங்களைப் பற்றி பிறர் எவற்றையெல்லாம் பார்க்கலாம் என்பதைத் தேர்வுசெய்ய உங்கள் Google கணக்கிலுள்ள என்னைப் பற்றி என்ற பிரிவுக்குச் செல்லவும்.

உங்களால் எவற்றையெல்லாம் மாற்ற முடியும், அவற்றை எப்படி மாற்றலாம் எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் நேர மண்டலத்தை மாற்றுதல்

பயணிக்கும்போது தற்போதைய இருப்பிடத்தின் நேர மண்டலத்தில் இருக்கும் நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

Google Calendarரில் நேர மண்டலத்தை மாற்றுவது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய தகவல்கள்

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5063592186513823570
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false