சமீபத்தில் நீக்கப்பட்ட Google கணக்கை மீட்டெடுத்தல்

உங்கள் Google கணக்கை நீங்கள் நீக்கியிருந்தால் அதை மீட்டெடுக்கலாம். கணக்கை நீக்கி சிறிது காலம் ஆகியிருந்தால் உங்கள் கணக்கில் உள்ள தரவை உங்களால் மீட்டெடுக்க முடியாமல் போகலாம். உங்கள் கணக்கை நீங்கள் மீட்டெடுத்தால் Gmail, Google Play மற்றும் பிற Google சேவைகளில் எப்போதும் போல நீங்கள் உள்நுழையலாம்.

  1. கணக்கை மீட்டெடுக்க, படிகளைப் பின்பற்றவும்.
  2. உங்கள் கணக்கு மீட்டெடுக்கப்பட்டதும், இந்தக் கணக்கிற்கு ஏற்கெனவே நீங்கள் பயன்படுத்தாத ஒரு கடவுச்சொல்லை உருவாக்கவும். வலிமையான கடவுச்சொல்லை எப்படி உருவாக்குவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இப்போதும் உங்களால் உள்நுழைய முடியவில்லையா? மாற்று Google கணக்கை உருவாக்குவது பற்றிப் பரிசீலிக்கவும். அப்படி உருவாக்கும்போது, உங்கள் Google கணக்கில் உள்நுழைய முடியாமல் போவதைத் தவிர்க்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

குறிப்பு: செயலில் இல்லாத Google கணக்கு என்பது 2 ஆண்டு காலத்திற்குள் பயன்படுத்தப்படாமல் உள்ள கணக்காகும். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு Google சேவை எதையும் நீங்கள் பயன்படுத்தாமல் இருந்தால், செயலில் இல்லாத Google கணக்கு மட்டுமின்றி அதன் செயல்பாட்டையும் தரவையும் நீக்குவதற்கான முழு அதிகாரமும் Googleளுக்கு உள்ளது. செயலில் இல்லாத Google கணக்கிற்கான கொள்கை குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் பிள்ளையின் கணக்கை மீட்டெடுத்தல்

உங்கள் பிள்ளையின் கணக்கு நீக்கப்பட்டிருந்தால், நீங்கள் அதை மீட்டெடுக்க முயலலாம்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
411645122135711574
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false