உங்கள் சாதனங்களில் தொடர்புத் தகவலை நிர்வகித்தல்

நீங்கள் உள்நுழைந்துள்ள சாதனங்களிலிருந்து உங்கள் தொடர்புகள் குறித்த தகவலை உங்கள் Google கணக்கில் சேமிப்பது குறித்து தேர்வு செய்யலாம் (அடிக்கடி தொடர்புகொள்கிறீர்களா என்ற விவரம் உட்பட). நீங்கள் எந்தச் சாதனத்தைப் பயன்படுத்தினாலும் Google சேவைகள் முழுவதிலும் இந்தத் தொடர்புகளுடன் தொடர்புகொள்வதை எளிதாக்க இந்தத் தரவு பயன்படுத்தப்படும்.

  1. உங்கள் Google கணக்கின் பயனர்கள் & பகிர்தல் என்ற பிரிவிற்குச் செல்லவும்.
  2. "தொடர்புகள்" என்பதற்குக் கீழ் எனது சாதனங்களில் உள்ள தொடர்புத் தகவல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. எனது சாதனங்களில் உள்ள தொடர்புத் தகவலைச் சேமி என்பதை இயக்கவும் அல்லது முடக்கவும்.

கவனத்திற்கு: Google தொடர்புகள் அல்லது Android காப்புப்பிரதி போன்ற பிற Google சேவைகளில் தொடர்புத் தகவல் சேமிக்கப்படுவதை இந்த அமைப்பு பாதிக்காது. எல்லா Google சேவைகளும் இந்தத் தரவை சேமிப்பதோ பயன்படுத்துவதோ இல்லை.

உங்கள் சாதனங்களில் இருந்து தொடர்புத் தகவலை நீக்குதல்

அமைப்பை முடக்கும்போது உங்கள் Google கணக்கிலுள்ள சாதனங்களின் தொடர்புத் தகவல் நீக்கப்படும். உங்கள் சாதனங்களிலிருந்து தொடர்புகள் நீக்கப்படாது.

உங்கள் சாதனங்களின் தொடர்புத் தகவல் உங்களுக்கு உதவும் விதம்

யாரை அழைக்க வேண்டும் என்பதைத் Google தெரிந்துகொள்ள இந்தத் தரவு உதவும். உதாரணமாக உங்கள் Google அசிஸ்டண்டிடமோ ஸ்மார்ட் சாதனத்திடமோ "Hey Google, ராமுவுக்கு கால் பண்ணு" என்று சொல்லும்போது சரியாக யாரை அழைக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க இந்தத் தரவு உதவும்.

'உங்கள் சாதனங்களின் தொடர்புத் தகவல்' இயக்கப்பட்டிருப்பதற்கான காரணம்

Data saved by the Contact info from your devices setting was previously saved by the Device Information setting. உங்கள் அனுபவம் சீரானதாக இருப்பதற்கு உங்கள் 'சாதனத் தகவல்' அமைப்பு இயக்கத்தில் இருந்தால் 'உங்கள் சாதனங்களின் தொடர்புத் தகவல்' அமைப்பும் இயக்கப்பட்டிருக்கும். 'உங்கள் சாதனங்களின் தொடர்புத் தகவல்' அமைப்பை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் முடக்கலாம்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11999383215383682963
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false