உங்கள் Google கணக்கில் உள்ள முகவரிகளை நிர்வகித்தல்

உங்கள் Google கணக்கில் உள்ள வெவ்வேறு வகையான முகவரிகள் குறித்தும் அவற்றை எப்படி நிர்வகிப்பது என்றும் மேலும் தெரிந்துகொள்ளலாம்.

வீடு மற்றும் பணியிட முகவரிகள்

Google தயாரிப்புகள் அனைத்திலும் உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க, உங்கள் Google கணக்கையும் பணியிட முகவரிகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

மிகவும் தொடர்புடைய முடிவுகளையும் வழிகளையும் இன்னும் விரைவாகப் பெற, உங்கள் Google கணக்கில் வீடு மற்றும் பணியிட முகவரியைச் சேர்க்கலாம்.

Google முழுவதிலும் உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க, உங்கள் முகவரிகளைப் பயன்படுத்துகிறோம். உதாரணமாக:

  • உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள தேடல் முடிவுகளைக் காட்ட முடியும்.
  • பணியிடத்திற்கான வழிகளைக் காட்ட முடியும்.
  • பொருத்தமான விளம்பரங்களைக் காட்ட முடியும்.

உங்கள் Google கணக்கில் இருந்து எப்போது வேண்டுமானாலும் முகவரிகளை நீங்கள் நீக்கலாம்.

வீடு/பணியிட முகவரியைச் சேர்த்தல் அல்லது மாற்றுதல்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில், சாதனத்தின் அமைப்புகள் ஆப்ஸை திறக்கவும்.
  2. Google அதன் பிறகு Google கணக்கை நிர்வகியுங்கள் அதன் பிறகு தனிப்பட்ட தகவல் என்பதைத் தட்டவும்.
  3. "முகவரிகள்" என்பதன் கீழே உள்ள வீடு அல்லது பணியிடம் என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் முகவரியை டைப் செய்யவும்.
  5. சேமி என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் வீடு மற்றும் பணியிட முகவரியை உங்களால் மட்டுமே அணுக முடியும். உங்கள் Google கணக்கில் ஒரு முகவரியை எல்லோரும் பார்க்கும் வகையில் சேமிக்க வேண்டும் எனில் அதை உங்கள் சுயவிவர முகவரியாகச் சேர்க்கலாம்.

உங்கள் வீட்டு முகவரியை நிர்வகியுங்கள்

உங்கள் பணியிட முகவரியை நிர்வகியுங்கள்

வீடு அல்லது பணியிட முகவரியை அகற்றுதல்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் சாதனத்தின் அமைப்புகள் ஆப்ஸை திறக்கவும்.
  2. Google அதன் பிறகு Google கணக்கை நிர்வகியுங்கள் அதன் பிறகு தனிப்பட்ட தகவல் என்பதைத் தட்டவும்.
  3. "முகவரிகள்" என்பதன் கீழே உள்ள வீடு அல்லது பணியிடம் என்பதைத் தட்டவும்.
  4. அகற்று என்பதைத் தட்டவும்.

வீடு அல்லது பணியிடத்திற்கான வழிகளைப் பின் செய்தல்

Google Mapsஸில் உள்ள “செல்” பிரிவில், உங்களால் பின் செய்யப்பட்ட பயணங்கள் ETA மற்றும் டிராஃபிக் தகவலுடன் காட்டப்படும். உங்களுக்கு விருப்பமான பயணங்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google Maps ஆப்ஸை Maps திறக்கவும்.
  2. உங்கள் வீடு அல்லது பணியிட முகவரியைத் தேடவும்.
  3. வழிகள் Directions என்பதைத் தட்டவும்.
  4. பயண முறையைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. வீடு அல்லது பணியிடம் என்பதைத் தட்டவும்.
  6. கீழே, பின் செய் என்பதைத் தட்டவும்.

வீடு அல்லது பணியிடத்திற்கு ஓர் ஐகானைத் தேர்வுசெய்யவும்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google Maps ஆப்ஸை Maps திறக்கவும்.
  2. சேமித்தவை Save place என்பதைத் தட்டவும்.
  3. "உங்கள் பட்டியல்கள்" என்பதன் கீழுள்ள லேபிளிட்டது என்பதைத் தட்டவும்.
  4. ”வீடு” அல்லது ”பணியிடம்” என்பதற்கு அடுத்துள்ள மூன்று புள்ளி மெனுவை தட்டி அதன் பிறகு ஐகானை மாற்று என்பதைத் தட்டவும்.
  5. வீடு அல்லது பணியிடத்திற்கு ஓர் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. சேமி என்பதைத் தட்டவும்.

பிற முகவரிகள்

Google சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது, உங்கள் Google கணக்கில் சேர்க்கப்பட்டுள்ள முகவரிகளைப் பார்க்கலாம் நிர்வகிக்கலாம்.

உங்கள் Google கணக்கில் உள்ள பிற முகவரிகள் குறித்த கூடுதல் தகவல்களைக் கீழே பார்க்கலாம்.

உங்கள் Google கணக்கில் முகவரிகள் எப்படிச் சேர்க்கப்படுகின்றன?

Google சேவையின் மூலம் முகவரியைச் சேர்த்தால், அதை உங்கள் Google கணக்கில் பார்க்கலாம் நிர்வகிக்கலாம்.

முகவரிகளைப் பயன்படுத்துதல்

உங்கள் Google கணக்கில் உள்ள முகவரிகளின் மூலம்:

  • Chrome பயன்படுத்தும்போது முகவரி படிவங்களைத் தானாக நிரப்பலாம்.
  • Google Play Storeரில் பர்ச்சேஸ் செய்யலாம்.
  • Google சந்தாவிற்குப் பணம் செலுத்தலாம்.
  • ’Google Pay மூலம் வாங்குக’ பேமெண்ட் முறையைப் பயன்படுத்தலாம்.

சுயவிவர முகவரிகள்

சுயவிவர முகவரி என்பது உங்களின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சுயவிவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள முகவரியாகும். சில Google ஆப்ஸிலும் சேவைகளிலும், அந்தச் சேவையைப் பயன்படுத்தும் பிற பயனர்கள் உங்கள் சுயவிவரத்தைப் பார்க்க முடியும். Google ஆப்ஸிலும் சேவைகளிலும் உங்களைத் தொடர்புகொள்ளும்போதோ அவற்றில் நீங்கள் உருவாக்கும் உள்ளடக்கத்தைப் பார்க்கும்போதோ யார் வேண்டுமானாலும் இந்தத் தகவலைப் பார்க்க முடியும்.

உதவிக்குறிப்பு: Google சேவைகளில் சுயவிவரங்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ள, Google சேவைகளில் உங்கள் சுயவிவரங்களைப் பார்த்தல் மற்றும் நிர்வகித்தல் பக்கத்திற்குச் செல்லவும்.

பில்லிங் முகவரிகள்

பில்லிங் முகவரி என்பது உங்கள் பேமெண்ட் முறையுடன் இணைக்கப்பட்டுள்ள முகவரியாகும்.

உதவிக்குறிப்பு: உங்கள் பில்லிங் முகவரிகளை நிர்வகிக்க, உங்கள் வீடு அல்லது பில்லிங் முகவரியை மாற்றுதல் பக்கத்திற்குச் செல்லவும்.

அதிகாரப்பூர்வ முகவரிகள்

அதிகாரப்பூர்வ முகவரி என்பது உங்கள் Google பேமெண்ட் சுயவிவரத்துடன் இணைக்கப்பட்டுள்ள முகவரியாகும்.

உதவிக்குறிப்பு: உங்கள் அதிகாரப்பூர்வ முகவரிகளை நிர்வகிக்க, உங்கள் வீடு அல்லது பில்லிங் முகவரியை மாற்றுதல் பக்கத்திற்குச் செல்லவும்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13586823564391840039
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false