பிள்ளையின் கணக்கிற்கான கண்காணிப்பை மாற்றுதல்

குடும்ப நிர்வாகி தனது குடும்பக் குழுவில் இருந்து பிள்ளையின் கணக்கை வேறொரு பயனருக்கு மாற்ற முடியும்.

முக்கியம்:

  • 12 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே கணக்குகளுக்கான கண்காணிப்பை மாற்ற முடியும்.
  • கண்காணிப்பை மாற்றுவதற்கான அறிவிப்பைப் பெற 7 நாட்கள் ஆகும்.
  • அறிவிப்பைப் பெற்ற பிறகு கண்காணிப்பு மாற்றத்தை ஏற்க 7 நாட்கள் கால வரம்பு உள்ளது.

பிள்ளையின் கணக்கிற்கான கண்காணிப்பை மாற்றுதல்

  1. Google கணக்கில் நபர்களும் பகிர்தலும் பிரிவைத் திறக்கவும்.
  2. குடும்ப நிர்வாகம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பிள்ளையின் கணக்கைத் தேர்ந்தெடுத்து and then கண்காணிப்பை மாற்றத் தொடங்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. உங்கள் கணக்கை உறுதிப்படுத்த கடவுச்சொல்லை டைப் செய்யவும்.
  5. புதிய குடும்ப நிர்வாகியின் மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்தவும்.
  6. கண்காணிப்பை மாற்றத் தொடங்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

கண்காணிப்பு மாற்றத்தை ரத்துசெய்தல்

கண்காணிப்பு மாற்றத்தைக் குடும்ப நிர்வாகி ஏற்காமல் இருக்கும்பட்சத்தில் அதை முதல் வாரத்திற்குள் ரத்துசெய்யலாம்.

  1. Google கணக்கில் நபர்களும் பகிர்தலும் பிரிவைத் திறக்கவும்.
  2. குடும்ப நிர்வாகம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பிள்ளையின் கணக்கைத் தேர்ந்தெடுத்து and then கண்காணிப்பு மாற்றத்தை ரத்துசெய் என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் கணக்கை உறுதிப்படுத்த கடவுச்சொல்லை டைப் செய்யவும்.
  5. கண்காணிப்பு மாற்றத்தை ரத்துசெய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

கண்காணிப்பு மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுதல்

கண்காணிப்பு மாற்றத்தைப் புதிய குடும்ப நிர்வாகி ஏற்கும்போது புதிய குடும்பக் குழுவிற்குக் கணக்கு மாற்றப்படும். புதிய குடும்ப நிர்வாகி குடும்பக் குழுவின் உறுப்பினராக இல்லையெனில் உறுப்பினருக்கான கணக்கு ஒன்றை சிஸ்டம் புதிதாக உருவாக்கும்.

முக்கியம்: கண்காணிப்பு மாற்றத்தை நிறைவுசெய்துவிட்டால் பிள்ளை அவரது முந்தைய குடும்பக் குழுவை அணுக முடியாது.

  1. கண்காணிப்பு மாற்றம் குறித்து Google அனுப்பிய மின்னஞ்சலைத் திறக்கவும்.
  2. கண்காணிப்பை மாற்றத் தொடங்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. திரையில் காட்டப்படும் விதிமுறைகளை ஏற்கவும்.
  4. உங்கள் கணக்கை உறுதிப்படுத்த கடவுச்சொல்லை டைப் செய்யவும்.
  5. உங்கள் திரையில் காட்டப்படும் விதிமுறைகளைப் படித்துப் பார்த்து ஒப்புக்கொள்ளவும்.
உதவிக்குறிப்பு: அனுமதிக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பிரத்தியேகப்படுத்த உங்கள் பிள்ளையின் கணக்கு அமைப்புகளை நிர்வகியுங்கள்.
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7585195210646318757
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false